இதுவரை இல்லாத அதிரடி ஆஃபர்.. கியூ-சிம்பொனி ஆடியோ.. கம்மி விலையில் Samsung டிவி.. எந்த மாடல்?
எல்ஜி, சியோமி, பிலிப்ஸ் நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை விட சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் டிவிகளை அறிமுகம் செய்கிறது சாம்சங். எனவே தான் இந்நிறுவனத்தின் டிவிகள் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சாம்சங் நிறுவனத்தின் 43 இன்ச் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைஸன் டிவி 2025 (Samsung 43 inch Smart Tizen TV 2025) மாடலுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.19990 விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் 43 இன்ச் ஸ்மார்ட் டைஸன் டிவி 2025 அம்சங்கள் (Samsung 43 inch Smart Tizen TV 2025 Specifications): ஹைப்பர் ரியல் (Hyper Real) பிராசஸர் உடன் இந்த சாம்சங் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைஸன் டிவி 2025 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதி இந்த டிவியில் உள்ளது. அதேபோல் கேமிங் ஆப்களை இந்த டிவியில் தடையின்றி பயன்படுத்தலாம்.
அதேபோல் ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1080 பிக்சல்ஸ், 50 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ப்யூர்கலர் டெக்னாலஜி, எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
குறிப்பாக டைஸன் ஓஎஸ் (Tizen OS) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சாம்சங் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைஸன் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. எனவே பல்வேறு புதிய அம்சங்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
அதுவும் பில்ட்-ன் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவுடன் இந்த சாம்சங் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக கியூ-சிம்பொனி (Q-Symphony), அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) ஆதரவுகளுடன் 20W ஸ்பீக்கர்கள் உடன் சாம்சங் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி மூலம் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறமுடியும்.

சாம்சங் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைஸன் டிவி 2025 மாடலில் நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, யூடியூப், ஜீ5, ஆப்பிள் டிவி+, சோனி லிவ் உள்ளிட்ட பல்வேறு ஆப்களை பயன்படுத்த முடியும். ஏர்பிளே (AirPlay) சப்போர்ட், ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த சாம்சங் டிவியில் உள்ளன.
மேலும் ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆர்எம் இன் போர்ட், லேன் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட் ஆதரவுகளும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது. இதுதவிர பல சிறப்பான அம்சங்கள் இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








