புது SAMSUNG லேப்டாப்.. 16GB ரேம்.. FHD டிஸ்பிளே.. இன்டல் கோர் அல்ட்ரா 7.. விண்டோஸ் 11 ஹோம்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி புக்5 (Galaxy Book5) களமிறங்கி இருக்கிறது. இன்டல் கோர் அல்ட்ரா 7 ப்ராசஸர் மட்டுமல்லாமல், விண்டோஸ் 11 ஹோம் ஓஎஸ், ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. சாம்சங் கேலக்ஸி எக்ஸ்பீரியன்ஸ் சூட் மற்றும் கேலக்ஸி ஏஐ பீச்சர்களுடன் கிடைக்கும் இந்த சாம்சங் கேலக்ஸி புக்5 லேப்டாப்பின் முழு பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் நிறுவனத்தின் ஏஐ லேப்டாப் மாடல்களில் இந்த மாடலும் சேர்ந்துள்ளது. கேலக்ஸி ஏஐ பீச்சர்களின் கீழ் வழக்கமாக கிடைக்கும் சர்கிள் டூ சர்ச் (Circle to Search) மட்டுமல்லாமல், ஏஐ செலக்ட் (AI Select) மற்றும் போட்டோ ரீமாஸ்டர் (Photo Remaster) போன்ற பீச்சர்களும் கிடைக்கிறது. இதுபோக விண்டோஸ் மாடல்களில் கிடைக்கும் கோபைலட் (Copilot) ஏஐ அசிஸ்டன்ட் கிடைக்கிறது.

இதை எளிதாக அக்சஸ் செய்ய ஹாட் கீ (Hot Key) கிடைக்கிறது. மேலும், கேலக்ஸி புக் சீரிஸ்களில் கிடைக்கும் மல்டி கன்ட்ரோல் (Multi Control), செகண்ட் ஸ்கிரீன் (Second Screen), சாம்சங் நோட்ஸ் (Samsung Notes), குயிக் ஷேர் (Quick Share), ஸ்மார்ட்திங்க்ஸ் (SmartThings), பிக்ஸ்பை (Bixby), சாம்சங் ஃபைண்ட் (Samsung Find), சாம்சங் ஸ்டூடியோ (Samsung Studio) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.
சாம்சங் கேலக்ஸி புக்5 அம்சங்கள் (Samsung Galaxy Book5 Specifications): இந்த புக்5 லேப்டாப்பில் இன்டல் கோர் அல்ட்ரா 7 255யு (Intel Core Ultra 7 255U) ப்ராசஸர் மற்றும் விண்டோஸ் 11 ஹோம் (Windows 11 Home) ஓஎஸ் கிடைக்கிறது. வொர்க்கிங் அவுட்புட் கொடுக்கும்படி இன்டர் கிராபிக்ஸ் (Intel Graphics) மட்டும் கிடைக்கிறது. இன்டல் ஏஐ பூஸ்ட் (Intel AI Boost) கிடைக்கிறது.
செக்யூரிட்டியை பார்க்கையில் டிபிஎம் செக்யூரிட்டி சிலாட் (Security Slot TPM) மற்றும் ஃபிங்கர்பிரிண்ட் ரீடர் (FingerPrint Reader) கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி புக்5 லேப்டாப்பில் 15.6 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் மற்றும் ஆன்டி-கிளார் (Anti-Glare) சப்போர்ட் கிடைக்கிறது.

மேலும், 1080p ரெசொலூஷன் கொடுக்கும்படி ஃபுல்எச்டி கேமரா கிடைக்கிறது. 16 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ரேம் ஆப்ஷன்கள் உள்ளது. 1 டிபி ஸ்டோர்ஜ் கொடுக்கும்படி என்விஎம்இ எஸ்எஸ்டி டிரைவர்கள் கிடைக்கிறது. 2 எஸ்எஸ்டி சிலாட் கிடைக்கின்றன. ஆப்டிகல் டிரைவ் (Optical Drive) கிடையாது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளது.
இந்த ஸ்பீக்கர்கள் மூலம் 2W ஆடியோ அவுட் பெற்று கொள்ளலாம். 2 ஸ்பீக்கர்கள் வருகிறது. டூயல் அரேய் டிஜிட்டல் மைக் (Dual Array Digital Mic) கிடைக்கிறது. கனெக்டிவிட்டியை பார்க்கையில், பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் வி5.2 (Bluetooth v5.2) மற்றும் ஜிகாபைட் ஈதர்நெட் (Gigabit Ethernet) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
45W யுஎஸ்பி அடாப்டர் மற்றும் 61.2Wh பேட்டரி சப்போர்ட் கிடைக்கிறது. எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, டைப்-சி போர்ட்கள் இருக்கின்றன. இதில் இன்டல் கோர் அல்ட்ரா 5 ப்ராசஸர் மாடலும் இருக்கிறது. ஆனால், இப்போது, இன்டல் கோர் அல்ட்ரா 7 255யு மாடல் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,19,990ஆக இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








