Samsung Galaxy Buds 4 Pro மற்றும் Galaxy Buds 4 விலைகள் லீக் ஆனது.. எப்போது அறிமுகம்?
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆன கேலக்ஸி எஸ்26 சீரீஸின் விலை விவரங்கள் லீக் ஆன வேகத்தில் சாம்சங் நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களான கேலக்ஸி பட்ஸ் 4 (Samsung Galaxy Buds 4) மற்றும் கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோ (Samsung Galaxy Buds 4 Pro) ஆகியவைகளின் விலைகளும் லீக் ஆகியுள்ளன.
பில்பில்-குன் (Billbil-kun) வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவல்கள் - மேற்குறிப்பிட்ட சாம்சங்கின் 2 புதிய ஆடியோ தயாரிப்புகளின் விலை விவரங்கள் மற்றும் லான்ச் டைம்லைனை வெளிப்படுத்தியுள்ளது. சாம்சங் நிறுவனம் ஆனது அதன் பிளாக்ஷிப் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் அதே நேரத்தில் ஐரோப்பிய சந்தையில் கேலக்ஸி பட்ஸ் 4 மற்றும் கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோவை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம் சாம்சங் நிறுவனத்தின் அடுத்த பிரீமியம் போன்கள் பிப்ரவரி மாத இறுதியில் கேலக்ஸி அன்பேக்டு 2026 நிகழ்வின் போது உலகளவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங்கின் அடுத்த பட்ஸ் குறித்த புதிய லீக் ஆனது - கேலக்ஸி பட்ஸ் 4 சீரீஸ் ஆனது கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வரும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது
மேலும் கிடைக்கப்பெற்ற லீக்கின்படி, வடிவமைப்பு மற்றும் அம்சங்களில் எதிர்பார்க்கப்படும் மேம்படுத்தல்கள் இருந்தபோதிலும் சாம்சங் இந்த ஆண்டு விலையை உயர்த்தவில்லை. கேலக்ஸி பட்ஸ் 4 சுமார் 179 யூரோக்களுக்கு (இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.19,700) அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் பிரீமியம் கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோ ஆனது பிரான்ஸ் போன்ற முக்கிய ஐரோப்பிய சந்தைகளில் சுமார் 249 யூரோக்களுக்கு (இந்தியரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.27,400) அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி எஸ்26 சீரீஸ் விலைகள்: சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் (Galaxy S26 Series) ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதம் இந்தியாவிலும், உலக சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கேலக்ஸி எஸ்26 சீரீஸின் கீழ் உள்ள அனைத்து மாடல்களின் விலை நிர்ணயமு ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.
மைக்ரோபிளாக்கிங் தளமான ப்ளூஸ்க்கை சோஷியல் (Bluesky Social) வழியாக டிப்ஸ்டர் ரோலண்ட் குவாண்டின் பகிர்ந்துள்ள விவரங்களின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) மாடல் ஆனது கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடலை விட (இந்திய ரூபாய் மதிப்பின்படு) தோராயமாக ரூ.11,000 விலை குறைவாக இருக்கும். இந்த விலை மாற்றம் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 256GB மற்றும் 512GB ஆப்ஷன்களுக்கு பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ஐரோப்பாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,62,000 என்கிற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆக கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை தோராயமாக ரூ.1,51,000 க்கு தொடங்கலாம்.
இருப்பினும் டாப்-எண்ட் 1டிபி ஆப்ஷனின் விலை அதன் முன்னோடியை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது தோராயமாக ரூ. 2,04,000 ஆக இருக்கலாம். இதேபோல சாம்சங் கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்களின் விலைகள் அப்படியே இருக்கலாம் என்றும் டிப்ஸ்டர் கூறுகிறார்.
குறிப்பிடத்தக்க வண்ணம் ஐரோப்பாவில் கேலக்ஸி எஸ்25 மற்றும் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தோராயமாக ரூ.1,01,000 மற்றும் ரூ.1,28,000 என்கிற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆக
சாம்சங் கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்களும் இதே போன்ற விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








