ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. ரூ.4,750 ஆஃபரில் 43 இன்ச் டிவி.. கியூ-சிம்பொனி.. எச்டிஆர்10பிளஸ்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் டிவி மாடல்களில் கிடைக்கும் டிஸ்பிளே அனுபவம் மற்ற பிராண்ட்களில் எதிர்பார்க்க முடியாது. இதனாலே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் சாம்சங் 43 இன்ச் மினி எல்இடி 4கே சாம்சப் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவியானது கியூ-சிம்பொனி ஆடியோவுடன் வெளியாகியது. இப்போது, தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.
பிளிப்கார்ட் தளத்தில் இந்த சாம்சங் 43 இன்ச் மினி எல்இடி 4கே சாம்சப் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.39,990ஆக இருக்கிறது. இதில் இருந்து ரூ.4,750 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதற்கு எந்த கார்டுகளும் தேவையில்லை. அதேபோல தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளுக்கு ரூ.1,055 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவாக வாங்கலாம்.

சாம்சங் 43 இன்ச் மினி எல்இடி ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Samsung 43 inch Mini LED Smart TV Specifications): 30W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்களை இந்த சாம்சங் 43 இன்ச் மினி எல்இடி ஸ்மார்ட் டிவி கொடுக்கிறது. ஆப்ஜெக்ட் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite), கியூ-சிம்பொனி (Q-Symphony) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) கிடைக்கிறது.
43 இன்ச் மினி எல்இடி டிஸ்பிளே கிடைப்பதால், மினி எல்இடி ப்ராசஸர் 4கே (Mini LED Processor 4K) கிடைக்கிறது. மேலும், மினி எல்இடி எச்டிஆர் (Mini LED HDR) கொண்ட மாடலாக இந்த சாம்சங் 43 இன்ச் மினி எல்இடி 4கே சாம்சப் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது. எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+), ப்யூர் ஸ்பெக்ட்ரம் கலர் (Pure Spectrum Color) சப்போர்ட் கிடைக்கிறது.
மேலும், சுப்ரிம் மினி எல்இடி டிம்மிங் (Supreme Mini LED Dimming), கான்ட்ராஸ்டு என்ஹான்ஸர் (Contrast Enhancer) மற்றும் 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling) கொடுக்கப்பட்டு இருக்கிறது. கலர் பூஸ்டர் (Color Booster) கொடுத்துள்ளது. ஸ்லிம் லுக் (Slim Look) விரும்பும் ஸ்மார்ட் டிவி பிரியர்களுக்கு இந்த சாம்சங் 43 இன்ச் மினி எல்இடி ஸ்மார்ட் டிவி பக்காவாக இருக்கும்.
அலெக்சா அசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கொடுக்கப்பட்டு உள்ளது. சாம்சங் விஷன் ஏஐ மாடலாக இருப்பதால், விஷன் ஏஐ கம்பானியன் (Vision AI Companion), ஃபுட்பால் மோட் (Football Mode) மற்றும் எண்ட்லெஸ் கன்டென்ட் (Endless Content) சப்போர்ட் கிடைக்கிறது. சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
150+ டிவி சேனல்களை அணுகலாம். வெப் பிரவுசர் (Web Browser) மற்றும் மொபைல் டு டிவி மிரரிங் (Mobile-to-TV Mirroring) கிடைக்கிறது. இதுபோக சவுண்ட் மிரரிங் (Sound Mirroring), வயர்லெஸ் டிவி ஆன் (Wireless TV On) மற்றும் ஆப்பிள் ஏர்பிளே (Apple AirPlay) கொடுக்கப்பட்டு இருக்கிறது. காரோக்கி மைக் (Karaoke Mic) மற்றும் கூகுள் காஸ்ட் (Google Cast) கிடைக்கிறது.
மேலும், சாம்சங் 43 இன்ச் மினி எல்இடி ஸ்மார்ட் டிவி ஸ்மார்ட் டிவியில் ஆட்டோ கேம் மோட், விஆர்ஆர் (VRR) மற்றும் எச்ஜிஐஜி (HGiG) கொடுக்கப்பட்டு இருக்கிறது. வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) ஆகிய வயர்லெஸ் கனெக்டிவிட்டிகள் உள்ளன. எச்டிஎம்ஐ, யூஎஸ்பி மற்றும் ஈதர்நெட் எல்ஏஎன் உள்ளிட்ட போர்ட் கனெக்டிவிட்டிகளும் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications