அடேங்கப்பா.! சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ TWS இயர்பட்ஸின் விலை இவ்வளவு இருக்குமா?

|

சாம்சங் நிறுவனம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி அன்று தனது சாம்சங் கேலக்ஸி எஸ் 21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது, இதனுடன், அறிமுகமாகும் மற்றொரு சாம்சங் தயாரிப்பாக சாம்சங் கேலக்ஸி பட்ஸ் புரோ சாதனமும் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேலக்ஸி பட்ஸ் புரோ சாதனம் ஆக்டிவ் நைஸ் கான்சலேஷன் அம்சத்துடன் அறிமுகம் செய்யப்படுகிறது.

புதிய கேலக்ஸி பட்ஸ் புரோ TWS இயர்பட்ஸ்

புதிய கேலக்ஸி பட்ஸ் புரோ TWS இயர்பட்ஸ்

புதிய லீக் தகவலின் படி, இது இப்போது சாம்சங்கின் புதிய TWS இயர்பட்ஸ் தொகுப்பின் சில முக்கிய அம்சங்கள் மற்றும் முக்கிய சிறப்பம்சங்களை உறுதிப்படுத்துகிறது. TWS என்பது ட்ருலி வயர்லெஸ் ஸ்டீரியோ என்பது அர்த்தம். புதிய கேலக்ஸி பட்ஸ் புரோவின் வடிவமைப்பு பற்றிய தகவல்கள் ஏற்கனவே கசிந்துள்ளது மற்றும் புதிய அறிக்கையின்படி, புதிய இயர்பட்ஸ் சாதனம் 28 மணிநேர பேட்டரி ஆயுளுடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 மிமீ பாஸ் டிரைவர்

11 மிமீ பாஸ் டிரைவர்

ஒவ்வொரு இயர்பட்ஸ்களும் 61 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கின்றது, அதே நேரத்தில் சார்ஜிங் கேஸ் 472 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. ஆடியோ தரம் 11 மிமீ பாஸ் டிரைவர்களையும் 6.5 மிமீ ட்வீட்டர்களையும் கோஆக்சியல் டூயல் ஸ்பீக்கர்களுடன் மிரட்டல் இசை அனுபவத்தை வழங்குகிறது. ANC ஐப் பொறுத்தவரை, இயர்போன்கள் 35 டெசிபல் வரை சத்தத்தை ரத்து செய்கிறது. இது மட்டுமல்லாமல், இயர்போன்களுக்கு IPX7 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மதிப்பிடும் உள்ளது.

ரூ. 6,888 விலையில் பெண்களை மையமாக வைத்து வெளியான ஸ்மார்ட்போன்.. இதில் என்ன ஸ்பெஷல் இருக்கு?ரூ. 6,888 விலையில் பெண்களை மையமாக வைத்து வெளியான ஸ்மார்ட்போன்.. இதில் என்ன ஸ்பெஷல் இருக்கு?

நாய்ஸ் கான்சலேஷன்

நாய்ஸ் கான்சலேஷன்

டிப்ஸ்டர் மற்றும் அறிக்கையின்படி, 'இயர்ஃபோன்கள் பல நிலை செயலில் நாய்ஸ் கான்சலேஷன் செய்கிறது, வாய்ஸ் டிடெக்ட்ஷன் அம்சம், தடையற்ற இணைப்பு மற்றும் 3D இடஞ்சார்ந்த ஆடியோவை ஹெட் டிராக்கிங் ஆதரிப்புடன் வருகிறது. சாதனம் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன்யூஐ 3.0 'இயங்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே செயல்படும் என்று கூறப்படுகிறது.

விலை இதுவாகவே இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்

விலை இதுவாகவே இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்

டால்பி அட்மோஸ் ஆதரவு, சவுண்ட்அலைவ், கைரோ சென்சார்கள், ஆம்பியண்ட் மோடிற்கான நான்கு தொகுதி அமைப்புகள், டச் அம்சம் மற்றும் பல அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த புதிய இயர்பட்ஸ் சாதனம் 229 யூரோ (தோராயமாக ரூ .20,600) என்று விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இது பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயர்போனின் விலை இதுவாகவே இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy Buds Pro Key Features and Specifications Leaked : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X