Home
Gadgets

இவ்ளோ தானா? வீட்டுல வாங்கி மாட்டுங்க.. வெறும் ரூ.30,000 பட்ஜெட்.. சாம்சங் கிரிஸ்டல் விஷன் 4K டிவி!

இந்திய ஸ்மார்ட் டிவி பிரியர்களை அடிச்சி புடிச்சி வாங்க வைக்கும் வகையில், சாம்சங் நிறுவனம், வெறும் ரூ.30,000 பட்ஜெட்டில் சாம்சங் கிரிஸ்டல் விஷன் 4கே டிவியை (Samsung Crystal Vision 4K TV) அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

நம்மில் பலருக்கு டிவி என்றாலே, சாம்சங் பிராண்ட் மட்டுமே நினைவுக்கு வரும். ஏனென்றால், அந்த டிவிகளின் தரம் மற்றும் டிஸ்பிளே குவாலிட்டி வேற லெவலில் இருக்கும். இதன் காரணமாகவே, அந்த டிவிகளின் விலை மற்ற டிவிகளைவிட சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும், அந்த பிராண்ட் டிவியை ஆஃபர் விலையிலாவது வாங்கிவிட வேண்டும் என்று நிறைய பேர் காத்திருப்பார்கள்.

வெறும் ரூ.30,000 பட்ஜெட்.. சாம்சங் கிரிஸ்டல் விஷன் 4K டிவி!

இவர்களுக்காகவே, சாம்சங் நிறுவனம் சாம்சங் கிரிஸ்டல் விஷன் 4கே டிவியை இன்று (ஆகஸ்ட் 4) அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவி எல்இடி டிஸ்பிளே, டைசன் ஸ்மார்ட் டிவி ஓஎஸ், எச்டிஆர்10 பிளஸ் சப்போர்ட் உள்ளிட்ட பல பிரம்மாண்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த டிவியின் முழு அம்சங்கள் என்ன? எங்கு ஆர்டர் செய்வது? ஆகிய விவரங்கள் பின்வருமாறு.

சாம்சங் கிரிஸ்டல் விஷன் 4கே டிவி அம்சங்கள் (Samsung Crystal Vision 4K TV Specifications): இந்த சாம்சங் கிரிஸ்டல் டிவி 43 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் ஆகிய மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த டிவி 4கே எல்இடி (3840 x 2160 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டதாகும்.

இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), 50Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்எல்ஜி (HLG) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாம்சங் டிவியில் டைசன் ஸ்மார்ட் டிவி (Tizen Smart TV) ஓஎஸ் கொண்ட கிரிஸ்டல் பிராசஸர் 4கே (Crystal Processor 4K) சிப்செட் வருகிறது.

20W மற்றும் 2CH ஆடியோ அவுட்புட் வருகிறது. மல்டி வாய்ஸ் அசிஸ்டன்ட் (Multi Voice Assistant), வீடியோ காலிங் செய்ய ஸ்லிம்பிட் கேமரா (SlimFit Cam), சோலார் ரிமோட் (Solar Remote), ஐஓடி ஹப் (IoT Hub), ஐஓடி லைட் சென்சார்கள் (IoT Light Sensors) உள்ளிட்ட ஸ்மார்ட் அம்சங்கள் இருக்கின்றன.

குறிப்பாக, இந்த சாம்சங் டிவியில் அலெக்சா (Alexa), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant )மற்றும் பிக்ஸ்பி (Bixby) ஆகியவற்றை ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். 3டி சரவுண்ட் சவுண்டிங் அனுபவத்துக்காக 2 விர்ச்சுவல் ஸ்பீக்கர்களுடன் ஒடிஎஸ் லைட் (OTS Lite) கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதோடு டைனமிக் சவுண்ட் எஃபெக்ட்டுக்காக அடாப்டிவ் சவுண்ட் சப்போர்ட் வருகிறது. கேமிங் அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஆட்டோ கேம் மோட் (Auto Game Mode) மற்றும் மோஷன் எக்ஸ்சலரேட்டர் (Motion Xcelerator) வருகிறது. இந்த டிவியின் சவுண்ட்பாரில் கியூ-சிம்பொனி (Q-Symphony) சப்போர்ட் உள்ளது.

மேலும், மூன்று எச்டிஎம்ஐ போர்ட், ஒரு யூஸ்பி போர்ட், டிஜிட்டல் ஆடியோ அவுட்புட் ஜாக், ஆர்எஃப் (RF) ஆகியவை வருகின்றன. ப்ளூடூத் வி5.2 மற்றும் வை - பை கனெக்டிவிட்டி வருகிறது. இந்த டிவிகளின் விலை ரூ.30,000 பட்ஜெட்டில் இருந்து தொடங்குகிறது.

அந்த வகையில், 43 இன்ச் மாடலின் விலை ரூ.31,490 ஆகவும், 55 இன்ச் மாடலின் விலை ரூ.46,990 ஆகவும், 65 இன்ச் மாடலின் விலை ரூ.71,990 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவிகளை பிளிப்கார்ட் (Flipkart), சாம்சங்.காம் (Samsung.com) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

இந்த டிவிகளுக்கு 2 ஆண்டுகள் வாரண்ட்டி வழங்கப்படுகிறது. அதில் 2ஆவது ஆண்டு வாரண்ட்டி பேனல் கோளாறுகளுக்கு மட்டும் செல்லுப்படியாகும். ரூ.30,000 பட்ஜெட்டில் நல்ல டிஸ்பிளே கொண்ட கம்பெனி டிவி வாங்க வேண்டும் என்றால், இந்த சாம்சங் கிரிஸ்டல் விஷன் 4கே டிவியை வாங்கிக் கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Crystal Vision 4K UHD TV Launched in India, Check Price, Specifications, Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X