Flipkart குடியரசு தின விற்பனை.. Samsung 55 இன்ச் டிவியின் விலை குறைப்பு.. HDR 10 பிளஸ்.. எந்த மாடல்?
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. மேலும் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் 55 இன்ச் டிவி ஒன்றும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 55 இன்ச் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டைஸன் டிவி 2025 (Samsung Crystal 4K Vista 55 inch Smart Tizen TV 2025) மாடல் கடந்த மாதம் ரூ.39,990 விலை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த டிவியின் விலை குறைக்கப்பட்டு ரூ.37,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.36490 விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 55 இன்ச் டிவி 2025 அம்சங்கள் (Samsung Crystal 4K Vista 55 inch Smart Tizen TV 2025 Specifications): இந்த சாம்சங் 55 டிவி 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேலில் 3840 x 2160 பிக்சல்ஸ், 50Hz ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், பியூர் கலர் (Pure Color), மெகா கான்ட்ராஸ்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
எச்எல்ஜி, அல்ட்ராஎச்டி டிம்மிங் (UHD Dimming), 4K அப்ஸ்கேலிங் (4K Upscaling), கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Contrast Enhancer), கலர் பூஸ்ட்டர் போன்ற அம்சங்களுடன் இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 55 இன்ச் ஸ்மார்ட் டிவி 2025 வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
அதேபோல் ஒன் யுஐ டைசன் ஓஎஸ் மூலம் சாம்சங் 55 இன்ச் டிவி இயங்குகிறது. ஆனால் இந்த டிவிக்கு 7 ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். குறிப்பாக இந்த ஓஸ் மூலம் அலெக்சா (Alexa) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் கிடைக்கும். பின்பு சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) அக்சஸ் கிடைக்கிறது. அதேபோல வெப் பிரவுசர் (Web Browser), ஸ்மார்ட்திங்க்ஸ் ஹப் (SmartThings Hub), மேட்டர் ஹப் (Matter Hub) சப்போர்ட் வருகிறது. மொபைல் டூ டிவி மிரரிங், சவுண்ட் மிரரிங் (Sound Mirroring), வயர்லெஸ் டிவி ஆன் (Wireless TV On) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவியில் கிடைக்கிறது.
ஏர்பிளே (AirPlay) சப்போர்ட், கரோக்கி மைக் (Karaoke Mic), பட்ஸ் ஆட்டோ ஸ்விட்ச் (Buds Auto Switch), வொர்க் அவுட் டிராக்கர் (Workout Tracker) சப்போர்ட், ஐஓடி-சென்சார் ( IoT-Sensor) உள்ளிட்ட ஆதரவுகளும் இந்த சாம்சங் டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த டிவியின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியும் இந்த சாம்சங் டிவியில் உள்ளது. எம்டிஎம்ஐ ( HDMI), யுஎஸ்பி-A போர்ட்கள் ( USB-A ports), வைஃபை, ஈதர்நெட், 1 டிஜிட்டல் ஆடியோ அவுட் போர்ட், 1 RF இன், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 55 இன்ச் ஸ்மார்ட் டிவியில் உள்ளன.
தனித்துவமான கியூ-சிம்பொனி (Q-Symphony), அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. மேலும் ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite) மற்றும் ப்ளூடூத் ஆடியோ (Bluetooth Audio) உடன் சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 55 இன்ச் ஸ்மார்ட் டிவி 2025 வெளிவந்துள்ளது.
photo credits: Samsung India, deccanherald


Click it and Unblock the Notifications








