இந்த சாம்சங் டிவி வாங்குறதுதான் எல்லோருக்கும் கனவா இருக்கும்! ஆனால், விலையை கேட்ட ஆடிப்போவீங்க!
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் (Samsung Electronics) நிறுவனம், கிட்டத்த ரூ.4.5 லட்சம் பட்ஜெட்டில் பிரம்மாண்ட அம்சங்களுடன் 83 இன்ச் ஓஎல்இடி (OLED) டிவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த விலைக்கு ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 55 இன்ச் டிவியை 10 முறை வாங்கி விடலாம்.
இவ்வளவு விலைக்கு விற்றால், அதில் எவ்வளவு அம்சங்கள் இருக்கும் என்று யோசிக்க தோன்றுகிறது அல்லவா? அதைத்தான் இங்கு தெரிந்துகொள்ள போகிறோம். இங்கு நாம் பார்க்கப்போவது, சாம்சங் 83 இன்ச் கிளாஸ் எஸ்90சி ஓஎல்இடி டிவியை (Samsung 83 Inch Class S90C OLED TV) பற்றித்தான்.

இந்த டிவியின் டிஸ்பிளேவில் மட்டும் 83 லட்சம் பிக்சல்கள் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளன. உலகின் மிக விலையுயர்ந்த கேமரா எந்த அளவுக்கு கிளாரிட்டியுடன் வீடியோவை பதிவு செய்யுமோ அதே அளவு கிளாரிட்டியை இதில் பார்க்கலாம். இந்த டிஸ்பிளேவின் ஒவ்வொரு இன்ச் பிக்சல்களையும் கூர்ந்து நோக்கினாலும் கூட அது டிஸ்பிளே போன்று தோன்றாது.
நேரில் பார்க்கும் அனுபவத்தையே உங்களுக்கு கொடுக்கும். டால்பி அட்மோஸ் உடன் 3டி ஆடியோ சப்போர்ட் உள்ளது. அதோடு, ஆப்ஜெக்ட் ஆடியோ டிராக்கிங் வருகிறது. இந்த டிராக்கிங் டெக்னாலஜி மூலம் ரூம்மில் நீங்கள் எங்கு இருக்குறீர்களோ அங்கு சவுண்டிங் அதிகமாக இருக்கும். அதேபோல நீங்கள் பேசத் தொடங்கினால், டிவியின் ஆடியோ தானகவே குறைந்துவிடும். இப்படி பல்வேறு வியப்பான அம்சங்கள் உள்ளன.
சாம்சங் 83 இன்ச் கிளாஸ் OLED டிவியின் முழு அம்சங்கள்: இந்த டிவி அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் பெசெல்-லெஸ் ஸ்கிரீன் கொண்டுள்ளது. இந்த ஓஎல்இடி டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), அடாப்டிவ் பிக்சர் (Adaptive Picture), ஃபிலிம் மோட் (Film Mode), அல்ட்ரா வியூவிங் ஆங்கிள் (Ultra Viewing Angle) சப்போர்ட் உள்ளது.
அதோடு, கேமரா சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நியூரல் குவாண்டம் பிராசஸர் 4கே ( Neural Quantum Processor 4K) என்னும் பிரத்யேக சிப்செட் வருகிறது. இந்த டிவியின் ஆடியோவை பொறுத்தவரையில், 40W ஆடியோ அவுட்புட், டால்பி அட்மாஸ், கியூ சிம்பொனி, டூயல் ஆடியோ சப்போர்ட், ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட்டிங் உள்ளிட்டவை வருகிறது.
கேம் ஹப் (Game Hub), ஸ்மார்ட்திங்ஸ் ஹப் (SmartThings Hub), சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus), அலெக்சா (Alexa), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் உள்ளது. லைட் சின்க் (Light-Sync) சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இது ரூம்மின் வெளிச்சத்துக்கு ஏற்ப பிரைட்னஸை கன்ட்ரோல் செய்துகொள்ளும்.
கனெக்டிவிட்டியை பொறுத்தவரையில், ப்ளூடூத், 4 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், டிஜிட்டல் ஆடியோ அவுட் உள்ளிட்டவை உள்ளன. இதோடு சாம்சங் சோலார்செல் ரிமோட் (Samsung SolarCell Remote) வருகிறது. டைட்டன் பிளாக் (Titan Black) கலரில் மட்டும் விற்பனைக்கு வருகிறது.
இந்த டிவியின் விலை 5,399 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை, இந்திய மதிப்பில் ரூ.4,44,380 ஆகும். இந்த டிவியை சாம்சங் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இப்போது அமெரிக்காவில் விற்பனை தொடங்கியிருக்கிறது. அடுத்த சில வாரங்களில் மற்ற நாடுகளிலும் தொடங்கும்.


Click it and Unblock the Notifications








