Home
Gadgets

Samsung-க்கு கும்பிடு.. ரூ.8,200 ஆஃபரில் 55 இன்ச் டிவி.. Mini LED எச்டிஆர்.. 4K அப்ஸ்கேலிங்.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Indian Festival Sale) பிரீமியம் ஸ்மார்ட் டிவி மாடல்கள் நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. இதில் சாம்சங் 55 இன்ச் மினி எல்இடி 4கே விஷன் ஏஐ 2026 டிவி (Samsung 55 inch Mini LED 4K Vision AI 2026 TV) இதுவரையில் கிடைக்காத தள்ளுபடி விலைக்கு வந்துள்ளது.

இப்போது, அமேசான் விற்பனையில் சாம்சங் 55 இன்ச் மினி எல்இடி 4கே விஷன் ஏஐ 2026 டிவியானது 23 சதவீத தள்ளுபடியுடன் ரூ.45,990 விலைக்கு கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.5,950 தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், ரூ.2,250 கூப்பன் தள்ளுபடி கிடைக்கிறது. 12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது.

Samsung-க்கு கும்பிடு.. ரூ.8,200 ஆபரில் 55 இன்ச் டிவி.. Mini LED HDR!

சாம்சங் 55 இன்ச் மினி எல்இடி 4கே விஷன் ஏஐ 2026 டிவி அம்சங்கள் (Samsung 55 inch Mini LED 4K Vision AI 2026 TV Specifications): இந்த சாம்சங் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவியில் 55 இன்ச் மினி எல்இடி டிஸ்பிளே (Mini LED Display) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அல்ட்ரா எச்டி 4கே ரெசொலூஷன் (Ultra HD 4K Resolution), 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling) மற்றும் மினி எல்இடி எச்டிஆர் (Mini LED HDR) உள்ளன.

ப்யூர் ஸ்பெக்ட்ரம் கலர் (Pure Spectrum Color), கலர் பூஸ்டர் (Colour Booster) மற்றும் மோஷன் எக்ஸ்செலரேட்டர் (Motion Accelerator) போன்ற அம்சங்கள் இந்த டிவியில் இடம்பெற்றுள்ளன. மேலும், சாம்சங் விஷன் ஏஐ கம்பானியன் (Samsung Vision AI Companion) வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்காக பிரத்யேக ஃபுட்பால் மோட் (Football Mode) வழங்கப்பட்டுள்ளது.

இதன் செயல்திறனுக்காக மினி எல்இடி ப்ராசஸர் 4கே (Mini LED Processor 4K) சப்போர்ட் செய்கிறது. இந்த டிவியில் ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite) அம்சத்துடன் 30W ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) வசதியும் உள்ளது. வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் இருப்பதால், வாய்ஸ் வழியாக டிவியை கட்டுப்படுத்த முடியும்.

இதற்காக ஸ்மார்ட் ரிமோட்டை இந்த சாம்சங் விஷன் ஏஐ 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவியில் பயன்படுத்தி கொள்ளலாம். டைசன் டிவி ஓஎஸ் (Tizen TV OS) மூலம் இயங்கும் இந்த டிவியில் 8 ஜிபி மெமரி (8GB Memory) கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கூகுள் டிவிக்கு நிகரான யுஐ அனுபவத்தை பெற்று கொள்ளலாம். ஓடிடி ஆப்கள், கேம்களை டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த சாம்சங் விஷன் ஏஐ 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி கொடுத்து இருக்கிறது. கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB), எல்ஏஎன் (LAN) போர்ட்கள் மற்றும் ஆடியோ ஜாக் (Audio Jack) வழங்கப்பட்டுள்ளன.

மேலும், ப்ளூடூத் (Bluetooth), வை-பை (Wi-Fi) வசதிகளும் உள்ளன. இந்த டிவிக்கு மொத்தம் 2 வருட வாரண்டி (Warranty) வழங்கப்படுகிறது. இதில் 1 வருட ஸ்டான்டர்டு வாரண்டி மற்றும் 1 வருட பேனல் வாரண்டி அடங்கும். இந்த விலைக்கு அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஆடியோ பீச்சர்களும் வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Samsung 55 inch Mini LED 4K Vision AI 2026 TV Gets Discount on Amazon Great Indian Festival Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X