வீட்டுக்கு 2 டிவி.. 23 சதவீத ஆஃபரில் 50 இன்ச் டிவி.. டைசன் டிவி ஓஎஸ்.. HDR 10+ வீடியோ.. கியூ-சிம்பொனி ஆடியோ!
சாம்சங் நிறுவனத்தின் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. டிஸ்பிளே மற்றும் ஆடியோ குவாலிட்டியில் பிரீமியம் அனுபவம் கிடைப்பதால், விற்பனையிலும் பட்டையை கிளப்பி வருகிறது. இதில் சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 50 இன்ச் (Samsung Crystal 4K Vista 50 inch TV) டிவி தள்ளுபடியில் கிடைப்பதால், அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டு வருகிறது.
7 ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கும் இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 50 இன்ச் அல்ட்ரா எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி (Samsung Crystal 4K Vista 50 inch Ultra HD LED Smart Tizen TV) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 23 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி போக ரூ.38,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கிறது.

சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 50 இன்ச் டிவி அம்சங்கள் (Samsung Crystal 4K Vista 50 inch TV Specifications): கிரிஸ்டல் ப்ராசஸர் 4கே (Crystal Processor 4K) மற்றும் 2 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரியை இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 50 இன்ச் அல்ட்ரா எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி கொடுத்துள்ளது. சாம்சங் டைசன் டிவி ஓஎஸ் (Samsung Tizen TV OS) கொண்ட மாடலாக இருக்கிறது.
ஆகவே, சாம்சங் க்நாக்ஸ் செக்யூரிட்டி (Samsung Knox Security), ஸ்மார்ட்திங்க்ஸ் (SmartThings) கொடுக்கப்படுகிறது. 7 வருடங்களுக்கு இலவச ஓஎஸ் அப்டேட்களை பெற்று கொள்ளலாம். மேலும், ஒன் யுஐ டைசன் (One UI Tizen) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.
20W ஆடியோ அவுட்புட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 50 இன்ச் அல்ட்ரா எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி இருக்கிறது. இதில் ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite), கியூ-சிம்பொனி (Q-Symphony), ப்ளூடூத் ஆடியோ (Bluetooth Audio) மற்றும் அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) ஆகிய ஆடியோ டெக்னாலஜிகள் கிடைக்கின்றன.
50 இன்ச் எல்இடி டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவில் 4கே அல்ட்ரா எச்டி ரெசொலுஷன் கிடைக்கிறது. மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), ப்யூர் கலர் (Pur Color), 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. கலர் பூஸ்டர் (Color Booster) கிடைக்கின்றன. மெகா கான்ட்ராஸ்டு (Mega Contrast), கான்ஸ்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Contrast Enhancer) உள்ளது.
இதுபோக எச்எல்ஜி (HLG), அல்ட்எச்டி டிம்மிங் (UHD Dimming), ஃபிலிம் மோட் (Film Mode) மற்றும் ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode) உள்ளிட்ட பீச்சர்களையும் இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 50 இன்ச் அல்ட்ரா எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி கொடுத்துள்ளது. 178 டிகிரி வியூ ஆங்கிள் வருகிறது. பேக்லிட் எல்இடி (Backlit LED) மாடலாக உள்ளது.
செட்-டாப் பாக்ஸ், டிடிஎச், சவுண்ட்பார், ஹோம் தியேட்டர், கேமிங் கன்சோல் உள்ளிட்டவைக்கு 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports) கிடைக்கின்றன. யுஎஸ்பி-ஏ போர்ட் (USB-A Port) உள்ளது. மேலும், வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஈதர்நெட் எல்ஏஎன் போர்ட் (Ethernet LAN Port) உள்ளது. வழக்கமாக கிடைக்கும் ஸ்கிரீன் மிரரிங் கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications