Home
Gadgets

அதிர வைக்கும் விலை.. 10 நாட்கள் பேட்டரி.. ஏகப்பட்ட சென்சார்.. Samsung கொண்டு வரும் ஸ்மார்ட் ரிங்..

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 (MWC 2024) நிகழ்ச்சியில் கேலக்ஸி ரிங்கை அறிமுகம் செய்தது. குறிப்பாக கேலக்ஸி ரிங் மாடலின் புரோட்டோ டைப்பை தான் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்தது

இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி ரிங் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சாம்சங் கேலக்ஸி ரிங் விலை ரூ.25,000 முதல் ரூ.42,000 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ரிங் மாடலின் சிறப்பு அம்சங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

அதிர வைக்கும் விலை.. Samsung கொண்டு வரும் ஸ்மார்ட் ரிங்..

அதாவது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் ரிங் ஆனது சாம்சங் ஹெல்த் இயங்குதளத்துடன் இணைக்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் ரிங் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் ரிங் 24 மணி நேரமும் நமது இதயத் துடிப்பு மானிட்டர் செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இதுதவிர ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு, தூங்கு முறை, நாம் செய்யும் உடற்பயிற்சி போன்ற அனைத்தையும் கண்காணிக்கும் சென்சார் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ரிங்.

சாம்சங் கேலக்ஸி ரிங் மாடலை ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு இது போன்ற ஸ்மார்ட் ரிங் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவர இருப்பதால் எதிர்காலத்தில் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு வேலை இருக்காது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் ரிங் ஆனது உலக சந்தையில் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் உலக சந்தையில் சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸமார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ55 அம்சங்கள் (Samsung Galaxy A55 specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED இன்பினிட்டி-ஒ எச்டிஆர் டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு மற்றும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

அதிர வைக்கும் விலை.. Samsung கொண்டு வரும் ஸ்மார்ட் ரிங்..

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி ஏ55 போன் விற்பனைக்கு வரும். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. ஒன் யுஐ 6.1 (One UI 6.1) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஆக்டோ-கோர் எக்ஸ்நோஸ் 1480 ( Octa Core Exynos 1480) சிப்செட் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த போனுக்கு ஏஎம்டி எக்ஸ்கிளிப்ஸ் 530 ஜிபியு (AMD Xclipse 530 GPU)) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன்.

50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 போன். மேலும் 32எம்பி செல்பி கேமரா, யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி, 25 வாட்ஸ் சார்ஜிங், 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ் என்எப்சி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 போன் வெளிவந்துள்ளது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ55 போனின் ஆரம்ப விலை 479 Euros (இந்திய மதிப்பில் ரூ.43,370)-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Smart Ring may be launched at price of Rs 25,000: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X