Home
Gadgets

வீட்டுக்குள்ள சினிமா தியேட்டர்.. 75-இன்ச் Samsung TV மீது 47% டிஸ்கவுண்ட்.. 40W Dolby Atmos ஸ்பீக்கர்ஸ்!

55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களை பார்த்து "பத்தல.. பத்தல.. இன்னும் பெருசா வேணும்" என்கிற கஸ்டமர்களுக்கு. வியூயிங் எக்ஸ்பீரியன்ஸில் துளி அளவு கூட குறை வைக்க விரும்பாத சினிமா ஆர்வலர்களுக்கு - இருக்கவே இருக்கிறது, சாம்சங்கின் 75-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்!

இன்னும் சுவாரசியமாக இது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக, ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. அது சாம்சங் 75-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி டிவி (Samsung 75-inch 4K Ultra HD Smart QLED TV - QA75Q60BAKXXL) மாடல் ஆகும்.

75-இன்ச் Samsung TV மீது 47% டிஸ்கவுண்ட்.. 40W Dolby Atmos ஸ்பீக்கர்ஸ்

தற்போது இது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில், அதன் எம்ஆர்பி விலையில் இருந்து 47% நேரடி தள்ளுபடியை பெற்று (அதாவது எந்த பேங்க் கார்டும் இல்லாத நேரடி விலை குறைப்பை பெற்று) ரூ.3.54,800 க்கு பதிலாக ரூ.1,88,990 க்கு வாங்க கிடைக்கிறது.

சாம்சங் 75-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி டிவியின் முக்கிய அம்சங்கள்:
- 4கே அல்ட்ரா எச்டி (3840 x 2160) ரெசல்யூஷன், 50ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 75-இன்ச் QLED பேனல்
- நியோ குவாண்டம் ப்ராசஸர் 4கே (Neo Quantum Processor 4K)

- 40வாட்ஸ் அவுட்புட், டால்பி அட்மாஸ் ஆதரவு உடனான சக்திவாய்ந்த ஸ்பீக்கர்கள், சரவுண்ட் சவுண்ட், ஆக்டிவ் வாய்ஸ் ஆம்ப்ளிபயர், அடாப்டிவ் சவுண்ட் பிளஸ் (Adaptive Sound Plus)
- செட்-டாப் பாக்ஸ், ப்ளூ-ரே ஸ்பீக்கர்கள் அல்லது கேமிங் கன்சோலை இணைக்க 3 HDMI போர்ட்கள்
- ஹார்ட் டிரைவ்கள் அல்லது பிற USB டிவைஸ்களை இணைக்க 2 USB போர்ட்கள்

சாம்சங் டிவி ஆபர்: 2026 கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில்.. சரியான நேரம் பார்த்து சாம்சங் இந்தியா (Samsung India) சரியான சலுகைகளை அறிவித்துள்ளது. சாம்சங் நிறுவனம் கால்பந்து ரசிகர்களுக்காக தனது விஷன் ஏஐ பிக் டிவிகளில் (Vision AI Big TVs) பிரத்யேக சலுகைகளை அறிவித்துள்ளது.

பிக் கேம், பிக்கர் ஸ்க்ரீன், பிக்கஸ்ட் மொமெண்ட்ஸ்' (Big Game, Bigger Screen, Biggest Moments) என்ற வாசகத்தின் கீழ், ஏஐ சாக்கர் மோட் (AI Soccer Mode) உடன் வரும் சாம்சங் விஷன் ஏஐ டிவிகள் மூலம் கால்பந்து விளையாட்டை வீட்டிற்கே கொண்டு வாருங்கள் என்று சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.

சாம்சங் அறிவித்துள்ள சலுகைகளின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் மாடலை பொறுத்து, ரூ.92,990 வரையிலான மதிப்புள்ள ஒரு இலவச சவுண்ட்பாரையோ அல்லது ரூ.2,14,990 வரையிலான மதிப்புள்ள ஒரு இலவச டிவியையோ பெறுகிறார்கள். இந்த சலுகையை மேலும் இனிமையாக்க, சாம்சங் 20% வரை கேஷ்பேக், முன்பணம் இல்லாத விருப்பங்கள் மற்றும் 30 மாதங்கள் வரையிலான இஎம்ஐ (EMI) திட்டங்களை வழங்குகிறது.

75-இன்ச் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் கிடைக்கும் சாம்சங் விஷன் ஏஐ பிக் டிவிகள் ஆனது சாம்சங் டிவி பிளஸ், சாம்சங் கேர் பிளஸ், சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ், சவுண்ட் பிளஸ், ஆர்ட் பிளஸ் மற்றும் ஏழு வருட ஓஎஸ் அப்டேட்ஸ் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஒரு முழுமையான, எதிர்காலத்திற்கு தயாரான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதாக சாம்சங் கூறுகிறது

சாம்சங் அறிவித்துள்ள இந்த புதிய சலுகைகள் மீது ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் சாம்சங் இந்தியாவின் (Samsung India) சில்லறை மற்றும் ஆன்லைன் சேனல்களில் விஷன் ஏஐ பிக் டிவிக்களின் வகைகளை ஆராய்ந்து, இந்த பிரத்யேக சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சாம்சங் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung 75 inch 4K Ultra HD Smart QLED TV gets 47 Percentage Discount in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X