Samsung ஒரே அடி.. ரூ.18,000 விலை குறைப்பு.. கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா.. கேலக்ஸி பட்ஸ்3 ப்ரோ.. எந்தெந்த மாடல்கள்?
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் பெஸ்டிவ் சேல் 2025 (Festive Deals 2025) சலுகையில் இதுவரையில் கிடைக்காத விலைக்கு ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் இயர்பட்கள் கிடைக்கின்றன. ரூ.18,000 நேரடி விலை குறைப்பில் சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா கிடைக்கிறது. இதேபோல ஆரம்பமே ரூ.4,000 முதல் விலை குறைப்பில் பட்ஸ் மாடல்கள் கிடைக்கின்றன. இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் பெஸ்டிவல் விற்பனை சக்கைப்போடு போட போகிறது. சாம்சங் நிறுவனமும் அதன் ஸ்மார்ட்போன்களுக்கு கொடுக்கும் ஆஃபர் விவரங்களை வெளியிட்டது. செப்டம்பர் 22ஆம் தேதி முதல் இந்த பெஸ்டிவ் சேல் தொடங்க இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆஃபர்களை தொடர்ந்து, ஸ்மார்ட்வாட்ச், பட்ஸ் மற்றும் கேலக்ஸி ரிங் ஆகியவற்றுக்கும் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஆஃபர்களை முன்னதாகவே கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். சாம்சங் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர்களில் ஆஃபர் விலைகளின் அடிப்படையில் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச், கேலக்ஸி பட்ஸ் மற்றும் கேலக்ஸி ரிங் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. இப்போது, எவ்வளவு ஆஃபர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ்3 எப்இ (Samsung Galaxy Buds3 FE) மாடலின் மார்கெட் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.4,000 விலை குறைப்பு போக ரூ.8,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி பட்ஸ்3 ப்ரோ (Samsung Galaxy Buds3 Pro) மாடலின் மார்கெட் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. இப்போது ரூ.6,000 விலை குறைப்பு போக கிடைக்கிறது.
ஆகவே, ரூ.13,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். சாம்சங் கேலக்ஸி ரிங் (Samsung Galaxy Ring) மாடல்களின் மார்கெட் விலை ரூ.38,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.15,000 நேரடி விலை குறைப்பு போக கிடைக்க இருக்கிறது. ஆகவே, ரூ.23,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள முடியும். இந்த ரிங்குகளில் அனைத்து சைஸ்களுக்கும் ஆஃபர் பொருந்துகிறது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா (Samsung Galaxy Watch Ultra) மாடல் ரூ.59,999 பட்ஜெட்டில் வந்தது. ஆனால், இப்போது பெஸ்டிவல் விற்பனையில் ரூ.41,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. ஆகவே, அதிகபட்சமாக இதற்கு ரூ.18,999 விலை குறைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இறுதியாக கேலக்ஸி வாட்ச்8 சீரிஸ் (Galaxy Watch8 Series) இருக்கிறது.
இந்த மாடல்களின் மார்கெட் விலை ரூ.32,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.22,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,000 விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். இந்த மாடல்கள் அனைத்தும் பிரீமியமாக வெளியாகிவையாகும். ஆகவே, பீச்சர்கள் பிரீமியம் அனுபம் கொடுக்கும். இவற்றின் முக்கிய பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.
கேலக்ஸி வாட்ச் 8 சீரிஸ் அம்சங்கள்: ஜெமினி ஏஐ அசிஸ்டன்ட் கிடைக்கிறது. வியர் ஓஎஸ் 6 மற்றும் ஒன் யுஐ கிடைக்கிறது. சூப்பர் அமோலெட் (Super AMOLED)டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. டைனாமிக் லக் சிஸ்டம் (Dynamic Lug System) சிஸ்டம் கிடைக்கிறது. பயோஆக்டிவ் சென்சார் (BioActive Sensor) கிடைக்கிறது.
கேலக்ஸி பட்ஸ்3 எப்இ அம்சங்கள்: இதில் கேலக்ஸி ஏஐ (Galaxy AI) பீச்சர்கள் வருகிறது. அட்வான்ஸ்டு ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancelation), லைவ் டிரான்ஸ்லேஷன் கிடைக்கிறது. IP54 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. சார்ஜிங் கேஸில் 515mAh பேட்டரி, பட்களில் 53mAh பேட்டரி வருகிறது. 30 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம்.
கேலக்ஸி ரிங் அம்சங்கள்: 24 மணி நேரமும் ஹெல்த் மானிட்டரிங் கொடுக்கிறது. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் 10ATM டெப்த் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடை்கிறது. கேலக்ஸி ரிங்களில் கிடைக்கும் ஹெல்த் ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன. ஹார்ட் ரேட் மானிட்டரிங் இதில் வருகிறது.


Click it and Unblock the Notifications








