சாம்சங் ஸமார்ட் டிவிகளை வாங்க இதுவே சரியான நேரம்: அதிரடி ஆபர்கள்.!

|

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், டிவி உட்பட பல்வேறு சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது. அதேசமயம் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன, இதற்கு அடுத்தப்படியாக சாம்சங் ஸ்மார்ட் டிவி மாடல்களும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.

சாம்சங் நிறுவனம் அதன் 55-இன்ச்

இந்நிலையில் சாம்சங் நிறுவனம் அதன் 55-இன்ச் மற்றும் அதற்கு மேற்பட்ட பிரீமியம் ஸ்மார்ட் டிவிகள் மீது நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்னணி நுகர்வோர் மின்னணு சில்லறை விற்பனையாளர்களிடமும் இருந்து சாம்சங் பிக் டிவி சலுகைகளை அறிவித்துள்ளது. இது சாம்சங் பிக் டிவி டேஸ் என்கிற பெயரின் கீழ் ஜனவரி 31, 2021 வரை நடக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

55-இன்ச், 65-இன்ச், 75-

வெளிவந்த தகவலின்படி, 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச், 82-இன்ச் மற்றும் 85-இன்ச் அளவிலான கியூஎல்இடி டிவி, கிரிஸ்டல் 4 கே யுஎச்.டி, கியூஎல்இடி 8 கே டிவிகளை வாங்குவதன் மூலம் நுகர்வோர்கள் தனித்துவமான சலுகைகளை பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்பு கூடுதலாக, நுகர்வோர்கள் 20 சதவிகிதம் கேஷ்பேக் மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாத சலுகைகள் மற்றும் ரூ.1990 வரையிலான இஎம்ஐ போன்ற சலுகைகளும் அணுக கிடைக்கும்.

அலிபாபா நிறுவனர் ஜாக் மா கைது செய்யப்பட்டாரா?- ஜாக்மாவின் நிலை என்ன?: நீடிக்கும் மர்மம்!

லுகை காலத்தின் கீழ்

அதேபோல் இந்த சலுகை காலத்தின் கீழ் நுகர்வோர்கள் 65-இன்ச் கியூஎல்இடி டிவி மற்றும் 75 இன்ச் கிரிஸ்டல் 4 கே யுஎச்.டி டிவிகளுடன் ரூ.22,999 மதிப்பு கொண்ட கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனை இலவசமாக பெறுவார்கள். பின்பு 55-இன்ச் கியூஎல்இடி டி.வி மற்றும் 65-இன்ச் கிரிஸ்டல் 4கே யுஎச்டி டிவிகளுடன் ரூ.18,999 மதிப்புள்ள கேலக்ஸி ஏ31 மொபைலை இலவசமாக பெறலாம்.

வி மாடல்களில் ரூ

அதன்பின்னர் 75-இன்ச், 82-இன்ச் மற்றும் 85-இன்ச் கியூஎல்இடி டி.வி.களை வாங்கும் பயனர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டிவி மாடல்களில் ரூ.48,990 மதிப்புள்ள சவுண்ட்பார் எச்.டபிள்யூ-கியூ 800 டி அல்லது ரூ.99,990 மதிப்புள்ள சவுண்ட்பார் எச்.டபிள்யூ-கியூ 900 டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேனல் மீது ஒரு வருடம் கூடுதல்

குறிப்பாக சாம்சங் ஸ்மார்ட் டிவிகளின் மீது 10 ஆண்டு ஸ்கரீன் பர்ன்-இன் உத்தரவாதமும், ஒரு வருடம் விரிவான உத்தரவாதமும், பேனல் மீது ஒரு வருடம் கூடுதல் உத்தரவாதமும் அணுக கிடைக்கும்.

சிறந்த சலுகைகளை பெறுவதை நோக்கமாக

மேலும் சாம்சங் இந்தியாவின் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் வர்த்தகத்தின் மூத்த தலைவர் ராஜு புல்லன் கூறுகையில், 2020-ம் ஆண்டில் பெரிய நகரங்கள் மற்றும் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற சந்தைகளில் கூட 55-இன்ச் மற்றும் அதற்கு மேலான ஸ்மார்ட் டிவிகளுக்கான தேவை அதிகரித்தது. குறிப்பாக ஓடிடி கன்டென்ட் மற்றும் மற்றும் வீட்டிலேயே சினிமா பார்க்கும் அனுபவத்தை வழங்கும் பெரிய டிவிகளை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே இந்த பிக் டிவி டேஸ் விற்பனையானது புத்தாண்டுக்குள் நுழையும் போது நுகர்வோர் சிறந்த சலுகைகளை பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung announces Big TV Days Starts With Best Discounts and Offers: Here the Details! : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X