Home
Gadgets

ரூ.4,999 மதிப்புள்ள Wireless Charger Duo இலவசம்.. இந்தியாவில் Samsung Galaxy Ring-ன் முன்பதிவு ஆரம்பம்!

சாம்சங் (Samsung) நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட் ரிங் ஆன கேலக்ஸி ரிங் (Galaxy Ring) கடந்த செப்டம்பரில் நடந்த கேலக்சிஸி அன்பேக்டு 2024 (Galaxy Unpacked 2024) நிகழ்வில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அறிவிப்பு வெளியான வேகத்தில் சாம்சங் கேலக்ஸி ரிங் ஆனது மற்ற நாடுகளில் விற்பனைக்கு வந்தது. இப்போது, ​​சாம்சங் நிறுவனம் அதை இந்தியாவிலும் செய்ய உள்ளது. தற்போது இது சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு (pre-reserve) செய்ய கிடைக்கிறது. என்ன விலை? ப்ரீ-ரிசர்வ் செய்வது எப்படி? என்னென்ன சலுகைகள்? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி ரிங்கை வாங்க வேண்டும் என்கிற ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (Samsung official website) வழியாக கேலக்ஸி ரிங்-ஐ முன்பதிவு செய்யலாம். கேலக்ஸி ரிங்கை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,999 மதிப்புள்ள வயர்லெஸ் சார்ஜர் டுயோ இலவசமாக கிடைக்கும் என்றும், கூடவே அவர்களுக்கு ரூ.5,000 மதிப்புள்ள வெல்கம் வவுச்சர் கிடைக்கும் என்பதையும் சாம்சங் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்தியாவில் Samsung Galaxy Ring-ன் முன்பதிவு ஆரம்பம்!

கேலக்ஸி ரிங்கை முன்பதிவு செய்வது எப்படி? சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் ஹோம் பேஜில் உள்ள கேலக்ஸி ரிங் பேனரை கிளிக் செய்யவும். பின்னர் உங்களுடைய ​​பெயர், இமெயில் ஐடி, மொபைல் எண் போன்ற தேவையான விவரங்களை உள்ளிடவும். கடைசியாக ரிஜிஸ்டர் என்கிற பட்டனை கிளிக் செய்யவும். இது தவிரத்து, பயனர்கள் சாம்சங் ஷாப்பில் ரிஜிஸ்டர் செய்து ரூ.5,000 வவுச்சரையும் பெறலாம்.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ரிங்கின் விலை நிர்ணயம் என்ன? தற்போது வரையிலாக சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ரிங்கின் இந்திய விலையை இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், இந்த ஸ்மார்ட் ரிங்கின் விற்பனை தேதி மற்றும் விலை விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

சாம்சங் கேலக்ஸி ரிங் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? சாம்சங் கேலக்ஸி ரிங் ஆனது சாம்சங்கின் சுற்றுச்சூழல் அமைப்பில் (Samsung ecosystem) ஒரு புதிய இணைப்பாகும். மேலும் இது எந்த விதமான கூடுதல் சந்தா திட்டமும் இல்லாமல் ஏஐ-பவர்டு அம்சங்களை கொண்ட கேலக்ஸி ஏஐ மூலம் இயக்கப்படுகிறது.

உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் இந்த ஸ்மார்ட் ரிங்கில் ஸ்லீப் ஸ்கோர், ஸ்நோரிங் டேட்டா மற்றும் ஸ்லீப் மூவ்மெண்ட், லேடன்சி, ஹார்ட் ரேட் மற்றும் ரெசிபிரேட்டரி ரேட் போன்ற பிற அளவீடுகள் உடனான விரிவான ஸ்லீப் அனாலிஸிஸை வழங்குகிறது.

ஏஐ-பவர்டு அம்சங்களை பற்றி பேசுகையில், சாம்சங் கேலக்ஸி ரிங் ஆனது செல்பீ, டெய்லி ஆக்டிவிட்டி, ஸ்லீப்பிங் ஹார்ட் ரேட் மற்றும் பலவற்றின் அடிப்படையில் உடல் மற்றும் மனநல நிலைமைகளை கண்காணிக்கும் ஆஎனர்ஜி ஸ்கோரை கொண்டுள்ளது. ஹார்ட் ரேட் அலெர்ட் உடன் ரியல்டைம் ஹார்ட் ரேட் கண்காணிப்பை நிகழ்த்தும் அம்சமும் இதில் அடங்கும்.

சாம்சங் கேலக்ஸி ரிங் ஆனது சாம்சங் ஹெல்த் ஆப்பின் (Samsung Health App) வழியாக ஒழுங்கற்ற ஹார்ட் ரேட் ரிதம் பற்றி பயனர்களுக்கு தெரிவிக்கிறது. மேலும் ஆட்டோ வொர்கவுட் டிடெக்ஷன், இன்ஆக்டிவ் அலெர்ட்ஸ் மற்றும் பிற உடற்பயிற்சி தொடர்பான அலெர்ட்களையும் இது ஆதரிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ரிங் அந்த நீங்கள் தேர்வு செய்யும் அளவைப் பொறுத்து 2.3 முதல் 3.0 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும்.டைட்டானியம் கிரேடு 5 மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த கேலக்ஸி ரிங் ஆனது 10 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட்டையும் கொண்டுள்ளது. இது அதிக வெப்பநிலை, கடினமான சூழ்நிலைகள் மற்றும் பலவற்றை தங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேட்டரி லைஃப்பை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ரிங் ஆனது 7 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கேலக்ஸி ரிங் ஆனது ஃபைண்ட் மை ரிங் அம்சத்துடன் இணக்கமாக உள்ளது. இந்த அம்சத்தின் கீழ் பயனர்கள் தங்களுடைய சாம்சங் ஸ்மார்ட் ரிங் ஆனது எங்கே இருக்கிறது என்பதை எளிமையாக கண்டறிய முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Ring Pre Reserve Started in India Price Offer Features How to Pre Book
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X