Home
Gadgets

பட்ஜெட் விலையில் கிரிஸ்டல் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து மாஸ் காட்டிய Samsung.!

சாம்சங் நிறுவனம் அசத்தலான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால், சிறந்த தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் சாம்சங் சாதனங்கள் வெளிவருகின்றன.

இந்நிலையில் சாம்சங் நிறுவனம் புதிய சாம்சங் கிரிஸ்டல் 4கே ஐஸ்மார்ட் 2023 யுஎச்டி டிவிகளை (Samsung Crystal 4K iSmart 2023 UHD TVs) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் தரமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளன.

கிரிஸ்டல் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து மாஸ் காட்டிய Samsung.!

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட் டிவிகள் 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் என்கிற நான்கு அளவுகளில் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் ஸ்லிம் லுக், பெசல்-லெஸ் டிசைன் மற்றும் பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே ஐஸ்மார்ட் 2023 யுஎச்டி டிவிகள் ஆனது 4கே டிஸ்பிளே, 3,840 x 2,160 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளன. குறிப்பாக 1 பில்லியன் கலர், எச்டிஆர், எச்டிஆர் 10 பிளஸ், எச்எல்ஜி உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளன இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட் டிவிகள்.

குறிப்பாக இந்த டிவிகள் OTT நிகழ்ச்சிகளை முழுமையான 4k தரத்தில் காட்டும். இதில் கூடுதலாக நமக்கு HDR+ (High Dynamic Range) இருப்பதால் அதிகப்படியான பிரைட்னஸ் அளவு நமக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திரையில் இருக்கும் சிறு விஷயங்கள் கூட மிக சிறந்த தரத்தில் நமக்கு தெரியும். இதில் உள்ள PurColor டெக்னாலஜி 1 பில்லியன் கலர்களை இணைத்து ஒரு சிறந்த நேரடி திரையை போல காட்சிப்படுத்தும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள்.

கிரிஸ்டல் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து மாஸ் காட்டிய Samsung.!

இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் கிரிஸ்டல் பிராசஸர் 4கே ஆதரவுடன் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நான்கு ஸ்மார்ட் டிவிகள் டைசன் இயங்குதளம் (Tizen OS) மூலம் இயங்குகின்றன. ஸ்மார்ட் ஹப், டிவி பிளஸ், யுனிவர்சல் கைடு, ஸ்மார்ட் திங்ஸ், அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டென்ட், ரிமோட் கண்ட்ரோல் உள்ளிட்ட பல ஸ்மார்ட் சேவைகளை வழங்குகின்றன இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள்.

சவுண்ட் மிரரிங், வயர்லெஸ் டிவி ஆன், மொபைல் to டிவி போன்ற மல்டி டிவைஸ் அனுபவத்தை வழங்குகின்றன புதிய ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் உடன் கேமரா பயன்படுத்தலாம். கூடுதலாக கேமரா இதனுடன் இணைத்தால் நமக்கு பிடித்தமானவர்களிடம் பெரிய அளவு திரையில் வீடியோ காலிங் பேசலாம். மேலும் இந்த டிவிகளை உங்கள் PC, Laptop, மொபைல் என எதனுடன் வேண்டுமானாலும் இணைக்கலாம்.

புளூடூத் வி5.2, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளன புதிய சாம்சங் ஸ்மார்ட் டிவிகள். மேலும் இந்த ஸ்மார்ட் டிவிகள் தனித்துவமான கேமிங் அனுபவத்தை வழங்கும். அதாவது பல கேமிங் அம்சங்களுடன் சாம்சங் கிரிஸ்டல் 4கே ஐஸ்மார்ட் 2023 யுஎச்டி டிவிகள் வெளிவந்துள்ளன.

கிரிஸ்டல் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து மாஸ் காட்டிய Samsung.!

Object Tracking Sound Lite வசதியுடன் புதிய சாம்சங் டிவிகள் வெளிவந்துள்ளன. எனவே சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். மேலும் இந்த டிவிகளில் Adaptive Sound வசதி இருப்பதால் தானாகவே ஆடியோ அட்ஜஸ்ட் ஆகிக்கொள்ளும். குறிப்பாக சாம்சங் கிரிஸ்டல் 4கே ஐஸ்மார்ட் 2023 யுஎச்டி டிவிகள் அமேசான், பிளிப்கார்ட், சாம்சங் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.

  • கிரிஸ்டல் 4கே ஐஸ்மார்ட் 43-இன்ச் டிவியின் விலை ரூ.33,990
  • கிரிஸ்டல் 4கே ஐஸ்மார்ட் 50-இன்ச் டிவியின் விலை ரூ.45,990
  • கிரிஸ்டல் 4கே ஐஸ்மார்ட் 55-இன்ச் டிவியின் விலை ரூ.47,990
  • கிரிஸ்டல் 4கே ஐஸ்மார்ட் 55-இன்ச் டிவியின் விலை ரூ.71,990

குறிப்பாக இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட் டிவியை வாங்கினால் உங்களுக்கு இலவசமாக Slim Fit Webcam ஒன்று இலவசமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Crystal 4K iSmart 2023 UHD TVs launched in India to deliver theater experience : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X