ஆளுக்கு ரெண்டு ரெண்டா ஆர்டர் போட்றாங்களே.. பாதி விலைக்கு கிடைக்கும் Samsung லேட்டஸ்ட் இயர்பட்ஸ்!
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், அதன் பெஸ்ட் மற்றும் லேட்டஸ்ட் இயர்போன்களில் ஒன்றான சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் (Samsung Galaxy Buds Core ) மாடலின் விலையை கடுமையாக குறைத்துள்ளது. தற்போது இது அறிமுக விலையில் இருந்து நேரடி விலை குறைப்பு மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட் என மொத்தம் 2 சலுகைகளின் கீழ் கிட்டத்தட்ட "பாதிக்கு பாதி" விலையில் வாங்க கிடைக்கிறது.
இந்த சலுகை தற்போது அமேசான் இந்தியாவில் கிடைக்கிறது, மேலும் இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் ஒரு லிமிடட் டைம் ஆபர் ஆகும். ஆக இது எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம். எனவே சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் மீது ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் வேகமாக செயல்பட வேண்டும்.

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் இயர்பட்ஸ் மாடல் ஆனது இப்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் வெறும் ரூ.3,899 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் மாடலின் அறிமுக விலையான ரூ.4999 இல் இருந்து ரூ1,100 நேரடி விலை குறைப்பை பிரதிபலிக்கிறது.
இதோடு சேர்த்து அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது ரூ.1,000 கூப்பனையும் வழங்குகிறது. ஆர்டர் செய்வதற்கு முன்பாக அமேசான் வழங்கும் ரூ.1000 கூப்பனை தேர்வு செய்வதன் மூலம் (எந்த பேங்க் அல்லது கிரெடிட் அல்லது டெபிட் கார்டும் இல்லாமலேயே) சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் மாடலின் விலையை ரூ.2,899 க்கு கொண்டுவர முடியும்.
முன்னரே குறிப்பிட்டப்படி இந்த ஆபர் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். இதோடு சேர்த்து சில கேஷ்பேக் மற்றும் வங்கி தள்ளுபடி சலுகைகளும் கூட அணுக கிடைக்கின்றன. இதன் கீழ் கேலக்ஸி பட்ஸ் கோர் மாடலின் விலையை உங்களால் முடிந்தவரை குறைக்க முடியும்
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் இயர்பட்ஸ் விரிவான அம்சங்கள்: சாம்சங்கின் இந்த லேட்டஸ்ட் இயர்பட்கள் வலுவான பாஸ் மற்றும் உயர்தர ஒலியை உறுதியளிக்கும் சிங்கிள்-ட்ரைவர் ஆடியோ சிஸ்டமை (Single-driver audio system) கொண்டுள்ளன. பேக்கிரவுண்ட் இரைச்சலில் இருந்து உங்கள் குரலை தனிமைப்படுத்துவதன் மூலம் கிளியர் ஆன கால்களை உறுதி செய்ய ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று மைக்ரோஃபோன்கள் பேக் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இதில் கேலக்ஸி ஏஐ (Galaxy AI) ஆல் இயக்கப்படும் இன்டர்ப்ரெட்டர் அம்சம் உள்ளது. சுவாரசியமாக இது நிகழ்நேர வாய்ஸ் கால் டிரான்ஸ்கிரிப்ஷன்களை (Real-time voice call transcriptions) வழங்கும். ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (ANC) மற்றும் ஆம்பியன்ட் சவுண்ட் அம்சங்களுடன் வரும் இந்த இயர்பட்ஸ் ஆனது உங்கள் "கேட்கும் அனுபவத்தை" மேம்படுத்துகிறது.
பேட்டரியை பொறுத்தவரை கேலக்ஸி பட்ஸ் கோர் ஆனது சார்ஜிங் கேஸுடன் பயன்படுத்தும்போது 35 மணிநேர பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. ANC இயக்கப்பட்டால், மொத்த பேட்டரி லைஃப் 20 மணிநேரம் ஆக இருக்கும். சார்ஜிங்கை பொறுத்தவரை யூஎஸ்பி -சி போர்ட் வழியாக சார்ஜ் செய்யலாம். மேலும் இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கை பெற்றுள்ளன.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர் இயர்பட்ஸ்-ல் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்ககளை பொறுத்தவரை இது பாதுகாப்பான பிடிமானத்திற்கான விங்டிப் டிசைனை கொண்டுள்ளது. மேலும் ப்ளூடூத் வி5.4, ஏஏசி (AAC), எஸ்பிசி (SBC) மற்றும் அளவிடக்கூடிய கோடெக்களுக்கான ஆதரவை கொண்டுள்ளது.
மேலும் டச் கண்ட்ரோல்கள், கேலக்ஸி டிவைஸ்களுடன் எளிமையான சின்க்கையும் வழங்கும். அளவீட்டில் 19.2×17.1×22.2மிமீ மற்றும் எடையில் 5.3 கிராம் உள்ளது. கேஸின் பரிமாணங்களை பொறுத்தவரை இது 50.0x 50.0×27.7மிமீ உள்ளது, எடையில் 31.2 கிராம் உள்ளது. கடைசியாக இது 500mAh பேட்டரியை கொண்டுள்ளது. இயர்பட்ஸ்களில் 65mAh பேட்டரி உள்ளது.


Click it and Unblock the Notifications








