360 ஆடியோ.. Samsung Galaxy Buds4 அறிமுகம்.. அடாப்டிவ் ANC.. ஹெட் டிராக்கிங்.. விலை எப்படி?
இந்திய மார்கெட்டில் சாம்சங் கேலக்ஸி பட்ஸ்4 (Samsung Galaxy Buds4) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 360 ஆடியோ மட்டுல்லாமல், ஹெட் டிராக்கிங், அடாப்டிவ் ஏஎன்சி உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி பட்ஸ்4 மாடலின் விலை, விற்பனை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்26 (Samsung Galaxy S26), சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் (Samsung Galaxy S26 Plus), சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) ஆகிய ஸ்மார்ட்போன்களுடன் சாம்சங் கேலக்ஸி பட்ஸ்4 (Samsung Galaxy Buds4) மற்றும் சாம்சங் கேலக்ஸி பட்ஸ்4 ப்ரோ (Samsung Galaxy Buds4 Pro) மாடல்களும் வெளியாகி இருக்கின்றன.

இதில் சாம்சங் கேலக்ஸி பட்ஸ்4 மாடலானது, ஒட்டுமொத்த மியூசிக் பிரியர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது. ஒரிஜினல் சவுண்ட், என்ஹான்ஸ்டு ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஃபுல்-ஸ்பெக்ட்ரம் சவுண்ட் ஒரிஜினல் ரெக்கார்டிங் கொடுத்துள்ளது. சாம்சங் கேலக்ஸி பட்ஸ்4 ப்ரோ மாடலைவிட கம்மியான விலைக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ்4 அம்சங்கள் (Samsung Galaxy Buds4 Specifications): 1 வே டைனாமிக் டிரைவர் (Dynamic Driver) மற்றும் சிங்கிள் ஆம்ப்ளிபையர் கிடைத்துள்ளது. இதில் ப்ளூடூத் 6.1 (Bluetooth 6.1) கனெக்ட்டிவிட்டி கிடைக்கிறது. ஆகலே, எஸ்எஸ்சி (SSC), ஏஏசி (AAC) மற்றும் எஸ்பிசி (SBC) ஆகிய ப்ளூடூத் கோடெக் சப்போர்ட் கிடைக்கிறது. 6 மைக்குகளுடன் சூப்பர் கிளியர் கால் (Super Clear Call) சப்போர்ட் உள்ளது.
360 ஆடியோ (360 Audia) சப்போர்ட் இந்த சாம்சங் கேலக்ஸி பட்ஸ்4 மாடலுக்கு வருகிறது. மேலும், ஹெட் டிராக்கிங் (Head Tracking) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) மற்றும் அடாப்டிவ் நாய்ஸ் கன்ட்ரோல் (Adaptive Noise Control) கொடுக்கப்பட்டு உள்ளது. இதுபோக அடாப்டிவ் ஈகியூ (Adaptive EQ) சப்போர்ட் கொடுத்து உள்ளது.
கேலக்ஸி ஏஐ (Galaxy AI) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி பட்ஸ்4 இருக்கிறது. ஆம்பியன்ட் சவுண்ட் (Ambient sound), அடாப்டிவ் ஏஎன்சி (Adaptive ANC) பெற்று கொள்ளலாம். இயர்பட்களில் 45mAh பேட்டரி கிடைக்கிறது. சார்ஜிங் கேஸில் 515mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, இயர்பட் 4.6 கிராம் எடை கொண்டுள்ளது. சார்ஜிங் கேஸ் 45.1 கிராம் எடை கொண்டுள்ளது.
ஏஎன்சி ஆன் (ANC On) செய்யப்பட்டு இருந்தால், 5 மணி நேரங்களுக்கு பட்களிலும், 24 மணி நேரங்களுக்கு சார்ஜிங் கேஸிலும் பேக்கப் கிடைக்கும். ஏஎன்சி ஆப் (ANC Off) செய்யப்பட்டு இருந்தால், 6 மணி நேரங்களுக்கு பட்களிலும், 30 மணி நேரங்களுக்கு சார்ஜிங் கேஸிலும் பேக்கப் கிடைக்கும். வாய்ஸ் பிக்கப் யூனிட் (Voice Pickup Unit), போர்ஸ் & டச் சென்சார்கள் கிடைக்கின்றன.
மேலும், ஐஆர் சென்சார் (IR Sensor), ஆக்சிலரோமீட்டர் (Accelerometer), கைரோ (Gyro) மற்றும் ஹால் சென்சார் (Hall Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அல்லது அதற்கு மேல் ஓஎஸ் கொண்ட மாடல்களில் பயன்படுத்தி கொள்ளலாம். 1.5 ஜிபி மெமரியை இந்த சாம்சங் கேலக்ஸி பட்ஸ்4 கொடுத்துள்ளது. இயர்பட்களுக்கு மட்டும் IP54 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி பட்ஸ்4 மாடலின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. ரூ.6,000 அறிமுக சலுகை போக ரூ.16,999 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. சாம்சங் இந்தியா தளத்தில் ப்ரீ-ஆர்டர் செய்து கொள்ளலாம். மார்ச் 6ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications