Home
Gadgets

இவரு வேற மாதிரி.. 15.6 இன்ச் டிஸ்பிளே.. 16GB ரேம்.. 65W சார்ஜர்.. புது கேலக்ஸி புக்4 எட்ஜ்.. விலை எப்படி?

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி புக்4 எட்ஜ் (Galaxy Book4 Edge) லேப்டாப்பின் 15 இன்ச் டிஸ்பிளே மாடல் இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மாடல்கள் வெளியாகி இருந்தது. இப்போது, 15 இன்ச் மாடல் களமிறங்கி இருக்கிறது. லைட்வெயிட் டிசைனில் பிரீமியம் பீச்சர்களை கொடுக்கும் இந்த கேலக்ஸி புக்4 எட்ஜ் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சப்பயர் ப்ளூ (Sapphire Blue) கலரில் லைட்வெயிட் சேசிஸ் (Lightweight Chassis) கொடுக்கிறது. 1.5 எடை மட்டுமே வருகிறது. ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor), பிங்கர்பிரிண்ட் ரீடர் (FingerPrint Reader), செக்யூரிட்டி சிலாட் டிபிஎம் (Security Slot TPM) கொடுக்கிறது. மேலும், சாம்சங் கிநாக்ஸ் செக்யூரிட்டி (Samsung Knox Security), மைக்ரோசாப்ட் கோபைலட் (Microsoft Copilot) உள்ளது.

இவரு வேற மாதிரி.. 15.6 இன்ச் டிஸ்பிளே.. 16GB ரேம்.. 65W சார்ஜர்!

சாம்சங் கேலக்ஸி புக்4 எட்ஜ் அம்சங்கள் (Samsung Galaxy Book4 Edge Specifications): இந்த சாம்சங் லேப்டாப்பில் விண்டோஸ் 11 ஹோம் (Windows 11 Home) ஓஎஸ் கொண்ட 8 கோர் ஸ்னாப்டிராகன் எக்ஸ் - எக்ஸ்1-36-100 (8 Core Snapdragon X - X1-26-100) ப்ராஸசர் கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் கேமிங் அவுட்புட் கொடுக்கும்படி குவால்காம் அட்ரினோ ஜிபியு (Qualcomm Adreno GPU) கிராபிக்ஸ் கிடைக்கிறது.

இதுபோக குவால்காம் ஹெக்ஸாகான் என்பியு (Qualcomm Hexagon NPU) கிடைக்கிறது. மைக்ரோசாப்ட் கோபைலட் + பிசி மட்டுல்லாமல், கேலக்ஸி ஏஐ (Galaxy AI) பீச்சர்களையும் கொடுக்கிறது. ஆகவே, ரீகால் (Recall), லைவ் டிரான்ஸ்லேஷன் (Live Translation), சாட் அசிஸ்ட் (Chat Assist), கேலக்ஸி ஏஐ போன் (Galaxy AI Phone) போன்ற பல்வேறு ஏஐ பீச்சர்களை கொடுக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி புக்4 எட்ஜ் லேப்டாப்பில் 15.6 (1920 x 1080 பிக்சல்கள்) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் மற்றும் ஆன்டி-கிளார் (Anti-Glare) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 2 எம்பி கேமரா வருகிறது. எச்டி (HD) ரெசொலூஷன் கொடுக்கிறது. 16 ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கிறது.

இவரு வேற மாதிரி.. 15.6 இன்ச் டிஸ்பிளே.. 16GB ரேம்.. 65W சார்ஜர்!

இதில் ஆப்டிகல் டிரைவ் (Optical Drive) கிடையாது. ஆடியோ பீச்சர்களை பார்க்கையில், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டூயல் அரேய் டிஜிட்டல் மைக் (Dual Array Digital Mic) கிடைக்கிறது. அதேபோல கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை 7 (Wi-Fi 7) டூயல் மற்றும் ப்ளூடூத் வி5.4 (Bluetooth v5.4) சப்போர்ட் கிடைக்கிறது.

எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB), மைக்ரோஎஸ்டி ரீடர் (MicroSD Reader) மற்றும் ஹெட்போன்/மைக் காம்போ ஜாக் (Headphone/mic Combo Jack) கிடைக்கிறது. நியூமரிக் கீ (Numeric key) கொண்ட ப்ரோ கீபோர்ட் (Pro Keyboard) மற்றும் கிளிக் பேட் (Clickpad) கிடைக்கிறது. 65W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட டைப்-சி அடாப்டர் (Type-C Adapter) கிடைக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி புக்4 எட்ஜ் 15 இன்ச் மாடலின் விலை ரூ.64,990ஆக இருக்கிறது. இப்போது, ரூ.5,000 அறிமுக சலுகையில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. சாம்சங் வெப்சைட், பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் ஷாப் ஆப் ஆகியவற்றில் கிடைக்கிறது. மேலும், ரீடெயில் ஸ்டோர்கள் மற்றும் அவுட்லெட்களில் கிடைக்கிறது. ஆபீஸ் செல்வோருக்கு ஏற்றது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Book4 Edge With 15 inch Display Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X