கிடுகிடுவென குறைந்த Samsung 4கே டிவி விலை.. பியூர் கலர்.. Q-சிம்பொனி ஆடியோ.. 8ஜிபி மெமரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கிரிஸ்டல் 4கே விவிட் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி (Samsung Crystal 4K Vivid 43 inch Smart TV) தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ஸ்மார்ட் டிவி அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவி வழங்கப்பட்ட சலுகைகளைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் UA43DUE70BKLXL மாடல் நம்பர் கொண்ட சாம்சங் கிரிஸ்டல் 4கே விவிட் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 37 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.25,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.23990 விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கிரிஸ்டல் 4கே விவிட் 43 இன்ச் டிவி அம்சங்கள் (Samsung Crystal 4K Vivid 43 inch TV Specifications): கிரிஸ்டல் பிராசஸர் 4கே (Crystal Processor 4K) சிப்செட் உடன் இந்த சாம்சங் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு டைசன் ஓஎஸ் (Tizen OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது.
அதுவும் 4கே அல்ட்ர எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்கள், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), 50Hz ரெஃப்ரெஷ் ரேட், பியூர் கலர் (Pure Color) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
கியூ-சிம்பொனி (Q-Symphony), அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound), ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் (Object Tracking Sound) உள்ளிட்ட பல ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. மேலும் 20W ஆடியோ அவுட்புட் வருகிறது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
2ஜிபி ரேம், 8ஜிபி மெமரி, மல்டி வாய்ஸ் அசிஸ்டன்ட் (Multi Voice Assistant), ஸ்மார்ட் ரிமோட், ஐஓடி ஹப் (IoT Hub), ஐஓடி லைட் சென்சார்கள் (IoT Light Sensors) உள்ளிட்ட ஸ்மார்ட் அம்சங்கள் இந்த சாம்சம் டிவியில் உள்ளன.
சாம்சங் கிரிஸ்டல் 4கே விவிட் 43 இன்ச் டிவியில் அலெக்சா (Alexa), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant ) மற்றும் பிக்ஸ்பி (Bixby) ஆகியவற்றை ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். 3டி சரவுண்ட் சவுண்டிங் அனுபவத்துக்காக 2 விர்ச்சுவல் ஸ்பீக்கர்களுடன் ஒடிஎஸ் லைட் (OTS Lite) கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த டிவியில் மேம்பட்ட கேமிங் அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஆட்டோ கேம் மோட் (Auto Game Mode) மற்றும் மோஷன் எக்ஸ்சலரேட்டர் (Motion Xcelerator)வருகிறது. இதுதவிர பல சிறப்பான கேமிங் அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.
எச்டிஎம்ஐ போர்ட், ஒரு யூஸ்பி போர்ட், ஈதர்நெட், டிஜிட்டல் ஆடியோ அவுட்புட் ஜாக், ஆர்எஃப் (RF) ஆகியவை வருகின்றன. ப்ளூடூத் மற்றும் வை - பை கனெக்டிவிட்டி வருகிறது. அதேபோல் ஆட்டோ பவர் ஆஃப், ஸ்கிரீன் மிரரிங் (screen mirroring) உள்ளிட்ட அம்சங்களும் இந்த அசத்தலான சாம்சங் டிவி வெளிவந்துள்ளது. நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், யூட்யூப், பிரைம் வீடியோ உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








