Home
Gadgets

நெருப்பை உடனே அணைக்கும் அழகிய பூ ஜாடியை வெளியிட்ட சாம்சங்.!

சாம்சங் நிறுவனம் நெருப்பை அணைக்கும் புதிய ஃபையர் வேஸ் ஒன்றை உருவாகியுள்ளது.

அண்மையில் நெருப்பு தொடர்பான செய்திகளில் சாம்சங் நிறுவனம் அதிகம் சிக்கியது. முக்கியமாக சில ஸ்மார்ட்போன் மாடல்கள் வெடித்து சேதம் அடைந்தது. தற்பொழுது சாம்சங் நிறுவனம் நெருப்பை அணைக்கும் புதிய ஃபையர் வேஸ் ஒன்றை உருவாகியுள்ளது.

 புதிய ஃபையர் வேஸ்

புதிய ஃபையர் வேஸ்

அழகிய பூ ஜாடிகளைத் தான் ஆங்கிலத்தில் வேஸ் என்று அழைப்பார்கள். இந்த புதிய ஃபையர் வேஸ், கண்ணாடி போன்ற பிவிசி ரெட் டியூப் போன்ற வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜாடியின் நடுவில் மட்டும் ஒரு இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பூ அல்லது செடிகளை வளர்த்துக்கொள்ளலாம்.

உயிர்களைக் காப்பாற்றும் வல்லமை

உயிர்களைக் காப்பாற்றும் வல்லமை

சந்தையில் விற்கப்படும் அழகி பூ ஜாடிகளிலிருந்து சாம்சங் நிறுவனம் தயாரித்துள்ள, இந்த பூ ஜாடிக்கு என்ன தனிச் சிறப்பு என்றால், தீ விபத்து ஏற்படும் நேரத்தில், இந்த ஒரு பூ ஜாடி ஏகப்பட்ட உயிர்களைக் காப்பாற்றும் வல்லமை கொண்டது என்று சாம்சங் தெரிவித்துள்ளது.

பொட்டாசியம் கார்போனேட்

பொட்டாசியம் கார்போனேட்

இந்த பூ ஜாடியில், நெருப்பை உடனே கட்டுப்படுத்தக் கூடிய பொட்டாசியம் கார்போனேட் நிரப்பப்பட்டுள்ளது. இந்த பொட்டாசியம் கார்போனேட் திரவம் ஆக்சிஜனின் அழுத்தத்தைக் குறைத்து மற்றும் குளிர்வித்து, நெருப்பைப் பரவவிடாமல் உடனே கட்டுப்படுத்தி அணைத்துவிடுகிறது.

பாராட்டு

பாராட்டு

இந்த பூ ஜாடியை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியுமா? இதனைப் பயன்படுத்துதல் மிகவும் எளிது, நெருப்பு இருக்கும் திசையை நோக்கி வேகமாகத் தூக்கி எறிந்தாள் போதும். ஜாடியினில் உள்ள திரவம் வெளியே சிதறி நெருப்பை அணைத்துவிடும். சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய கண்டுபிடிப்பிற்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Samsung develops throwable vase doubles fire extinguisher : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X