Home
Gadgets

இனி ஆர்டர் மிரளும்.. AMOLED டிஸ்பிளே.. 208mAh பேட்டரி.. சாம்சங்கின் மிரளவிடும் ஃபிட்!

சாம்சங் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களும் அறக்க பறக்க வைக்கும் விதமாக அமோலெட் டிஸ்பிளே, 208mAh பேட்டரி, ஹெல்த் டிராக்கர்கள், பிரீமியம் அலுமினியம் பாடி போன்ற அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஃபிட் 3 (Samsung Galaxy Fit 3) அறிமுகமாகியிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஃபிட் 3 அம்சங்கள் (Samsung Galaxy Fit 3 Specifications): இந்த மாடலில் 1.57 இன்ச் (256 x 402 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 302 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் கர்வ்ட் எட்ஜ் டிசைன் கொண்டிருக்கிறது.

AMOLED டிஸ்பிளே.. 208mAh பேட்டரி.. சாம்சங்கின் மிரளவிடும் ஃபிட்!

அலுமினியம் பாடி (Aluminum Body), சிலிகாம் ஸ்ட்ராப் (Silicone Strap) மற்றும் சிங்கிள் பட்டன் கன்ட்ரோல் (Single Button Control) வருகிறது. இந்த மாடலை கேலக்ஸி ஃபிட் 2 மாடலுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய டிஸ்பிளேவை கொண்டிருக்கிறது. கேலக்ஸி வியரபிள் ஆப் (Galaxy Wearable App) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஃபிட் 3 மாடலில் 100+ வாட்ச் பேஸ்கள் (Watch Faces) வருகின்றன. அதேபோல ஆக்டிவிட்டி டிராக்கர் (Activity Tracker) சப்போர்ட் உள்ளது. ஆகவே, வாக்கிங், ரன்னிங், சைக்கிளிங் போன்ற ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன. 13 நாட்கள் பேக்கப் கொண்ட 208mAh பேட்டரி கொண்டிருக்கிறது.

இந்த ஃபிட் மாடலில் IP68 மற்றும் 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Water Resistance) வருகிறது. ஹெல்த் டிராக்கர்கள் (Health Trackers) மற்றும் ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) சப்போர்ட் கொண்டுள்ளது. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate), ஸ்லீப் டிராக்கர் (Sleep Tracker) மற்றும் ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கர் (Stress Level Tracker) வருகிறது.

அதோடு கைரோஸ்கோப் (Gyroscope), ஆக்சிலரோமீட்டர் (Accelerometer) ஆகிய சென்சார்கள் வருகின்றன. இந்த சாம்சங் கேலக்ஸி ஃபிட் 3 வேரியண்ட்டில் மைக்ரோபோன் (Microphone) மற்றும் ஸ்பீக்கர்கள் (Speaker) கொடுக்கப்படவில்லை. ஆகவே, ப்ளூடூத் வாய்ஸ் காலிங் (Bluetooth voice calling) சப்போர்ட் கிடையாது.

ரிமோட் கேமரா (Remote Camera), ஃபைண்ட் மை போன் (Find My Phone), எமர்ஜென்சி எஸ்ஓஎஸ் (Emergency SOS), ஃபால் டிடெக்சன் (Fall Detection), டிஎன்டி மோட் (Do Not Disturb Mode) மற்றும் ஸ்லீப் மோட் (Sleep Mode) போன்ற பீச்சர்கள் கொண்டிருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஃபிட் 3 மாடலில் 3 கலர்கள் வருகின்றன.

ஆகவே, கிரே (Gray), சில்வர் (Silver) மற்றும் பிங்க் கோல்டு (Pink Gold) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆசியா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றின் நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. பிப்ரவரி 23ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

இந்த ஃபிட் 3 மாடலின் விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த சாம்சங் கேலக்ஸி ஃபிட் 3 மாடலின் விலையானது ரூ.8,000 முதல் ரூ.10000 பட்ஜெட்டில் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இந்த மாடலில் 16 எம்பி ரேம் + 256 எம்பி மெமரி வருவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Fit 3 With 16MB RAM, 208mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X