Home
Gadgets

3 கலர், 9 சைஸ்.. ரூ.1,625 நோ காஸ்ட் EMI.. ஒருவழியாக Samsung Galaxy Ring இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை?

சாம்சங் கேலக்ஸி ரிங் (Samsung Galaxy Ring) ஒருவழியாக இந்தியாவில் அறிமுகமானது. நினைவூட்டும் வண்ணம் இது கடந்த ஜூலை மாதத்தில், பாரிஸில் நடந்த கேலக்ஸி அன்பேக்டு (Galaxy Unpacked) நிகழ்வில், இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் கேலக்ஸி இஸட் போல்டபிள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் தொடங்கிய விற்பனைக்கு பின்னர், தற்போது இந்த ஸ்மார்ட் ரிங் இந்திய சந்தைக்கு வந்துள்ளது. கேலக்ஸி ரிங்கின் விலை நிர்ணயம் என்ன? என்னென்ன விற்பனை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிர்து? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி ரிங் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? சாம்சங்கின் இந்த ஸ்மார்ட் ரிங் ஆனது சாம்சங்கின் சுற்றுச்சூழல் அமைப்பில் (Samsung ecosystem) ஒரு புதிய இணைப்பாகும். சுவாரசியமாக இது எந்த விதமான கூடுதல் சந்தா திட்டமும் இல்லாமல் ஏஐ-பவர்டு அம்சங்களை கொண்ட கேலக்ஸி ஏஐ மூலம் இயக்கப்படுகிறது.

ஒருவழியாக Samsung Galaxy Ring இந்தியாவில் அறிமுகம்!

உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் இந்த ஸ்மார்ட் ரிங்கில் ஸ்லீப் ஸ்கோர், ஸ்நோரிங் டேட்டா மற்றும் ஸ்லீப் மூவ்மெண்ட், லேடன்சி, ஹார்ட் ரேட் மற்றும் ரெசிபிரேட்டரி ரேட் போன்ற பிற அளவீடுகள் உடனான விரிவான ஸ்லீப் அனாலிஸிஸை வழங்குகிறது.

ஏஐ-பவர்டு அம்சங்களை பற்றி பேசுகையில், சாம்சங் கேலக்ஸி ரிங் ஆனது செல்பீ, டெய்லி ஆக்டிவிட்டி, ஸ்லீப்பிங் ஹார்ட் ரேட் மற்றும் பலவற்றின் அடிப்படையில் உடல் மற்றும் மனநல நிலைமைகளை கண்காணிக்கும் ஆஎனர்ஜி ஸ்கோரை கொண்டுள்ளது. ஹார்ட் ரேட் அலெர்ட் உடன் ரியல்டைம் ஹார்ட் ரேட் கண்காணிப்பை நிகழ்த்தும் அம்சமும் இதில் அடங்கும்.

சாம்சங் கேலக்ஸி ரிங் ஆனது சாம்சங் ஹெல்த் ஆப்பின் (Samsung Health App) வழியாக ஒழுங்கற்ற ஹார்ட் ரேட் ரிதம் பற்றி பயனர்களுக்கு தெரிவிக்கிறது. மேலும் ஆட்டோ வொர்கவுட் டிடெக்ஷன், இன்ஆக்டிவ் அலெர்ட்ஸ் மற்றும் பிற உடற்பயிற்சி தொடர்பான அலெர்ட்களையும் இது ஆதரிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ரிங் அந்த நீங்கள் தேர்வு செய்யும் அளவைப் பொறுத்து 2.3 முதல் 3.0 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும்.டைட்டானியம் கிரேடு 5 மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த கேலக்ஸி ரிங் ஆனது 10 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட்டையும் கொண்டுள்ளது. இது அதிக வெப்பநிலை, கடினமான சூழ்நிலைகள் மற்றும் பலவற்றை தங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேட்டரி லைஃப்பை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ரிங் ஆனது 7 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கேலக்ஸி ரிங் ஆனது ஃபைண்ட் மை ரிங் அம்சத்துடன் இணக்கமாக உள்ளது. இந்த அம்சத்தின் கீழ் பயனர்கள் தங்களுடைய சாம்சங் ஸ்மார்ட் ரிங் ஆனது எங்கே இருக்கிறது என்பதை எளிமையாக கண்டறிய முடியும்.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ரிங்கின் விலை என்ன? சாம்சங் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் ரிங் மூன்று ஃபினிஷ்களில் ஒன்பது வெவ்வேறு அளவுகளில் வாங்க கிடைக்கிறது. அதாவது இது டைட்டானியம் பிளாக், டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் கோல்டு ஆகிய 3 கலர்களில் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட் ரிங்கின் ஆரம்ப விலை ரூ.38,999 முதல் தொடங்குகிறது. இது Samsung.com, தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை கடைகள், அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி ரிங்கை வாங்குவதற்கு முன், வாடிக்கையாளர்கள் தங்கள் மோதிர அளவைச் சரிபார்க்க சாம்சங்கின் சைசிங் கிட்டை (Sizing Kit) பயன்படுத்தி கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி ரிங் என்னென்ன விற்பனை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது? இந்த ஸ்மார்ட் ரிங் மீது 24 மாத காலத்திற்கான நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷன் அணுக கிடைக்கிறது; இதற்கு மாதத்திற்கு ரூ.1,625 செலவாகும். அக்டோபர் 18 ஆம் தேதிக்கு முன் இந்த ஸ்மார்ட் ரிங்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 25W டிராவல் அடாப்டர் இலவசமாக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Ring Price in India Announced Get Free 25W travel adapter till Oct 18
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X