இனி வீட்டுக்குள்ளயே சினிமா தியேட்டர்.. 130-இன்ச் மாடலை தொடர்ந்து 77-இன்ச், 83-இன்ச் Samsung TV-கள் அறிமுகம்!
சிஇஎஸ் 2026 (CES 2026) நிகழ்வில், உலகின் முதல் 130-இன்ச் மைக்ரோ ஆர்ஜிபி டிவியை அறிமுகம் செய்து, ஒட்டுமொத்த ஸ்மார்ட் டிவி சந்தையையும் பரபரப்பிற்கு உள்ளாக்கிய கையோடு, சாம்சங் (Samsung) நிறுவனம் ஆனது தனது 2026 ஓஎல்இடி சீரீஸ் மாடல்களை (2026 OLED TV Models) சிஇஎஸ் 2026 இல் அறிவித்துள்ளது.
இந்த சீரிஸின் கீழ் மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன: S85H, S90H, S95H, மற்றும் முற்றிலும் புதிய S99H மாடல். இந்த புதிய சீரீஸில் உள்ள அனைத்து மாடல்களுமே அப்டேட் செய்யப்பட்டு உள்ளன. மேலும் கடந்த ஆண்டு அறிமுகமான S95F மாடலன்து மாற்றியமைக்கப்பட்டு இந்தாண்டு S99H ஆக டாப்-எண்ட் ஃபிளாக்ஷிப் மாடல் ஆக சேர்க்கப்பட்டுள்ளது.

S99H மாடல் ஆனது இப்போதைக்கு சந்தையில் மிகவும் டிரெண்ட் ஆன ஸ்லிம் மற்றும் பெசல்லெஸ் டிசைன் உடனே முரண்படும் வண்ணம் மெட்டல்-பிரேம் கொண்ட வடிவமைப்பை கொண்டுள்ளது. இது 55-இன்ச், 65-இன்ச், 77-இன்ச் மற்றும் 83-இன்ச் அளவுகளில் கிடைக்கிறது, அனைத்தும் 4கே ரெசல்யூஷன் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வருகின்றன
சிறிய ஸ்க்ரீன் சைஸ்களுக்கு சாம்சங் நிறுவனம் QD-OLED பேனல்களை பயன்படுத்துகிறது, அதே நேரத்தில் 83-இன்ச் வேரியண்ட் ஆனது எல்ஜி டிஸ்ப்ளேவின் டேன்டெம் W-OLED பேனலை பயன்படுத்துகிறது. S95F உடன் ஒப்பிடும்போது S99H மாடல் ஆனது 35% வரை அதிக பிரகாசத்தை வழங்குமென்று சாம்சங் கூறுகிறது. மேலும் இது கிளேர் ஃப்ரீ 3.0 எதிர்ப்பு பிரதிபலிப்பு பூச்சையும் உள்ளடக்கியது மற்றும் வயர்லெஸ் ஒன் கனெக்ட் பாக்ஸை ஆதரிக்கிறது.
S95F மாடலை தொடர்ந்து வரும் S95H ஆனது, அதே ப்ரைட்னஸ் மேம்பாட்டை தக்கவைத்து கொண்டுள்ளது மற்றும் ஃப்ளஷ்-டு-வால் வடிவமைப்பை கொண்டுள்ளது. இது வயர்லெஸ் ஒன் கனெக்ட் பாக்ஸை ஆதரிக்கிறது மற்றும் 48-இன்ச் முதல் 83-இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. சாம்சங் அதன் டூயல்-சப்ளையர் அணுகுமுறையை தொடர்கிறது, அதாவது 48-இன்ச் மற்றும் 83-இன்ச் மாடல்களுக்கு எல்ஜி W-OLED பேனல்களையும் மீதமுள்ளவற்றுக்கு QD-OLED பேனல்களையும் பயன்படுத்துகிறது.
S90H மாடல் ஆனது நடுத்தர அளவிலான பிரிவை இலக்காக கொண்டு 15% ப்ரைட்னஸ் அதிகரிப்பை பெறுகிறது. இது 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கிளேர் ஃப்ரீ 3.0 பூச்சு ஆகியவைகளையும் கொண்டுள்ளது. சாம்சங் இதை 42 இன்ச் முதல் 83 அங்குலங்கள் வரையிலான அளவுகளில் அறிமுகம்ஸ் செய்துள்ளது. மேலும் அளவை பொறுத்து QD-OLED மற்றும் W-OLED பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
S85H ஆனது என்ட்ரி லெவல் OLED மாடலாக செயல்படுகிறது, அனைத்து அளவுகளிலும் LG W-OLED பேனல்களை பயன்படுத்துகிறது மற்றும் 100ஹெர்ட்ஸ் அல்லது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் விகிதங்களை ஆதரிக்கிறது. மேற்கண்ட அனைத்து மாடல்களிலும் சாம்சங்கின் புதிய எக்லிப்ஸ்சா ஆடியோ பார்மெட், HDR10+ அட்வான்ஸ்டு, டால்பி அட்மோஸ், டைஸன் OS 10.0 மற்றும் 7 ஆண்டுகள் வரை ஒடிஏ (OTA) அப்டேட்களுக்கான ஆதரவு உள்ளது.
கேமிங் அம்சங்களில் ஏஐ ஆட்டோ கேம் மோட், ப்ரீசின்க் பிரீமியம், ஜி-சின்க் இணக்கத்தன்மை மற்றும் விஆர்ஆர் ஆகியவைகளை கொண்டுள்ளது. ஸ்மார்ட் அம்சங்களை பொறுத்தவரை அலெக்ஸ்சா (Alexa), ஏர்பிளே 2 (AirPlay 2), மேட்டர் ஹப் (Matter Hub), ஸ்மார்ட் திங்ஸ் (SmartThings) மற்றும் மைக்ரோசாப்ட் கோபைலட் (Microsoft Copilot) ஆகியவற்றை கொண்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் 2026 ஓஎல்இடி சீரீஸின் கீழ் அறிமுகமான S85H, S90H, S95H, மற்றும் S99H ஆகிய 4 மாடல்களின் விலைகளும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதேபோல சாம்சங்கின் 130-இன்ச் மைக்ரோ ஆர்ஜிபி டிவி மாடலின் விலையும் கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இல்லை விவரங்கள் வெளியிடப்படலாம்.


Click it and Unblock the Notifications








