Samsung-ன் புதிய FE இயர்பட்ஸ் அறிமுகம்.. 30 மணிநேர பேட்டரி, ANC ஆதரவு, IP54 ரேட்டிங்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் சைலன்ட் ஆக அதன் புதிய இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது. அது சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 3 எப்இ (Samsung Galaxy Buds 3 FE) மாடல் ஆகும். கேலக்ஸி பட்ஸ் 3 சீரீஸில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் இயர்பட்ஸ் மாடல் ஆக நிலைநிறுத்தப்பட்டுள்ள கேலக்ஸி பட்ஸ் 3 எப்இ மாடலின் அம்சங்கள், விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்கள் இதோ:
ஏஎன்சி (ANC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (Active Noise Cancellation), 30 மணிநேர பேட்டரி லைஃப், ஸ்பேஷியல் ஆடியோ (Spatial Audio) மற்றும் பல பிரீமியம் அம்சங்களை கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 3 எப்இ ஆனது உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் வடிவமைப்பு விலை உயர்ந்த கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோவை போலவே தோன்றுகிறது, மேலும் சார்ஜிங் கேஸில் ஒளிஊடுருவக்கூடிய மேல் மூடியும் உள்ளது. இருப்பினும் எல்இடி ஸ்ட்ரிப் இல்லை. அதிகாரப்பூர்வ குறிப்புகளின்படி, சாம்சங்கின் கேலக்ஸி பட்ஸ் 3 எப்இ ஆனது புதிய டைனமிக் டிரைவர்களுடன் ஆழமான பாஸ் மற்றும் தெளிவான ட்ரெபிளுடன் மேம்பட்ட கேட்கும் அனுபவத்தை வழங்குகிறது.
மேலும் தெளிவான கால்களுக்கு கிரிஸ்டல் கால் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. கேலக்ஸி பட்ஸ் 3 மாடலை போலல்லாமல், இது சிலிக்கான் இயர்டிப்ஸ் மற்றும் ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (ANC) ஆகியவற்றை பெறுவீர்கள். இந்த பட்ஜெட் விலை TWS இல் உள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், ரியல்டைம் இன்டர்ப்ரேஷன் போன்ற அம்சங்களுக்கான கேலக்ஸி ஏஐ ஒருங்கிணைப்பு ஆகும்.
இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், இயர்பட்ஸ் ஆனது ANC இயக்கப்பட்ட நிலையில் 30 மணிநேர பேட்டரி லைஃப்பையும், ANC முடக்கப்பட்ட நிலையில் 24 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்பையும் வழங்கும் என்று சாம்சங் நிறுவனம் கூறுகிறது.
குறிப்பிடத்தக்க மற்ற அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 3 எப்இ ஆனது ப்ளூடூத் 5.4, நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP54 ரேட்டிங் மற்றும் தடையற்ற மல்டிபிள் இணைப்பிற்கான ஆட்டோ ஸ்விட்ச் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 3 எப்இ மாடலின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இதன் முதல் விற்பனை செப்டம்பர் 5 ஆம் தேதி அன்று அமெரிக்காவில் தொடங்குகிறது. இது 150 அமெரிக்க டாலர்கள் (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.13,100) என்கிற விலையின் கீழ் இரண்டு கலர் ஆப்ஷன்களில் - க்ரே மற்றும் பிளாக்
சாம்சங் தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி (Samsung Galaxy A17 5G) ஸ்மாட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அறிமுகத்திற்கு முன்னதாக, ஒரு டிப்ஸ்டர் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலைகளை லீக் செய்துள்ளார். அதன்படி இந்த ஸ்மார்ட்போன் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வரக்கூடும்
டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ்வின் எக்ஸ் தள பதிவின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6GB RAM மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இதேபோல 8GB RAM + 128GB ஆப்ஷன் மற்றும் 8GB RAM + 256GB ஆப்ஷன்கள் முறையே ரூ.20,499 மற்றும் ரூ.23,499 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்த லீக் - சாம்சங் நிறுவனம் விரைவில் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட உள்ளதை குறிக்கிறது.


Click it and Unblock the Notifications