ஸ்மார்ட்வாட்ச் எதுக்கு? இனி எல்லாமே இந்த குட்டி ரிங் தான்.. AI.. அசத்தும் சாம்சங்..
சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், டிவி, டேப்லெட், லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவருகின்றன.
எனவே இந்நிறுவனத்தின் சாதனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 (MWC 2024) நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் தனது அட்டகாசமான கேலக்ஸி ரிங்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது இந்த கேலக்ஸி ரிங் மாடலின் புரோட்டோ டைப்பை தான் சாம்சங் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய வகை ரிங் மூலம் நமது உடல் நிலை குறித்த துல்லியமான தகவல்களைத் தர ஏஐ (AI) தொழில்நுட்பத்தையும் சாம்சங் நிறுவனம் பயன்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சாம்சங் கேலக்ஸி ரிங் (Samsung Galaxy Ring) ஆனது மூன்று வெவ்வேறு நிறங்களில் வாங்கக் கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி ரிங் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுவது இதுதான் முதல்முறை. மேலும் இந்த சாதனம் குறித்த கூடுதல் தகவல்களை சாம்சங் நிறுவனம் தற்போது அறிவிக்கவில்லை.

குறிப்பாக இந்த ஸ்மார்ட் ரிங் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்தும் அந்நிறுவனம் தகவல்கள் தெரிவிக்கவில்லை. ஆனாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் சாம்சங் கேலக்ஸி ரிங் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி ரிங் மாடலுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும்.
மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி ரிங் ஆனது சாம்சங் ஹெல்த் இயங்குதளத்துடன் இணைக்க முடியும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த ரிங் 24 மணி நேரமும் நமது இதயத் துடிப்பு மானிட்டர் செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இதுதவிர ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு, தூங்கு முறை, நாம் செய்யும் உடற்பயிற்சி போன்ற அனைத்தையும் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ரிங்.
குறிப்பாக இது போன்ற ஸ்மார்ட் ரிங் வருவதால் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு வேலை இருக்காது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏஐ தொழில்நுட்பம் குறித்தும் சில முக்கிய தகவல்களை வெளியிட்டது.

அதாவது புதிய கேலக்ஸி ஏஐ தொழில்நுட்பம் ஆனது கேலக்ஸி எஸ்23 சீரிஸ், டேப் எஸ் 9 சீரிஸ், கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5, கேலக்ஸி இசட் ஃபிளிப் 5, கேலக்ஸி எஸ்23 எஃப்இ போன்ற சாதனங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல் சாம்சங் நிறுவனத்தின் மற்ற சாதனங்களிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
அனைத்து நாடுகளிலும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை விட ஸ்மார்ட் ரிங் மாடல்களுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே பல முன்னணி நிறுவனங்கள் ஸ்மார்ட் ரிங் மாடல்களை உருவாக்கத் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications