சாம்சங் கேலக்ஸி ஃபிட் 2 இந்தியாவில் அறிமுகம்.! என்ன விலை?

|

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபிட் 2 ஃபிட்னஸ் டிராக்கர் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த மாத தொடக்கத்தில் தென் கொரிய நிறுவனமான சாம்சங் லைஃப் அன்ஸ்டாப்பபிள் மெய்நிகர் நிகழ்வில் கேலக்ஸி ஃபிட் 2-வை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

AMOLED டிஸ்ப்ளே, சிங்கிள்

இந்த புதிய சாதனம் AMOLED டிஸ்ப்ளே, சிங்கிள் சார்ஜில் 15 நாட்கள் வரை பேட்டரி ஆயுள் மற்றும் பல வொர்க்அவுட் முறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை மனதில் வைத்து, இந்த பிட்னஸ் ட்ராக்கர் கை கழுவும் அம்சத்துடன் வருகிறது. இது உங்கள் கைகளை சுத்தம் செய்ய அவ்வப்போது நினைவூட்டும்.

 சாம்சங் கேலக்ஸி ஃபிட் 2 ஆனது 5

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஃபிட் 2 ஆனது 5 ஏடிஎம் நீர் எதிர்ப்பு ஆதரவினையும் கொண்டுள்ளது மற்றும் இரண்டு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும். இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

கேலக்ஸி ஃபிட் 2 ட்ராக்கர் ஆனது இந்தியாவில் ரூ.3,999-க்கு வாங்க கிடைக்கும். மேலும் இது கருப்பு மற்றும் ஸ்கார்லெட் வண்ணங்களில் வெளியாகியுள்ளது. இது அமேசான் மற்றும் சாம்சங்.காம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை கடைகளின் வழியாக ஏற்கனவே வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஃபிட் 2 ஆனது 1.1 இன்ச்

சாம்சங் கேலக்ஸி ஃபிட் 2 ஆனது 1.1 இன்ச் அளவிலான AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. பின்பு சிறந்த பிரகாசத்திற்கான 450nits ப்ரைட்னஸை வழங்குகிறது. இது முன்பக்க டச் பொத்தானை கொண்டு வருகிறது, எனவே எளிதான நேவிகேஷன் மற்றும் எளிமையான செயல்பாடுகளை வேக் அப், கேன்சல் போன்றவற்றை செயல்படுத்துகிறது.

ஏசி இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு- உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை!

 கேலக்ஸி ஃபிட் 2-ஐ 70-க்கும் மேற்பட்ட

பயனர்கள் கேலக்ஸி ஃபிட் 2-ஐ 70-க்கும் மேற்பட்ட பதிவிறக்கம் செய்யக்கூடிய வாட்ச் பேஸ்களுடன் தனிப்பயனாக்கலாம் மற்றும் ஒரே நேரத்தில் 12 பிரத்யேக விட்ஜெட்களையும் செட் செய்யலாம். பின்பு கேலக்ஸி ஃபிட் 2 ஆனது சாம்சங் ஹெல்த் பயன்பாட்டிலிருந்து ப்ரீசெட் செய்யப்பட்ட ஐந்து தானியங்கி உடற்பயிற்சிகள் உட்பட 90 உடற்பயிற்சிகளை கண்காணிக்க உதவுகிறது.

ஸ்லீப் ஸ்கோர் பகுப்பாய்வோடு

இந்த சாதனம் ஸ்லீப் ஸ்கோர் பகுப்பாய்வோடு வருகிறது, இது உங்கள் தூக்க முறையை Awake, REM, Light மற்றும் Deep என்கிற நான்கு நிலைகளில் கண்காணிக்கிறது. மேலும் இது மன அழுத்த கண்காணிப்பையும் கொண்டுள்ளது.

கேலக்ஸி ஃபிட் 2 ட்ராக்கர்

கேலக்ஸி ஃபிட் 2 ட்ராக்கர் ஆனது உங்கள் மன அழுத்த நிலைகளை சரிபார்க்க உதவுகிறது மற்றும் அதிக அழுத்த நிலைகள் கண்டறியப்படும்போது சுவாச வழிகாட்டியை பரிந்துரைக்கிறது. மேலும் இது உங்கள் ஸ்மார்ட்போனின் மியூசிக் பிளேயருக்கான விரைவான அணுகலையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஃபிட் 2 ட்ராக்கர்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபிட் 2 ட்ராக்கர் ஆனது 5 ஏடிஎம் நீர் எதிர்ப்பு மற்றும் வாட்டர் லாக் பயன்முறையுடன் வருகிறது, இது நீச்சல் அமர்வுகள் அல்லது நீர் சார்ந்த செயல்பாடுகளின் போது உங்களுக்கு கைகொடுக்கும்.

ல் 159எம்ஏஎச் பேட்டரி

கடைசியாக இந்த சாதனத்தில் 159எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது ஒரு சார்ஜில் 15 நாட்கள் வரை வழக்கமான செயல்பாட்டை வழங்கும் என்றும் சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் அதிபட்சமாக இந்த பேட்டரி திறனை நீங்கள் 21 நாட்கள் வரை அதிகரிக்க முடியும். பின்பு இந்த கேலக்ஸி ஃபிட் 2 ஆனது 21 கிராம் எடையை கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy Fit 2 Fitness Tracker Launched: Specs, Features and More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X