Home
Gadgets

பாத்தா தம்மாதுண்டு.. கேட்டா தாறுமாறு.. ரூ.3,000 கேஷ் பேக்குடன் Samsung பட்ஸ்.. 360 டிகிரி ஆடியோ.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி பட்ஸ்3 எப்இ (Samsung Galaxy Buds3 FE) இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. 360 டிகிரி ஆடியோ, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஆம்பியன்ட் சவுண்ட் மட்டுமல்லாமல், 30 மணி நேரங்களுக்கு பிளேபேக் மற்றும் IP54 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. ரூ.3,000 பேங்க் கேஷ்பேக் போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

சாம்சங் ஸ்மார்ட்போன்களில் மட்டுமல்லாமல், இயர்பட்களிலும் எப்இ (FE) மாடல்கள் கிடைக்கின்றன. இதில், சாம்சங் கேலக்ஸி பட்ஸ்3 எப்இ மாடலும் சேர்ந்துள்ளது. அல்ட்ரா பிரீமியம் ஆடியோ பீச்சர்களுடன் இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்த மாடலின் விலை மற்றும் அறிமுக சலுகைகளுக்கு முன்பாக பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

பாத்தா தம்மாதுண்டு.. கேட்டா தாறுமாறு.. ரூ.3,000 கேஷ் பேக்குடன் பட்ஸ்!

சாம்சங் கேலக்ஸி பட்ஸ்3 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy Buds3 FE Specifications): சாம்சங் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் கேலக்ஸி ஏஐ (Galaxy AI) பீச்சர்கள் இந்த பட்ஸ்3 மாடலிலும் கிடைக்கிறது. ஆகவே, ரியல் டைம் டிரான்ஸ்லேஷன் இதில் கிடைக்கிறது. இதுபோக லிசனிங் மோட் (Listening Mode), கான்வர்சேஷன் மோட் (Conversation Mode) சப்போர்ட் கிடைக்கிறது.

ஜெமினி அசிஸ்டன்ட் (Gemini Assistant) கிடைக்கிறது. இதை வழக்கமாக ஹே கூகுள் (Hey Google) என்று வாய்ஸ் கமெண்ட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். ஆடியோ மற்றும் கன்ட்ரோல்களுக்காக குயிக் பேனல் (Quick Panel) கிடைக்கிறது. இதில் இருந்தே நேரடியாக கன்ட்ரோல் செய்யலாம். இதுபோக பிஞ்ச் கன்ட்ரோல் (Pinch Control) கிடைக்கிறது.

மல்டிபிள் டிவைஸ் சின்க் கொடுக்க ஆட்டோ ஸ்விட்ச் (Auto Switch) கிடைக்கிறது. பிரீமியம் இயர்பட்ஸ் மாடல்களில் கிடைக்கும் எஸ்எஸ்சி (SSC), ஏஏசி (AAC) மற்றும் எஸ்பிபி (SBC) ஆகிய‌ ஆடியோ கோடெக் சப்போர்ட் கிடைக்கிறது. ப்ராக்சிமிடி, ஹால் மற்றும் பிரசர் சென்சார்கள் கிடைக்கின்றன. 1.5 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 11+ ஓஎஸ் சப்போர்ட் உள்ளது.

கிரிஸ்டல் கிளியர் ஆடியோ மற்றும் வாய்ஸ் கால்களை கொடுப்பதற்காக என்ஹான்ஸ்டு செய்யப்பட்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) கிடைக்கிறது. ஆம்பியன்ட் சவுண்ட் (Ambient Sound) சப்போர்ட் கிடைக்கிறது. ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஆட்டோ ஸ்விட்ச் சப்போர்ட் இதற்கு கொடுக்கப்படுகிறது.

ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேசன் ஆஃப் செய்யப்பட்டு இருக்கும்போது மொத்தமாக 30 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி பேட்டரி கிடக்கிறது. இதே போல இயர்பட்களில் 8.5 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேசன் ஆன் செய்யப்பட்டிருக்கும் போது கேஸ் மூலம் 14 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும்.

பட்களில் 6 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். இயர்பட்களில் தலா 53mAh பேட்டரி கிடைக்கிறது. சார்ஜிங் கேஸில் 515mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த சாம்சங் இயர்பட் மாடலில் பேக்கப் அதிகமாகவே கிடைக்கும். IP54 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இப்போது விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிளேட் டிசைனில் போல்டு பிளாக் (Bold Black)‌ மற்றும் சாஃப்ட் ஒயிட் (Soft White) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடக்க இருக்கிறது. டூயல் டோன் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி பட்ஸ்3 எப்இ மாடலின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

ஏகப்பட்ட அறிமுக சலுகைகள் பட இருக்கின்றன. ஆகவே இதை ஆடர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.3,000 மதிப்பிலான பேங்க் கேஷ் பேக் அல்லது எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. 12 மாதங்களுக்கான நோ காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் இதற்கு கிடைக்கிறது. சாம்சங் ஸ்மார்ட் போனுடன் இந்த மாடலை ஆடர் செய்தால் ரூ.4,000 மதிப்பில் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Buds3 FE Launched in India Check Specifications Price Bank Cashback
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X