செம ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. 6 ஓஎஸ் அப்டேட்.. 50எம்பி கேமரா.. 6000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் தரமான சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி (Samsung Galaxy F70 Pro 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.26,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த சாம்சங் போனை ரூ.24,999 விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F70 Pro 5G Specifications): தரமான ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Octa-Core Qualcomm Snapdragon 6 Gen 3) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியானது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது.
அதேபோல் 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 1400 நிட்ஸ் பிரைட்னஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் புரொடெக்சன், 1080×2340 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஒன் யுஐ 8.5 (One UI 8.5) மூலம் சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி மாடல் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 6 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும். இதுதவிர 6 வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த புதிய சாம்சங் போனில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
6000எம்ஏஎச் பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, குளோனாஸ் (GLONASS), என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications
