பழைய குட்டி டிவிக்கு குட்பை.. பெரிய சைஸ் Samsung TV-கள் மீது திடீர் ஆபர்.. FREE சவுண்ட் பார், 20% கேஷ்பேக்!
ஆராம்பம் ஆன சில நாட்களிலேயே.. ஆடவர்களுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் சூடுபிடிக்க தொடங்கி விட்டன. 2026 டி20 உலக கோப்பைக்கான போட்டிகளில் மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் ஆனது நாடு முழுவதுமான திடீர் கிரிக்கெட் ஜுரத்தை கொண்டுவந்துள்ளது என்றே கூறலாம்
"இதுதான் டா சரியான நேரம்!" என்கிற படியாக சாம்சங் (Samsung) நிறுவனம் தனது விஷன் ஏஐ பிக் டிவி ரேன்ஜின் (Vision AI Big TV range) மீது வரையறுக்கப்பட்ட கால நுகர்வோர் சலுகைகளை (Limited-period consumer offers) அறிவித்து உள்ளது.

இதன்கீழ் சாம்சங் நிறுவனம் ரூ.92990 வரை மதிப்புள்ள இலவச சவுண்ட்பார், 20% வரை கேஷ்பேக், ஜீரோ டவுன் பேமென்ட் மற்றும் 30 மாதங்கள் வரை ஈஸி இஎம்ஐ திட்டங்கள் ஆகியவைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளில் விற்பனைக்கு பிந்தைய சேவைக்கான சாம்சங் கேர் பிளஸ் (Samsung Care Plus) மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாத கவரேஜ் ஆகியவைகளும் அடங்கும்.
ரூ.599 முதல் தொடங்கி இரண்டு வருட விரிவான பாதுகாப்பு, 100% உண்மையான பாகங்கள் மற்றும் சாம்சங்கின் நாடு தழுவிய சேவை நெட்வொர்க்கின் ஆதரவை வாடிக்கையாளர்கள் பெறலாம். கூடவே சாம்சங் பைனான்ஸ் பிளஸ் (Samsung Finance Plus) மூலம் - செயல்படுத்தப்படும் நெகிழ்வான, காகிதமற்ற கொள்முதல் விருப்பங்கள் இந்த கிரிக்கெட் சீசனில் பிரீமியம் லார்ஜ் ஸ்க்ரீன் ஸ்மார்ட் டிவிகளுக்கு அப்கிரேட் ஆவதற்கான தடைகளை மேலும் குறைக்கின்றன.
நினைவூட்டும் வண்ணம் சாம்சங் விஷன் ஏஐ டிவி ரேஞ்சின் கீழ் ஓஎல்இடி (OLED), க்யூஎல்இடி (QLED), நியோ க்யூஎல்இடி (Neo QLED), நியோ க்யூஎல்இடி 8கே (Neo QLED 8K), தி பிரேம் (The Frame) உள்ளிட்ட ஸ்மார்ட் டிவி சீரீஸ் மாடல்கள் உள்ளன
மேற்கண்ட சாம்சங் விஷன் ஏஐ டிவி சீரீஸின் கீழ் 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச், 83 இன்ச், 98 இன்ச் மற்றும் 115 இன்ச் என்கிற அளவிலான ஸ்க்ரீன் சைஸ்களை கொண்ட பல்வேறு வகையான மாடல்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக சாம்சங் நிறுவனத்தின் இந்த லிமிடெட் பீரியட் ஆபர் ஆனது "வீட்டுக்குள் ஸ்டேடியம்" பாணியிலான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை அனுபவிக்க வழிவகுக்கிறது.
ஹை-ஆக்ஷன் ஸ்போர்ட்ஸ் வியூவிங்-காக உருவாக்கப்பட்ட சாம்சங்கின் லார்ஜ்-ஸ்க்ரீன் விஷன் ஏஐ டிவிகள், அளவு, தெளிவு மற்றும் ஏஐ ஆல் இயக்கப்படும் பிக்சர் ஆப்டிமைசேஷன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மேலும் தகவமைப்பு மற்றும் உள்ளுணர்வு மிக்க பார்வையை வழங்குகின்றன. இந்த சலுகைகள் - சாம்சங்கின் தற்போதைய 'மேட் ஃபார் இந்தியா' பிளஸ் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
சாம்சங்கின் மேட் ஃபார் இந்தியா பிளஸ் பிரச்சாரம் ஆனது - லார்ஜ் ஸ்க்ரீன்கள், விஷன் ஏஐ ஆல் இயக்கப்படும் வியூவிங், இலவச டிவி சேனல்கள், நீட்டிக்கப்பட்ட உத்தரவாத கவரேஜ் மற்றும் எளிதான நிதியுதவி ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது. பிளஸ் (PLUS) தளத்தின் மூலம், நுகர்வோர் சாம்சங் டிவி பிளஸையும் அணுகலாம். இது பொழுதுபோக்கு, திரைப்படங்கள், செய்திகள் மற்றும் பிராந்திய கன்டென்ட்களை கொண்ட 150 க்கும் மேற்பட்ட இலவச நேஷனல் மற்றும் இன்டர்நேஷனல் சேனல்களை கொண்டுவருகிறது.


Click it and Unblock the Notifications








