Home
Gadgets

இனி கோல்ட் ரிங் எதுக்கு? 7 நாட்கள் பேட்டரி.. ஹார்ட் ரேட் மானிட்டர்.. அறிமுகமானது Samsung ரிங்.. என்ன விலை?

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி ரிங் (Samsung Galaxy Ring) மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது. அதாவது சாம்சங் கேக்ஸி இசட் பிளப் 6, சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 மற்றும் சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா மாடல்களுடன் இந்த புதிய ஸ்மார்ட் ரிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் தனித்துவமான வடிவமைப்புடன் சற்று உயர்வான விலையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ரிங் அம்சங்கள் (Samsung Galaxy Ring Specifications): பயனர் அனுபவத்தை மேம்படுத்தப் பல அம்சங்கள் இதில் உள்ளன. அதன்படி 10ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் ரிங். அதேபோல் 5 முதல் 13 சைஸ் அளவுகளில் இந்த சாதனத்தை வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் ரிங் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

இனி கோல்ட் ரிங் எதுக்கு? அறிமுகமானது சாம்சங் ரிங்.. என்ன விலை?

மேலும் 3.0 கிராம் வரை எடை கொண்டது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட் ரிங். மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி ரிங் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும் என நிறுவனம் கூறுகிறது. குறிப்பாக 30 நிமிடங்களில் இதன் பேட்டரியை 40 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஒளிரும் எல்இடி லைட்களுடன் (LED Lights) கூடிய சார்ஜிங் கேஸ் இதனுடன் வருகிறது. குறிப்பாக அன்றாட ஆரோக்கியத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கேலக்ஸி ரிங். அதன்படி 24/7 ஹெல்த் மானிட்டர் வழங்குகிறது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ரிங். அதேபோல் ஆரோக்கியமான பழக்கங்களை மேம்படுத்துவதற்கும் AI அல்காரிதம் கொண்ட ஸ்லீப் பாட்டர்ன் (Sleep Pattern) சென்சார் இதில் உள்ளன.

இதுதவிர மூவ்மண்ட் ( movement), ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), சுவாச விகிதம் உள்ளிட்ட பல்வேறு சென்சார் மானிட்டர் அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் ரிங் வெளிவந்துள்ளது. மேலும் அட்வான்ஸ் சைக்கிள் டிராக்கிங் (Advanced Cycle Tracking) அம்சமும் இதில் உள்ளன.

அதேபோல் சாம்சங் கேலக்ஸி ரிங் மாடலில் உள்ள ஏஐ அம்சம் ஆனது ஹெல்த் ரிப்போர்ட் வழங்கும். அதாவது தூக்கத்தின் தரம், ஆக்டிவிட்டி லெவல், ஸ்லீபிங் ஹார்ட் ரேட் மற்றும் உடல்நலம் குறித்த அறிக்கையை இந்த ஏஐ அம்சம் வழங்கும். குறிப்பாக இதுபோன்ற அம்சங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

மேலும் இந்த புதிய சாதனத்தில் வொர்க்அவுட் மோட்கள் (Workout Modes) மற்றும் ஆட்டோமேடிக் வொர்க்அவுட் டிடெக்ட் (Automatic Workout Detection) சப்போர்ட்வருகிறது. ஒருவேளை இந்த ஸ்மார்ட் ரிங் மாடலை நீங்கள் எங்காவது மறந்து வைத்துவிட்டு வந்தால் கேலக்ஸி ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி ரிங் கண்டறிவதற்கான ஃபைண்ட் மை ரிங் அம்சமும் உள்ளது.

இனி கோல்ட் ரிங் எதுக்கு? அறிமுகமானது சாம்சங் ரிங்.. என்ன விலை?

குறிப்பாக ஸ்கின் டெம்பரேச்சர் சென்சார் (Skin Temperature Sensor), பிஎல்இ 5.4 சென்சார், பிபிஜி சென்சார் உள்ளிட்ட பல சென்சார் வசதிகள் இதில் உள்ளன. மேலும் டைட்டானியம் பிளாக் (Titanium Black), டைட்டானியம் சில்வர் (Titanium Silver) மற்றும் டைட்டானியம் கோல்டு (Titanium Gold) நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட் ரிங் மாடலை வாங்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி ரிங் விலை USD 399.99 (இந்திய மதிப்பில் ரூ.33,404)-ஆக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் இந்த சாதனத்தின் முன்பதிவு இன்று தொடங்கும். இதன் விற்பனை வரும் ஜூலை 24-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Ring with up to 7 days of battery life launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X