பேக் டூ பேக் அறிமுகம்.. ஸ்மார்ட்போன் வாங்குற விலையில் Samsung Galaxy Ring 2.. S25 சீரீஸிலும் ஒரு டிவிஸ்டு!
2025 ஜனவரி மாதத்தில், சாம்சங் நிறுவனம் "முக்கியமான அறிமுகங்களை" செய்ய உள்ளது. உங்களில் பலரும் அது சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் என்பதை முன்கூட்டியே அறிந்து இருக்கலாம். ஆனால் சமீபத்திய தகவலொன்று சாம்சங் நிறுவனம் புதிய எஸ்25 மாடல்களின் அறிமுகத்தோடு நிறுத்திக்கொள்ள போவதில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
சாம்சங் நிறுவனம் அதன் எஸ்25 சீரீஸ் உடன் சேர்த்து, தனது இரண்டாவது ஃபிட்னஸ் ரிங்கையும் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. அது சாம்சங் கேலக்ஸி ரிங் 2 (Samsung Galaxy Ring 2) ஆகும். முதல் ரிங் ஆனது அதாவது சாம்சங் கேலக்ஸி ரிங் ஆனது கடந்த ஜூலை மாதம் பாரிஸில் நடந்த கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இருப்பினும் சாம்சங்கின் முதல் ஃபிட்னஸ் ரிங் சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் கேலக்ஸி ரிங் 2 அறிமுகம் குறித்த தகவல், சாம்சங் நிறுவனமானது பேக் டூ பேக் அறிமுகங்களை செய்யும் திட்டத்தை கொண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. இது ஜனவரி இறுதியில் நடக்கும் கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வில் எஸ்25 சீரீஸ் உடன் சேர்ந்து அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிடைம்ஸ் (DigiTimes) வழியாக வெளியான சமீபத்திய அறிக்கையின்படி, ஜனவரி 2025 இல் நடக்கும் கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வின் போது சாம்சங் கேலக்சிஸி ரிங் 2 டீஸ் செய்யப்படலாம். இந்நிகழ்வு ஜனவரி 22 அன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிங் 2 ஆனது முதல் மாடலை போலவே 9 அளவு விருப்பங்களை தக்க வைத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் சாம்சங் கேலக்ஸி ரிங் 2 மாடலானது மிகவும் துல்லியமான ஹெல்த் டேட்டா சென்சார்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏஐ செயல்பாடுகளை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. நெக்ஸ்ட் ஜெனரேஷன் கேலக்ஸி ரிங் உடன் சேர்த்து சாம்சங் நிறுவனம் தனது ஏஆர் ஸ்மார்ட் கிளாஸ்களையும் காட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ரிங் 2 விலை நிர்ணயம் ரூ.40,000 க்கு அருகில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை வாங்கும் விலைக்கு சாம்சங் கேலக்ஸி ரிங் 2 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி ரிங் ஆனது கடந்த அக்டோபரில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இதன் விலை ரூ.38,999 ஆகும்.
கேலக்ஸி ரிங் 2 மற்றும் ஏஆர் ஸ்மார்ட் கிளாஸ் ஒருபக்கம் இருக்க கேலக்ஸி எஸ்25 சீரீஸிலும் ஒரு டிவிஸ்டு காத்திருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸில் மொத்தம் 4 மாடல்கள் இடம்பெறும் என்பது போல் தெரிகிறது. அந்த நான்காவது மாடல் சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் (Samsung Galaxy S25 Slim) ஆக இருக்கலாம்.
இந்நிகழ்வு சரியாக எப்போது நடக்கும்? எப்என்நியூஸ் (FNNews) வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையானது, கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ் அல்ட்ரா ஆகிய மாடல்களை உள்ளடக்கிய கேலக்ஸி எஸ்25 சீரீஸின் வெளியீட்டு நிகழ்வானது, ஜனவரி 23 ஆம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு தென் கொரியாவில் தொடங்கும். அதாவது இந்திய நேரப்படி ஜனவரி 22 ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு தொடங்கும் நிகழ்வில் அறிமுகமாகும்.
மேலும் அந்த அறிக்கை, எஸ்25 சீரீஸின் பரீ-ஆர்டர் விண்டோவானது (Samsung Galaxy S25 Series Pre-order Window) 2025 ஜனவரி 24 முதல் பிப்ரவரி 3 வரை திறந்திருக்கும் என்பதையும், இந்த போன்கள் பிப்ரவரி 7ம் தேதி முதல் விற்பனைக்கு வரலாம் என்பதையும் குறிப்பிடுகிறது. நேர மண்டல வேறுபாடுகள் காரணமாக, உலகளாவிய விற்பனை தேதியானது, ஒரு நாள் முன்னதாக இருக்கலாம், அதாவது பிப்ரவரி 6 முதல் தொடங்கலாம்.


Click it and Unblock the Notifications








