வீட்டுக்கு 2 ஆர்டர் போடும் விலை.. Samsung புது பட்ஜெட் Earbuds.. 35 மணிநேர பேட்டரி, IP54 ரேட்டிங்!
கடைசியாக சாம்சங் நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டில் அதன் பட்ஜெட் விலை இயர்பட்ஸ் பிரிவின் கீழ் - கேலக்ஸி பட்ஸ் எப்இ (Samsung Galaxy Buds FE) மாடலை அறிமுகப்படுத்தி இருந்தது. அதற்கு அடுத்தபடியாக சாம்சங் நிறுவனம் அதன் பட்ஜெட் விலை TWS இயர்பட்ஸ் மாடலான கேலக்ஸி பட்ஸ் கோரை (Samsung Galaxy Buds Core) இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
வருகிற ஜூலை 9 நடக்கும் சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் (Samsung Galaxy Unpacked 2025 Event) அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் இயர்பட்ஸ் ஆனது சற்றே முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கும் வந்துள்ளது. அசல் அறிமுக விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் இயர்பட்ஸ் விரிவான அம்சங்கள் (Samsung Galaxy Buds Core Specifications): சாம்சங்கின் இந்த லேட்டஸ்ட் இயர்பட்கள் வலுவான பாஸ் மற்றும் உயர்தர ஒலியை உறுதியளிக்கும் சிங்கிள்-ட்ரைவர் ஆடியோ சிஸ்டமை (Single-driver audio system) கொண்டுள்ளன. பேக்கிரவுண்ட் இரைச்சலில் இருந்து உங்கள் குரலை தனிமைப்படுத்துவதன் மூலம் கிளியர் ஆன கால்களை உறுதி செய்ய ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று மைக்ரோஃபோன்கள் பேக் செய்யப்பட்டுள்ளன
மேலும் இதில் கேலக்ஸி ஏஐ (Galaxy AI) ஆல் இயக்கப்படும் இன்டர்ப்ரெட்டர் அம்சம் உள்ளது. சுவாரசியமாக இது நிகழ்நேர வாய்ஸ் கால் டிரான்ஸ்கிரிப்ஷன்களை (Real-time voice call transcriptions) வழங்கும். ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (ANC) மற்றும் ஆம்பியன்ட் சவுண்ட் அம்சங்களுடன் வரும் இந்த இயர்பட்ஸ் ஆனது உங்கள் "கேட்கும் அனுபவத்தை" மேம்படுத்துகிறது.
பேட்டரியை பொறுத்தவரை கேலக்ஸி பட்ஸ் கோர் ஆனது சார்ஜிங் கேஸுடன் பயன்படுத்தும்போது 35 மணிநேர பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. ANC இயக்கப்பட்டால், மொத்த பேட்டரி லைஃப் 20 மணிநேரம் ஆக இருக்கும். சார்ஜிங்கை பொறுத்தவரை யூஎஸ்பி -சி போர்ட் வழியாக சார்ஜ் செய்யலாம். கடைசியாக இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கை பெற்றுள்ளன.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் இயர்பட்ஸ்-ல் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்கள் (Samsung Galaxy Buds Core Features):
- பாதுகாப்பான பிடிமானத்திற்கான விங்டிப் டிசைன்
- ப்ளூடூத் வி5.4, ஏஏசி (AAC), எஸ்பிசி (SBC) மற்றும் அளவிடக்கூடிய கோடெக்களுக்கான ஆதரவு
- டச் கண்ட்ரோல்கள்
- கேலக்ஸி டிவைஸ்களுடன் எளிமையான சின்க்

- அளவீட்டில் 19.2×17.1×22.2மிமீ
- எடையில் 5.3கிராம்
- கேஸ் பரிமாணங்கள் 50.0x 50.0×27.7மிமீ
- எடையில் 31.2கிராம்
- 500mAh பேட்டரி
- இயர்பட்ஸ்களில் 65mAh பேட்டரி
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் இயர்பட்ஸ் விலை, ஆபர் மற்றும் விற்பனை விவரங்கள் (Samsung Galaxy Buds Core Price, Offer, Sale Details): சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் இயர்பட்ஸ் ஆனது ஒயிட் மற்றும் பிளாக் கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.4999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
இது ஏற்கனவே (ஜூன் 27 மதியம் 12 மணி முதல்) அமேசான் இந்தியா (Amazon.in) மற்றும் சாம்சங் வலைத்தளம் (Samsung.com) ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளின் வழியாக வாங்க கிடைக்கிறது. அறிமுக சலுகையை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ26, சாம்சங் கேலக்ஸி ஏ36 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ56 ஆகிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இயர்பட்ஸ் மீது ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications