இதைத்தான் மரண ஆஃபர்னு சொல்லுவாங்க.. ஏராளமான Samsung TVகள் மீது அதிரடி தள்ளுபடி.. அதுவும் அடுத்த 1 மாசத்துக்கு!
சாம்சங் (Samsung) நிறுவனமானது பிக் டிவி டேஸ் சேல் (Big TV Days Sale) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே சாம்சங்கின் இந்த சிறப்பு விற்பனையானது முழுக்க-முழுக்க ஸ்மார்ட் டிவிகள் (Smart TVs) மீதான தள்ளுபடிகள் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறது.
ஜூன் 15 ஆம் தேதி முதல் தொடங்கிய சாம்சங் பிக் டிவி டேஸ் விற்பனையானது வருகிற ஜூலை 25 ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சாம்சங் டிவிகள் மீது அறிவிக்கப்பட்டுள்ள ஆஃபர்கள் ஆனது, அடுத்த 1 மாதத்திற்கும் மேலாக அணுக கிடைக்கும் என்று அர்த்தம்.

எந்தெந்த சாம்சங் டிவிகள் மீது ஆஃபர் கிடைக்கும்? இந்த சிறப்பு விற்பனையின் போது சாம்சங் நியோ க்யூஎல்இடி 8கே (Neo QLED 8K), ஓஎல்இடி (OLED), க்யூஎல்இடி (QLED) தி ஃபிரேம் (The Frame) மற்றும் கிரிஸ்டல் 4கே யுஎச்டி டிவி சீரீஸின் (Crystal 4K UHD TV Series) கீழ் உள்ள மாடல்கள் மீது 20% வரை கேஷ்பேக் கிடைக்கும்.
கேஷ்பேக் ஆஃபர் (Cashback Offer) மட்டுமின்றி, இந்த பிக் டிவி டேஸ் விற்பனையின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுடன் இலவச ஸ்மார்ட்போன், இலவச ஃப்ரீஸ்டைல் புரொஜெக்டர் (Freestyle projector) மற்றும் இலவச சவுண்ட்பார் (Soundbar) போன்ற நிச்சய பரிசுகளையும் பெறலாம்.
கூடுதலாக, ஈஸி இஎம்ஐ (Easy EMI) விருப்பங்கள் எக்ஸ்சேன்ஜ் சலுகைகள் (Exchange Offer) போன்றவைகளையும் பெறலாம். இந்த அனைத்து சலுகைகளும், நாடு முழுவதும் உள்ள முன்னணி பிஸிக்கல் ரீடெய்ல் ஸ்டோர்களிலும் (Retail Stores), சாம்சங்கின் ஆன்லைன் ஸ்டோரிலும் (Samsung Online Store) அணுக கிடைக்கும்.
குறிப்பாக சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் வாங்கும் போது, ஐசிஐசிஐ பேங்க் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தினால் 15 சதவீத உடனடி தள்ளுபடி (ரூ.12,000 வரை) கிடைக்கும். மேலும், சாம்சங் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகள் வழியிலான இஎம்ஐ-இல் 10 சதவீதம் கூடுதல் கேஷ்பேக்கையும் பெறலாம்
என்னென்ன டிவிகள் மீது என்னென்ன ஆஃபர்? 98-இன்ச் நியோ க்யூஎல்இடி அல்லது 98-இன்ச் க்யூஎல்இடி டிவியை வாங்கும் போது ரூ.1,24,999 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (12ஜிபி + 256ஜிபி) முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 75 இன்ச் மற்றும் அதற்கு மேற்பட்ட நியோ க்யூஎல்இடி டிவி மாடல்களை வாங்கினால், ரூ.69,990 மதிப்புள்ள ஃப்ரீஸ்டைல் போர்ட்டபிள் புரொஜெக்டர் இலவசமாக கிடைக்கும். இதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட 55 இன்ச் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் உள்ள ஸ்மார்ட் டிவிகளை வாங்கினால் ரூ.51,990 வரை மதிப்புள்ள சவுண்ட்பார் இலவசமாக கிடைக்கும்.
85-இன்ச் கிரிஸ்டல் 4கே யுஎச்டி டிவி, 65-இன்ச் நியோ க்யோஎல்இடி மற்றும் 8கே டிவிகள், 65-இன்ச் க்யூஎல்இடி டிவி மற்றும் 75-இன்ச் தி ஃபிரேம் டிவி உள்ளிட்ட மாடல்களை வாங்கினால் ரூ.28,990 மதிப்புள்ள எச்டபுள்யூ-க்யூ600பி சவுண்ட்பார் இலவசமாக கிடைக்கும். 55-இன்ச் நியோ க்யூஎல்இடி டிவி அல்லது 55-இன்ச் ஓஎல்இடி டிவி வாங்கினால் ரூ.15,490 சவுண்ட்பார் இலவசமாக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications