ஒரு குட் நியூஸ்.. அதுவே தான் பேட் நியூஸும் கூட.. Samsung Galaxy Ring 2 அறிமுகத்தில் டிவிஸ்டு!
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் முதல் கேலக்ஸி ரிங் ஆனது கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. இது அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 1 ஆண்டு ஆகிவிட்டதால், சாம்சங் கேலக்ஸி ரிங் 2 (Samsung Galaxy Ring 2) ஸ்மார்ட் ரிங் ஆனது 2025 ஜூன் அல்லது ஜூலை மாத வாக்கில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இன்னும் சொல்லப்போனால் கேலக்ஸி ரிங் 2 ஆனது எதிர்பார்த்ததை விட மிக விரைவில் வரும் என்று நம்பப்பட்டது. கடந்த 2025 ஜனவரி மாதம் சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த போது கேலக்ஸி ரிங் 2 அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஆனால் பேட் நியூ என்னவென்றால் 2025 ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் கூட சாம்சங் கேலக்ஸி ரிங் 2 அறிமுகம் ஆகாது என்பது போல் தெரிகிறது. நல்ல செய்தி என்னவென்றால், கேலக்ஸி ரிங் 2 உருவாக்கத்தில் உள்ளது. கெட்ட செய்தி என்னவென்றால், கேலக்ஸி ரிங் 2 இன்னும் உருவாக்கத்தில் தான் உள்ளது. ஆக கேலக்ஸி ரிங் 2 ஆனது 2025 இல் அறிமுகம் செய்யப்படாது.
சாம்சங் கிளப் வழியாக கிடைத்த தகவல்களின்படி சாம்சங் அதன் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஸ்மார்ட் ரிங்கில் வேலை செய்து கொண்டிருக்கிறது. மேலும் சாம்சங்கின் முயற்சிகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. மேலும் கேலக்ஸி ரிங் 2 மாடலில் சாம்சங் நிறுவனம் ஒரு புதிய வகை பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்கிற தகவலும் கிடைத்துள்ளது இதுதான் கேலக்ஸி ரிங் 2 "விரைவில் வராததற்கு" முக்கிய காரணமாக இருக்கலாம்.
சாம்சங் நிறுவனத்தின் முதல் கேலக்ஸி ரிங்கில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? சாம்சங்கின் இந்த ஸ்மார்ட் ரிங் ஆனது சாம்சங்கின் சுற்றுச்சூழல் அமைப்பில் (Samsung ecosystem) ஒரு புதிய இணைப்பாகும். சுவாரசியமாக இது எந்த விதமான கூடுதல் சந்தா திட்டமும் இல்லாமல் ஏஐ-பவர்டு அம்சங்களை (AI-Powered Features) கொண்ட கேலக்ஸி ஏஐ (Galaxy AI) மூலம் இயக்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ரிங்கில் உள்ள உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி அம்சங்களை பொறுத்தவரை, ஸ்லீப் ஸ்கோர் (Sleep Score), ஸ்நோரிங் டேட்டா (Snoring Data) மற்றும் ஸ்லீப் மூவ்மெண்ட், லேடன்சி, ஹார்ட் ரேட் (Heart Rate) மற்றும் ரெசிபிரேட்டரி ரேட் போன்ற பிற அளவீடுகள் உடனான விரிவான ஸ்லீப் அனாலிஸிஸை (Sleep Analysis) வழங்குகிறது.
ஏஐ-பவர்டு அம்சங்களை பற்றி பேசுகையில், சாம்சங் கேலக்ஸி ரிங் ஆனது செல்பீ, டெய்லி ஆக்டிவிட்டி, ஸ்லீப்பிங் ஹார்ட் ரேட் மற்றும் பலவற்றின் அடிப்படையில் உடல் மற்றும் மனநல நிலைமைகளை கண்காணிக்கும் ஆஎனர்ஜி ஸ்கோரை கொண்டு உள்ளது. ஹார்ட் ரேட் அலெர்ட் உடன் ரியல்டைம் ஹார்ட் ரேட் கண்காணிப்பை நிகழ்த்தும் அம்சமும் இதில் அடங்கும்.
சாம்சங் கேலக்ஸி ரிங் ஆனது சாம்சங் ஹெல்த் ஆப்பின் (Samsung Health App) வழியாக ஒழுங்கற்ற ஹார்ட் ரேட் ரிதம் பற்றி பயனர்களுக்கு தெரிவிக்கிறது. மேலும் ஆட்டோ வொர்கவுட் டிடெக்ஷன், இன்ஆக்டிவ் அலெர்ட்ஸ் மற்றும் பிற உடற்பயிற்சி தொடர்பான அலெர்ட்களையும் இது ஆதரிக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ரிங் அந்த நீங்கள் தேர்வு செய்யும் அளவைப் பொறுத்து 2.3 முதல் 3.0 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். டைட்டானியம் கிரேடு 5 மூலம் உருவாக்கப்பட்டு உள்ள இந்த கேலக்ஸி ரிங் ஆனது 10 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட்டையும் கொண்டுள்ளது. இது அதிக வெப்பநிலை, கடினமான சூழ்நிலைகள் மற்றும் பலவற்றை தங்கும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பேட்டரி லைஃப்பை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ரிங் ஆனது 7 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்குவதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் கேலக்ஸி ரிங் ஆனது ஃபைண்ட் மை ரிங் அம்சத்துடன் இணக்கமாக உள்ளது. இந்த அம்சத்தின் கீழ் பயனர்கள் தங்களுடைய சாம்சங் ஸ்மார்ட் ரிங் ஆனது எங்கே இருக்கிறது என்பதை எளிமையாக கண்டறிய முடியும்.


Click it and Unblock the Notifications








