நேரம் பார்த்து அடித்த பிளிப்கார்ட்.. நம்ப முடியாத ஆஃபரில் Samsung 4கே டிவி.. Q-சிம்பொனி ஆடியோ.. எந்த மாடல்?
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் கோட் சேல் 2026 (Flipkart GOAT Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 43 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி(Samsung Crystal 4K Vista 43 inch Ultra HD Smart Tizen TV) மாடலுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.4300 தள்ளுபடி கிடைக்கும். ஆகவே இந்த டிவியை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 43 இன்ச் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Samsung Crystal 4K Vista 43 inch TV Specifications): இந்த சாம்சங் 43 இன்ச் டிவி 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேலில் 3840 x 2160 பிக்சல்ஸ், 50Hz ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், பியூர் கலர் (Pure Color), மெகா கான்ட்ராஸ்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
4K அப்ஸ்கேலிங் (4K Upscaling), கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Contrast Enhancer), எச்எல்ஜி, அல்ட்ராஎச்டி டிம்மிங் (UHD Dimming), கலர் பூஸ்ட்டர் போன்ற அம்சங்களுடன் இந்த சாம்சங் 43 இன்ச் டிவி வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
சாம்சங் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி கிரிஸ்டல் பிராசஸர் 4கே (Crystal Processor 4K) ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மோஷன் எக்ஸ்சலரேட்டர் (Motion Xcelerator), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), ஃபிலிம் மோட் (Film Mode) உள்ளிட்ட அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.
ஒன் யுஐ டைசன் ஓஎஸ் மூலம் சாம்சங் 43 இன்ச் டிவி இயங்குகிறது. குறிப்பாக இந்த ஓஸ் மூலம் அலெக்சா (Alexa) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் கிடைக்கும். பின்பு சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) அக்சஸ் கிடைக்கிறது. அதேபோல வெப் பிரவுசர் (Web Browser), ஸ்மார்ட்திங்க்ஸ் ஹப் (SmartThings Hub), மேட்டர் ஹப் (Matter Hub) சப்போர்ட் வருகிறது. மொபைல் டூ டிவி மிரரிங், சவுண்ட் மிரரிங் (Sound Mirroring), வயர்லெஸ் டிவி ஆன் (Wireless TV On) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவியில் கிடைக்கிறது.
ஏர்பிளே (AirPlay) சப்போர்ட், கரோக்கி மைக் (Karaoke Mic), பட்ஸ் ஆட்டோ ஸ்விட்ச் (Buds Auto Switch), வொர்க் அவுட் டிராக்கர் (Workout Tracker) சப்போர்ட், ஐஓடி-சென்சார் ( IoT-Sensor) உள்ளிட்ட ஆதரவுகளும் இந்த சாம்சங் டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த டிவியின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound), கியூ-சிம்பொனி (Q-Symphony) ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. மேலும் ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite) மற்றும் ப்ளூடூத் ஆடியோ (Bluetooth Audio) உடன் சாம்சங் 43 இன்ச் 4கே விஸ்டா அல்ட்ரா எச்டி டிவி வெளிவந்துள்ளது.
எம்டிஎம்ஐ ( HDMI), யுஎஸ்பி-A போர்ட்கள் ( USB-A ports), வைஃபை, ஈதர்நெட், 1 டிஜிட்டல் ஆடியோ அவுட் போர்ட், 1 RF இன், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் 43 இன்ச் டிவியில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் டிவி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications