இந்த தீபாவளி ஆஃபர் மிஸ் பண்ணாதீங்க.. பியூர் கலர்.. கம்மி பட்ஜெட்டில் Samsung 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் 4கே ஸ்மார்ட் டிவி ஒன்று பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக ப்யூர்கலர் டெக்னாலஜி, வாய்ஸ் கண்ட்ரோல் ரிமோட், எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கிரிஸ்டல் 4கே இன்ஃபினிட்டி விஷன் 43 இன்ச் ஸ்மார்ட் டைஸன் டிவி (Samsung Crystal 4K Infinity Vision 43 inch 4K TV) முன்பு ரூ.41,300 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் தற்போது நடைபெறும் big bang diwali sale எனும் சிறப்பு விற்பனையில் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.25,750 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.24250 விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கிரிஸ்டல் 4கே இன்ஃபினிட்டி விஷன் 43 இன்ச் டிவி அம்சங்கள் (Samsung Crystal 4K Infinity Vision 43 inch 4K TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்( 60Hz refresh rate), எச்டிஆர் 10 பிளஸ் (HDR 10+) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
பியூர் கலர் (Pure Color), மெகா கான்ட்ராஸ்ட், 4K அப்ஸ்கேலிங் (4K Upscaling), கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Contrast Enhancer), எச்எல்ஜி, அல்ட்ராஎச்டி டிம்மிங் (UHD Dimming), கலர் பூஸ்ட்டர் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
தரமான கிரிஸ்டல் பிராசஸர் 4கே (Crystal Processor 4K) உடன் சாம்சங் கிரிஸ்டல் 4கே இன்ஃபினிட்டி விஷன் 43 இன்ச் டிவி வெளிவந்தது. அதுவும் இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மோஷன் எக்ஸ்சலரேட்டர் (Motion Xcelerator), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), ஃபிலிம் மோட் (Film Mode) உள்ளிட் அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.
டைசன் ஓஎஸ் மூலம் சாம்சங் 43 இன்ச் டிவி இயங்குகிறது. இந்த ஓஸ் மூலம் அலெக்சா (Alexa) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் கிடைக்கும். பின்பு சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) அக்சஸ் கிடைக்கிறது. அதேபோல வெப் பிரவுசர் (Web Browser), ஸ்மார்ட்திங்க்ஸ் ஹப் (SmartThings Hub), மேட்டர் ஹப் (Matter Hub) சப்போர்ட் வருகிறது. மொபைல் டூ டிவி மிரரிங், சவுண்ட் மிரரிங் (Sound Mirroring), வயர்லெஸ் டிவி ஆன் (Wireless TV On) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவியில் கிடைக்கிறது.
குறிப்பாக கியூ-சிம்பொனி (Q-Symphony), அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) ஆதரவு கொண்ட பவரஃபுல் 20W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. மேலும் மேலும் ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite) மற்றும் ப்ளூடூத் ஆடியோ (Bluetooth Audio) உடன் சாம்சங் கிரிஸ்டல் 4கே இன்ஃபினிட்டி விஷன் 43 இன்ச் டிவி வெளிவந்துள்ளது.

எம்டிஎம்ஐ ( HDMI), யுஎஸ்பி-A போர்ட்கள் ( USB-A ports), வைஃபை, ஈதர்நெட், 1 டிஜிட்டல் ஆடியோ அவுட் போர்ட், 1 RF இன், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே இன்ஃபினிட்டி விஷன் 43 இன்ச் ஸ்மார்ட் டைஸன் டிவியில் உள்ளன.
ஆட்டோமேட்டிக் மேக் மோட் (Automatic Game Mode), வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable Refresh Rate) உள்ளிட்ட பல கேமிங் அம்சங்களுடன் இந்த சாம்சங் டிவி வெளிவந்தது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவி உடன் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








