Home
Gadgets

உங்க வீட்டுல 2023, 2024, 2025 மாடல் Samsung TV இருக்கா.. அப்போ 10 பைசா செலவு இல்லாம 12 மாசம் இலவசம்.. என்னது?

உங்கள் வீட்டில் கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அறிமுகமான சாம்சங் ஸ்மார்ட் டிவி (Samsung Smart TV) அல்லது சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் (Samsung Smart Monitor) உள்ளதா? ஆம் என்றால் சாம்சங் நிறுவனத்திடம் இருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது!

சாம்சங் நிறுவனமானது ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனமான பெர்பிளெக்ஸிட்டி (Perplexity) உடன் இணைந்து பெர்பிளெக்ஸிட்டி டிவி ஆப்பை (Perplexity TV App) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய ஆப் புதிய கன்டென்ட்களை கண்டறிய உதவும் வகையில் "புதுமையான ஏஐ-பவர்டு அனுபவத்தை" வழங்குமென்று தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தெரிவித்துள்ளது.

உங்க வீட்டுல 2023, 2024, 2025 மாடல் Samsung TV இருக்கா?

சரி உங்கள் சாம்சங் ஸ்மார்ட் டிவியில் பெர்பிளெக்ஸிட்டி டிவி ஆப்பை எவ்வாறு பெறுவது? இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் மானிட்டர்கள் மற்றும் டிவிகளில் பெர்பிளெக்ஸிட்டி டிவி ஆப் ஆனது தற்போது கிடைக்கிறது. இதில் 2025 க்யூஎல்இடி டிவிகள், தி பிரேம் மற்றும் தி பிரேம் ப்ரோ, நியோ க்யூஎல்இடி டிவிகள், மைக்ரோ ஆர்ஜிபி டிவிகள், ஸ்மார்ட் மானிடர் எம்7 மற்றும் ஸ்மார்ட் மானிடர் எம்8 ஆகியவைகள் அடங்கும்.

மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஓஎஸ் அப்டேட் வழியாக 2023 மற்றும் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் மானிட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் பெர்பிளெக்ஸிட்டி டிவி ஆப் வரும் என்றும் Samsung தெரிவித்துள்ளது. உங்கள் ஸ்மார்ட் டிவியில் பெர்பிளெக்ஸிட்டி-ஐ இன்ஸ்டால் செய்ய, ஹோம் ஸ்க்ரீனில் உள்ள ஆப்ஸ் டேப்பிற்கு சென்று பெர்பிளெக்ஸிட்டி டிவி ஆப்பை கண்டறியவும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அதற்கு மைக்ரோஃபோன் அணுகலை வழங்கவும்.

இப்போது ஹோம் ஸ்க்ரீனில் இருந்து பெர்பிளெக்ஸிட்டி டிவி ஆப்பை லான்ச் செய்யவும். வாய்ஸ் காமாண்ட்கள் (voice commands), கேலக்ஸி போனின் ஆன்-ஸ்க்ரீன் கீபோர்ட் (Galaxy phone's on-screen keyboard) அல்லது உங்கள் டிவியுடன் இணைக்கப்பட்ட பிஸிக்கல் கீபோர்ட் (Physical keyboard) மூலம் நீங்கள் அதை பயன்படுத்த முடியும்.

போனஸாக, சாம்சங் நிறுவனமானது "மேற்குறிப்பிட்ட வகையின் கீழ்" அனைத்து சாம்சங் டிவி உரிமையாளர்களுக்கும் 12 மாத இலவச பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ சந்தாவையும் (Perplexity Pro subscription) வழங்குகிறது. அவர்கள் பெர்ப்ளெக்ஸிட்டி டிவி ஆப்பில் உள்ள க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் அதை பெறலாம்.

புதிய பெர்ப்ளெக்ஸிட்டி டிவி ஆப் மூலம் சாம்சங் நிறுவனம் அதன் விஷன் ஏஐ (Vision AI) தளத்தை மேலும் விரிவுபடுத்துகிறது. இது ஸ்மார்ட் டிவிகள் போன்ற பெரிய ஸ்க்ரீன் கொண்ட டிவைஸ்களை "உங்கள் அன்றாட வாழ்க்கையை உயர்த்தும் ஸ்மார்ட் தீர்வுகளின் மையங்களாக" மாற்றுகிறது என்று சாம்சங் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஒருவேளை உங்களுக்கு பெர்ப்ளெக்ஸிட்டி பற்றி "ஐடியாவே இல்லை" என்றால், உங்களுக்கு விரைவான சுருக்கம் இதோ: பெர்ப்ளெக்ஸிட்டி என்பது ஏஐ அடிப்படையிலான தேடுபொறி (AI-powered search engine) ஆகும். இது இணையத்தில் உள்ள நம்பகமான மூலங்களிலிருந்து தகவல்களை பெற்று உங்கள் கேள்விகளுக்கு நிகழ்நேரத்தில் பதிலளிக்கிறது

பெர்ப்ளெக்ஸிட்டி டிவி ஆப் ஆனது சாம்சங்கின் விஷன் ஏஐ சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் ஒரு முழுமையான ஏஐ ஏஜென்ட் ஆக செயல்படும். மேலும் பயனர்கள் சிக்கலான கேள்விகளை கேட்கவும், பிற டிவைஸ்களுக்கு மாறாமல் துல்லியமான மற்றும் விஷூவல் அடிப்படையிலான பதில்களை பெறவும் உதவும்.

மேலும் பயனர்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ற திரைப்பட பரிந்துரைகளை பெறவும் அல்லது சுவாரஸ்யமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை காட்டவும் கூட பெர்ப்ளெக்ஸிட்டி டிவி ஆப்பை பயன்படுத்தலாம். மேலும் இந்த ஏஐ-பவர்டு தேடுபொறியை கொண்டு பயணத்தை திட்டமிடுதல், ஸ்போர்ட்ஸ் முடிவுகளை பெறுதல் மற்றும் நீங்கள் பின்தொடரும் அல்லது முதலீடு செய்த நிறுவனங்களை பற்றிய பைனான்ஸ் தகவல்களை பெறுதல் போன்ற பிற விஷயங்களுக்கும் கூட பயன்படுத்தலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Brings Perplexity TV App For 2025 2024 2023 Smart TV Models How to get and use it
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X