அசரடித்த சாம்சங்.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. ஆக்டிவிட்டி டிராக்கர்.. 21 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களை தட்டித் தூக்கும் விதமாக அமோலெட் டிஸ்பிளே, 21 நாட்கள் பேட்டரி பேக்கப், ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி, போன்ற பக்கா அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஃபிட் 3 (Samsung Galaxy Fit 3) விரைவில் வெளியாகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு 2024 (Galaxy Unpacked 2024) நிகழ்வானது, ஜனவரி 17ஆம் தேதி நடந்தது. இந்த நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் (Samsung Galaxy S24 Series) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த போன்களோடு சாம்சங் கேலக்ஸி ஃபிட் 3 (Samsung Galaxy Fit 3) பேண்ட் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சாம்சங் நிறுவனம் அதுகுறித்த எந்தவொரு அறிவிப்பையும் வெளியடாமல், சாம்சங் கேலக்ஸி ரிங்கின் டிசைன் மற்றும் கலர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டது. இதனால், சாம்சங் கேலக்ஸி ஃபிட் 3 பிரியர்கள் அதிருப்தி அடைந்து விட்டனர். இந்த சூழலில் அவர்களுக்கு நல்ல அப்டேட் கிடைத்து இருக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஃபிட் 3 மாடலானது, மலேசியாவின் எஸ்ஐஆர்ஐஎம் (SIRIM) சர்டிபிகேஷனுக்கு வந்துள்ளது. எஸ்எம்-ஆர்390 (SM-R390) என்னும் மாடல் பெயரில் இடம் பெற்றுள்ளது. இதனால், அங்கு விரைவில் வெளியாவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அடுத்த சில வாரங்களில் அங்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
அதன் பின்பு, இந்தியா உள்பட மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால், இந்திய சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்கள் குழியில் இருக்கின்றனர். இவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அந்த சாம்சங் கேலக்ஸி ஃபிட் 3 மாடலில் அப்படி என்ன இருக்கிறது? என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
சாம்சங் கேலக்ஸி ஃபிட் 3 அம்சங்கள் (Samsung Galaxy Fit 3 Specifications): இந்த சாம்சங் வாட்ச்சில் 1.61 இன்ச் (126 x 294 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 302 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு அலுமினியம் கேஸ் (Aluminum Case) மற்றும் சிலிகான் பேண்ட் (Silicon Band) கொண்டிருக்கிறது. சிங்கிள் பட்டன் கன்ட்ரோல் (Single Button Control) வருகிறது. IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டிருக்கிறது. 21.39 கிராம் எடை கொண்டிருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஃபிட் 3 மாடலில் 200mAh பேட்டரி வருகிறது.
அதோடு 5W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி 12 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கக்கூடியது. ஆக்டிவிட்டி டிராக்கிங் (Activity Tracking) மற்றும் ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking) சப்போர்ட் வருகிறது. அதேபோல கைரோஸ்கோப், ஃபோட்டோ பிளெதிஸ்மோகிராபி ஆகிய சென்சார்கள் வருகின்றன.
கிரே (Grey), பிங்க் கோல்டு (Pink Gold) மற்றும் சில்வர் (Silver) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. முன்னதாக வெளியான சாம்சங் கேலக்ஸி ஃபிட் 2 (Samsung Galaxy Fit 2) மாடலின் விலை ரூ.3999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆகவே, இந்த சாம்சங் கேலக்ஸி ஃபிட் 3 மாடலின் விலையானது ரூ.10000 பட்ஜெட்டுக்குள் இருக்க வாய்ப்புள்ளது.
Image Source: 91 Mobiles


Click it and Unblock the Notifications








