Home
Gadgets

வீட்டுக்கு 2 ஆர்டர்.. ரூ.5,850 ஆஃபரில் சாம்சங் 43 இன்ச் டிவி.. 7 வருட ஓஎஸ்.. 4K அப்ஸ்கேலிங்.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Indian Festival Sale) எனும் சிறப்பு விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் மினி எல்இடி டிவி மாடல்கள் தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் 43 இன்ச் மினி எல்இடி 4கே விஷன் ஏஐ 2026 டிவி (Samsung 43 inch Mini LED 4K Vision AI 2026 TV) மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அமேசான் விற்பனையில் சாம்சங் 43 இன்ச் மினி எல்இடி 4கே விஷன் ஏஐ 2026 டிவி மாடலுக்கு 15 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.33,990 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.4,850 தள்ளுபடி கிடைக்கிறது. இதுபோக ரூ.1,000 கூப்பன் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.5,850 தள்ளுபடி விலைக்கு இந்த சாம்சங் டிவியை வாங்க முடியும்.

வீட்டுக்கு 2 ஆர்டர்.. ரூ.5,850 ஆஃபரில் சாம்சங் 43 இன்ச் டிவி!

சாம்சங் 43 இன்ச் மினி எல்இடி ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Samsung 43 inch Mini LED Smart TV Specifications): 43 இன்ச் மினி எல்இடி டிஸ்பிளே கொண்ட இந்த சாம்சங் 4கே ஸ்மார்ட் டிவியில் (4K Smart TV) மினி எல்இடி ப்ராசஸர் 4கே (Mini LED Processor 4K) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மினி எல்இடி எச்டிஆர் (Mini LED HDR), எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) மற்றும் ப்யூர் ஸ்பெக்ட்ரம் கலர் (Pure Spectrum Color) சப்போர்ட் கிடைக்கிறது.

சிறந்த பிக்சர் குவாலிட்டியை வழங்கும் வகையில் சுப்ரிம் மினி எல்இடி டிம்மிங் (Supreme Mini LED Dimming), கான்ட்ராஸ்ட் என்ஹான்ஸர் (Contrast Enhancer), 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling) மற்றும் கலர் பூஸ்டர் (Color Booster) ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்லிம் லுக் (Slim Look) கொண்ட இந்த சாம்சங் 43 இன்ச் மினி எல்இடி ஸ்மார்ட் டிவி, 4கே டிவி விரும்பும் பயனர்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கும்.

ஆடியோ அம்சங்களை பொறுத்தவரை, இந்த டிவியில் 30W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்கள் உள்ளன. ஆப்ஜெக்ட் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite), கியூ-சிம்பொனி (Q-Symphony) மற்றும் அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) ஆகிய அம்சங்கள் சப்போர்ட் செய்யப்படுகின்றன. இதனால், டிவி பார்க்கும் போது சிறந்த ஆடியோ அனுபவத்தை பெற முடியும்.

சாம்சங் விஷன் ஏஐ மாடலாக கிடைக்கும் இந்த ஸ்மார்ட் டிவியில் விஷன் ஏஐ கம்பானியன் (Vision AI Companion), ஃபுட்பால் மோட் (Football Mode) மற்றும் எண்ட்லெஸ் கன்டென்ட் (Endless Content) ஆகிய அம்சங்கள் உள்ளன. அலெக்சா அசிஸ்டன்ட் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) மூலம் 150+ டிவி சேனல்களை அணுகலாம்.

இதுதவிர, வெப் பிரவுசர் (Web Browser), மொபைல் டு டிவி மிரரிங் (Mobile-to-TV Mirroring), சவுண்ட் மிரரிங் (Sound Mirroring) மற்றும் வயர்லெஸ் டிவி ஆன் (Wireless TV On) ஆகிய அம்சங்களும் கிடைக்கின்றன. ஆப்பிள் ஏர்பிளே (Apple AirPlay), கூகுள் காஸ்ட் (Google Cast) மற்றும் காரோக்கி மைக் (Karaoke Mic) சப்போர்ட் இருப்பதால், மொபைலில் உள்ள கன்டென்ட்களை டிவியில் பயன்படுத்தவும் முடியும்.

கேமிங் விரும்பும் பயனர்களுக்கு ஆட்டோ கேம் மோட், விஆர்ஆர் (VRR) மற்றும் எச்ஜிஐஜி (HGiG) ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, வை-ஃபை 5 (Wi-Fi 5) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) ஆகிய வயர்லெஸ் கனெக்டிவிட்டிகள் உள்ளன. மேலும், எச்டிஎம்ஐ, யூஎஸ்பி மற்றும் ஈதர்நெட் எல்ஏஎன் உள்ளிட்ட போர்ட் கனெக்டிவிட்டிகளும் இந்த சாம்சங் 43 இன்ச் மினி எல்இடி ஸ்மார்ட் டிவியில் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
Samsung 43 inch Mini LED 4K Vision AI 2026 TV Gets Discount on Amazon Great Indian Festival Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X