விரைவில்: சாம்சங் க்ரோம்புக் பிளஸ் வி2 அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா?
க்ரோம்புக் பிளஸ் வி2 சாதனத்தில் வயர்லெஸ் 4ஜி எல்டிஇ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சாதனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி விரைவில் சாம்சங் க்ரோம்புக் பிளஸ் வி2 என்ற சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த சாதனம் வரும் நவம்பர் 2-ம் தேதி அன்று அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது க்ரோம்புக் பிளஸ் வி2 சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது சாம்சங் நிறுவனம். குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த க்ரோம்புக் பிளஸ் வி2 சாதனம்.

டிஸ்பிளே:
இந்த சாம்சங் க்ரோம்புக்; பிளஸ் வி2 சாதனம் பொறுத்தவரை 12.2-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
அதன்பின்பு 1920 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் எஸ் பென் ஆதரவுடன் இந்த சாதனம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:
சாம்சங் க்ரோம்புக் பிளஸ் வி2 சாதனத்தின் பின்புறம் 13மெகாபிக்சல் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்ப இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் 1எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:
இந்த சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆப் மற்றும் வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் க்ரோம்புக் பிளஸ் வி2 சாதனம்.
இணைப்பு ஆதரவுகள்:
க்ரோம்புக் பிளஸ் வி2 சாதனத்தில் வயர்லெஸ் 4ஜி எல்டிஇ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் 39Wh Li-ion பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.
குறிப்பாக ரூ.38000 விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் க்ரோம்புக் பிளஸ் வி2.


Click it and Unblock the Notifications