IP54 ரேட்டிங், ANC ஆதரவு, கேலக்ஸி AI அம்சங்கள்.. Samsung Galaxy Buds Core விற்பனை தேதி அறிவிப்பு!
சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வானது (Galaxy Unpacked 2025 Event) ஜூலை 9 ஆம் தேதி அன்று நடக்கும் என்று அறிவித்ததில் இருந்தே, அந்நிகழ்வில் நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் கேலக்ஸி போல்டபிள் ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் (Samsung Galaxy Buds Core) மாடலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தென் கொரிய தொழில்நுட்பக் குழுமமான சாம்சங், அதன் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்விற்கு முன்னதாகவே சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. எப்போது? என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஜூலை 9 நடக்கும் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் என்னென்ன அறிமுகமாகும்?

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் எப்போது அறிமுகமாகும்? அமேசான் இந்தியா வலைத்தளத்தில் உள்ள ஒரு மைக்ரோசைட்டின்படி, சாம்சங் நிறுவனத்தின் இந்த ட்ரூ-வயர்லெஸ்-ஸ்டீரியோ (TWS) இயர்போன்ஸ் ஆனது ஜூன் 27 ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு இந்தியாவில் விற்பனைக்கு வரும். ஆக அதே நாளில் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் இயர்பட்ஸ்-ல் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் ஆனது 2 சிம்பிள் ஆன கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்: அதாவது பிளாக் மற்றும் ஒயிட் கலர்களில் வரலாம். தூசி மற்றும் நீர் ஊடுருவலுக்கு எதிரான பாதுகாப்பிற்காக சாம்சங்கின் இந்த புதிய இயர்போன்ஸ் ஆனது ஐபி54 ரேட்டிங் கட்டமைப்பை கொண்டிருக்கலாம்
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் இயர்பட்ஸ்-ன் வ்வொரு இயர்பட்டின் பின்புறத்திலும் உள்ள சென்சார் ஆனது டச் அடிப்படையிலான கட்டுப்பாடுகளை வழங்கக்கூடும். மேலும் இது ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (ANC) ஆதரவுடன் அறிமுகமாகும் என்றும் சில கசிவுகள் கூறுகின்றன.
கூடவே இது கேலக்ஸி ஏஐ தொகுப்பின் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு ஆதரவு கொண்ட பல அம்சங்களுடன் வரும் என்றும் ஊகிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இணக்கமான கேலக்ஸி ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படும்போது நிகழ்நேரத்தில் மொழிபெயர்ப்புக்காக, பயனர்கள் இன்டர்ப்ரெட்டர் மோட் மற்றும் லைவ் டிரான்ஸ்லேஷன் அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, சாம்சங்கின் இந்த இயர்போன்ஸ் - ப்ளூடூத் 5.4 மற்றும் A2DP, AVRCP மற்றும் HFP ப்ளூடூத் ப்ரொபைல்களுக்கான ஆதரவை வழங்கக்கூடும். அவைகள் AAC, SBC மற்றும் அளவிடக்கூடிய கோடெக் ஆதரவையும் பெறலாம். இந்த மாடலின் வழியாக சாம்சங் ஒரு இயர்பட் பேட்டரியை 100mAh ஆக உயர்த்தலாம், சார்ஜிங் கேஸில் 500mAh பேட்டரி திறன் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஜூலை 9 நடக்கவுள்ள சாம்சங் நிறுவனத்தின் இந்த உலகளாவிய வெளியீட்டு நிகழ்விற்கு முன்னதாக, சாம்சங் இந்தியா அதன் வரவிருக்கும் கேலக்ஸி சீரிஸ்-க்கான முன்பதிவுகளை திறந்துள்ளது. இதன் கீழ் எர்லி பையர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள், திரும்பப்பெறக்கூடிய ரூ.1,999 என்கிற தொகையை செலுத்துவதன் மூலம் ஜூலை 9 அறிமுகமாகும் கேலக்ஸி தயாரிப்புகளை முன்பதிவு செய்யலாம். இந்த முன்கூட்டிய அணுகல் பாஸ் (Early access pass) வழியாக வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,999 வரை மதிப்புள்ள நன்மைகள் கிடைக்கும்.
இதில் முன்கூட்டிய டெலிவரி, பிரத்தியேக வண்ணங்களுக்கான அணுகல் மற்றும் சிறந்த மாற்று விகிதங்கள் ஆகியவைகளும் அடங்கும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், அமேசான் இந்தியா, பிளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டரீடெயில் ஸ்டோர்கள் வழியாக முன்பதிவுகளை செய்யலாம்
ஜூலை 9 நடக்கும் சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் என்னென்ன அறிமுகம் செய்யப்படலாம்?
1. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7)
2. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 (Samsung Galaxy Z Flip 7)
3. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ (Samsung Galaxy Z Flip 7 FE)
4. சாம்சங் கேலக்ஸி ஜி ஃபோல்ட் (Samsung Galaxy G Fold)
5. சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 (Samsung Galaxy Watch 8)
6. சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 கிளாசிக் (Samsung Galaxy Watch 8 Classic)
7. சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 அல்ட்ரா (Samsung Galaxy Watch 8 Ultra)


Click it and Unblock the Notifications