இவ்வளவு Smart வசதியா? இந்தியாவில் 4K டிவிகளை அறிமுகம் செய்த Samsung.. எந்த மாடல்? என்ன விலை?
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கிரிஸ்டல் 4கே டைனமிக் ஸ்மார்ட் டிவி (Samsung crystal 4K dynamic smart TV) மாடல்களை இன்று அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய சாம்சங் டிவிகளின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சாம்சங் கிரிஸ்டல் 4கே டைனமிக் டிவி அம்சங்கள் (Samsung Crystal 4K Dynamic TV Specifications): 43-இன்ச் மற்றும் 55-இன்ச் என்கிற இரண்டு அளவுகளில் சாம்சங் கிரிஸ்டல் 4கே டைனமிக் டிவிகள் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த டிவிகள் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளன. எனவே இந்த டிவிகள் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 50Hz ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளன.

அதேபோல் டைனமிக் கிரிஸ்டல் கலர், எச்டிஆர் 10 பிளஸ் சப்போர்ட், ஒரு பில்லியன் shades, போன்ற தனித்துவமான அம்சங்களுடன் இந்த புதிய சாம்சங் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் வீடியோக்களை துல்லியமாகப் பார்க்க முடியும். குறிப்பாக மிகவும் தெளிவான நிறங்களை இந்த டிவியில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே டைனமிக் டிவி மாடல்கள் கிரிஸ்டல் பிராசஸர் 4கே (Crystal Processor 4K) உடன் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்குகிறது. அதேபோல் இந்த டிவிகளில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். டைஸன் ஓஎஸ் (Tizen OS)மூலம் இந்த புதிய சாம்சங் டிவிகள் இயங்குகிறது.
4K அப்ஸ்கேலிங், HLG (ஹைப்ரிட் லாக் காமா), மெகா கான்ட்ராஸ்ட், UHD டிம்மிங், கான்ட்ராஸ்ட் என்ஹான்சர், பவர்ஃபுல் ப்ரைட்னஸ் உள்ளிட்ட தரமான அம்சங்களுடன் இந்த புதிய சாம்சங் டிவிகள் வெளிவந்துள்ளன. மேலும் மோஷன் எக்ஸ்செலரேட்டர் (Motion Xcelerator), ஃபிலிம் மோட் (Film Mode), எச்டிஎம்ஐ (பிளாக் லெவல்) போன்ற வசதிகளும் இந்த புதிய சாம்சங் டிவிகளில் உள்ளன.
20W சவுண்ட் அவுட்புட் வழங்குகின்றன சாம்சங் கிரிஸ்டல் 4கே டைனமிக் ஸ்மார்ட் டிவிகள். மேலும் Q-சிம்பொனியுடன் 2CH, ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட், அடாப்டிவ் சவுண்ட், புளூடூத் ஆடியோ போன்ற தனித்துவமான ஆடியோ அம்சங்கள் இந்த டிவிகளில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இந்த டிவிகள் பல ஸ்மார்ட் அம்சங்களுடன் வெளிவந்துள்ளன.
அதன்படி ஸ்மார்ட்திங்ஸ் ஹப் ( SmartThings Hub), மேட்டர் ஹப் (Matter Hub), ஐஓடி-சென்சார் ( IoT-Sensor). ஆப்பிள் ஏர்ப்ளே2 (Apple AirPlay2), சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus), டேப் வியூ ( Tap View), வயர்லெஸ் டிவி ஆன் (Wireless TV On), சவுண்ட் மிரரிங் (Sound Mirroring), மொபைலில் இருந்து டிவி மிரரிங் உள்ளிட்ட பல ஸ்மார்ட் அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட் டிவிகள்.

அலெக்சா, கூகுள்அசிஸ்டண்ட் உடன் இணைந்து இந்த சாம்சங் டிவிகளை பயன்படுத்தலாம். 3 எம்டிஎம்ஐ (3 HDMI), 2 யுஎஸ்பி-A போர்ட்கள் (2 USB-A ports), வைஃபை (வெர்ஷன் 5.0), ஈதர்நெட், 1 டிஜிட்டல் ஆடியோ அவுட் போர்ட், 1 RF இன், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவிகளில் உள்ளன. மேலும் சாம்சங் நாக்ஸ் செக்யூரிட்டி (Samsung Knox Security) வசதியைக் கொண்டுள்ளன இந்த புதிய சாம்சங் டிவிகள்.
சாம்சங் கிரிஸ்டல் 4கே டைனமிக் 43 இன்ச் டிவியின் விலை ரூ.41,990-ஆக உள்ளது. பின்பு இதன் 55-இன்ச் மாடலின் விலை ரூ.59,900-ஆக உள்ளது. சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அமேசான் தளத்தில் இந்த டிவிகளை வாங்க முடியும். பின்பு இந்த டிவிகளுக்கு 1 வருட வாரண்டி வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications