Samsung சும்மா கிழி.. Galaxy Buds 4, Galaxy Buds 4 Pro விலைகள் லீக்.. பிப்.25 ஒரு சம்பவம் இருக்கு!
2026 ஆம் ஆண்டுக்கான சாம்சங் நிறுவனத்தின் முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு வருகிற பிப்ரவரி 25 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் உடன் சேர்த்து, தென் கொரிய தொழில்நுட்ப குழுமம் ஆன சாம்சங் அதன் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்களையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது கேலக்ஸி பட்ஸ் 4 சீரீஸ் மாடல்களாக இருக்கலாம். இதன்கீழ் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 4 மற்றும் கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோ என்கிற 2 மாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இவ்விரு மாடல்களின் டிசைனும் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

டிப்ஸ்டர் முகமது காத்ரி (@Mohammed_K_2010) எக்ஸ் தளம் வழியாக பகிர்ந்துள்ள புகைப்படங்களின்படி சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 4 ஆனது கீழ்நோக்கி நீட்டிக்கப்பட்ட குறுகிய ஸ்டெம்களுடன் க்ளீன் ஆன இன்-இயர் வடிவமைப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்டாண்டர்ட் மாடல் ஆனது இயர்பட்ஸ் மற்றும் சார்ஜிங் கேஸ் ஆகிய இரண்டிலும் பளபளப்பான பினிஷையும் பெற்றுள்ளது.
மேலும் லீக் ஆன ரெண்டர்கள் (புகைப்படங்கள்) வட்டமான விளிம்புகள் மற்றும் ஃபிளிப்-டாப் மூடியுடன் கூடிய சிறிய, சதுர வடிவ சார்ஜிங் கேஸையும் காட்டுகின்றன. இயர்பட்ஸ் ஆனது கேஸின் உள்ளே செங்குத்தாக அமர்ந்துள்ளன. மறுகையில் உள்ள கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோ மாடல் ஆனது அதிக பிரீமியம் லுக்கை வழங்குகிறது. மேட் அல்லது டூயல்-டோன் பினிஷை கொண்டிருப்பது போல் தெரிகிறது. குறிப்பாக ஸ்டெம்களில், மாறுபட்ட அசென்ட்களை கொண்டிருக்கலாம்.
இருப்பினும் ப்ரோ மாடலின் சார்ஜிங் கேஸ் ஆனது ஸ்டாண்டர்ட் மாடலை போலவே உள்ளது, ஆனால் அமைப்பு மற்றும் விவரங்களில் சிறிய சுத்திகரிப்புகளை உள்ளடக்கியிருக்கலாம். ப்ரோ மாடல் ஆனது கூடுதல் கட்அவுட்கள் அல்லது சென்சார் இடங்களை கொண்டிருப்பதாக தெரிகிறது, இது சில மேம்பட்ட திறன்களை வழங்கலாம்.
முன்னரே குறிப்பிட்டபடி - இந்த இரண்டு கேலக்ஸி பட்ஸ் 4 மாடல்களும் பிப்ரவரி 25 ஆம் தேதி கேலக்ஸி எஸ்26 சீரீஸ் உடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய அறிக்கைகளின்படி, நிலையான கேலக்ஸி பட்ஸ் 4 விலை தோராயமாக ரூ.19,200 ஆக இருக்கலாம், அதே நேரத்தில் கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோ தோராயமாக ரூ.26,600 க்கு அறிமுகம் செய்யப்படலாம்
இரண்டு மாடல்களுமே பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோ மூன்றாவது ஆப்ரிகாட் கலர் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்படலாம். இருப்பினும், இது சாம்சங் ஆன்லைன் ஸ்டோருக்கு பிரத்தியேகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? மைக்ரோபிளாக்கிங் தளமான ப்ளூஸ்க்கை சோஷியல் (Bluesky Social) வழியாக டிப்ஸ்டர் ரோலண்ட் குவாண்டின் பகிர்ந்துள்ள விவரங்களின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) மாடல் ஆனது கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடலை விட (இந்திய ரூபாய் மதிப்பின்படு) தோராயமாக ரூ.11,000 விலை குறைவாக இருக்கும்.
இந்த விலை மாற்றம் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 256GB மற்றும் 512GB ஆப்ஷன்களுக்கு பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ஐரோப்பாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,62,000 என்கிற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆக கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை தோராயமாக ரூ.1,51,000 க்கு தொடங்கலாம்.
இருப்பினும் டாப்-எண்ட் 1டிபி ஆப்ஷனின் விலை அதன் முன்னோடியை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது தோராயமாக ரூ. 2,04,000 ஆக இருக்கலாம். இதேபோல சாம்சங் கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்களின் விலைகள் அப்படியே இருக்கலாம் என்றும் டிப்ஸ்டர் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications