Home
Gadgets

யாருமே எதிர்பார்க்கல.. ரூ.10,000 விலை குறைக்கப்பட்ட Samsung ஸ்மார்ட் ரிங்.. இதோ புதிய விலை..

சாம்சங் கேலக்ஸி ரிங் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த சாம்சங் ரிங் வெளியானது. இந்நிலையில் இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ரிங் (Samsung Galaxy Ring) மாடலுக்கு ரூ.10,000 விலை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது கடந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி ரிங் ஆனது ரூ.38,999 விலையில் அறிமுகமானது. ஆனால் தற்போது இந்த சாம்சங் ரிங் மாடலுக்கு ரூ.10000தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த சாதனத்தை தற்போது ரூ.28,999 விலையில் வாங்க முடியும். சாம்சங் ஷாப் ஆப்ஸ் ( Samsung Shop app) அல்லது இணையதளத்தில் (website) இந்த சாம்சங் கேலக்ஸி ரிங் மாடலை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

ரூ.10,000 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட் ரிங்.. இதோ புதிய விலை..

சாம்சங் கேலக்ஸி ரிங் அம்சங்கள் (Samsung Galaxy Ring Specifications): டைட்டானியம் கிரேடு 5 மூலம் உருவாக்கப்பட்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ரிங். 10ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ரிங். அதேபோல் 5 முதல் 13 சைஸ் அளவுகளில் இந்த
சாதனத்தை வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் ரிங் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

குறிப்பாக 3.0 கிராம் வரை எடை கொண்டது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட் ரிங். மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி ரிங் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும் என நிறுவனம் கூறுகிறது. குறிப்பாக 30 நிமிடங்களில் இதன் பேட்டரியை 40 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிரும் எல்இடி லைட்களுடன் (LED Lights) கூடிய சார்ஜிங் கேஸ் இதனுடன் வருகிறது. குறிப்பாக அன்றாட ஆரோக்கியத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கேலக்ஸி ரிங். அதன்படி 24/7 ஹெல்த் மானிட்டர் வழங்குகிறது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ரிங். அதேபோல் ஆரோக்கியமான பழக்கங்களை மேம்படுத்துவதற்கும் AI அல்காரிதம் கொண்ட ஸ்லீப் பாட்டர்ன் (Sleep Pattern) சென்சார் இதில் உள்ளன.

மூவ்மண்ட் ( movement), ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), சுவாச விகிதம் உள்ளிட்ட பல்வேறு சென்சார் மானிட்டர் அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் ரிங் வெளிவந்துள்ளது. மேலும் அட்வான்ஸ் சைக்கிள் டிராக்கிங் (Advanced Cycle Tracking) அம்சமும் இதில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி ரிங் மாடலில் உள்ள ஏஐ அம்சம் ஆனது ஹெல்த் ரிப்போர்ட் வழங்கும். அதாவது தூக்கத்தின் தரம், ஆக்டிவிட்டி லெவல், ஸ்லீபிங் ஹார்ட் ரேட் மற்றும் உடல்நலம் குறித்த அறிக்கையை இந்த ஏஐ அம்சம் வழங்கும். குறிப்பாக இதுபோன்ற அம்சங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

ரூ.10,000 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட் ரிங்.. இதோ புதிய விலை..

இந்த புதிய சாதனத்தில் வொர்க்அவுட் மோட்கள் (Workout Modes) மற்றும் ஆட்டோமேடிக் வொர்க்அவுட் டிடெக்ட் (Automatic Workout Detection) சப்போர்ட்வருகிறது. ஒருவேளை இந்த ஸ்மார்ட் ரிங் மாடலை நீங்கள் எங்காவது மறந்து வைத்துவிட்டு வந்தால் கேலக்ஸி ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி ரிங் கண்டறிவதற்கான ஃபைண்ட் மை ரிங் அம்சமும் உள்ளது.

குறிப்பாக ஸ்கின் டெம்பரேச்சர் சென்சார் (Skin Temperature Sensor), பிஎல்இ 5.4 சென்சார், பிபிஜி சென்சார் உள்ளிட்ட பல சென்சார் வசதிகள் இதில் உள்ளன. மேலும் டைட்டானியம் பிளாக் (Titanium Black), டைட்டானியம் சில்வர் (Titanium Silver) மற்றும் டைட்டானியம் கோல்டு (Titanium Gold) நிறங்களில் இந்த சாம்சங் ஸ்மார்ட் ரிங் மாடலை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Ring has received a Rs 10000 discount in India: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X