வெளுத்து கட்டும் விற்பனை.. ரூ.3,650 ஆஃபரில் 43 இன்ச் Samsung டிவி.. Q-சிம்பொனி.. எச்டிஆர் 10+.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடந்துவரும் கோட் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் 55 இன்ச், 43 இன்ச் டிவி மாடல்கள் தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. இதில் சாம்சங் 43 இன்ச் எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி (Samsung 43 inch LED Smart Tizen TV) மாடலும் தள்ளுபடி விலையில் பட்டையை கிளப்பி வருகிறது.
இப்போது, கோட் விற்பனையில் 15 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.23,259 விலைக்கு சாம்சங் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி (Samsung 43 inch Full HD LED Smart Tizen TV) மாடல் கிடைக்கிறது. மேலும், ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,650 தள்ளுபடி மற்றும் மற்ற கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,150 தள்ளுபடி கிடைக்கிறது.

சாம்சங் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி அம்சங்கள் (Samsung 43 inch LED Smart Tizen TV Specifications): ஹைப்பர் ரியல் ப்ராசஸர் (Hyper Real Processor) கொண்ட மாடலாக இந்த சாம்சங் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி இருக்கிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை கொடுத்து இருக்கிறது.
டைசன் டிவி ஓஎஸ் ( Tizen TV OS) கொண்டுள்ளது. நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), ஜீ5 (Zee5) ஆப்பிள் டிவி+ (Apple TV+) மற்றும் சோனிலிவ் (Sony LIV) ஓடிடி ஆப்களை இந்த சாம்சங் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி கொடுத்துள்ளது.
43 இன்ச் புல் எச்டி (1920 x 1080 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளேவை இந்த டிவி கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் 50Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், எச்டிஆர் (HDR), ப்யூர் கலர் (Pure Color), ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite) கொண்ட மாடலாக இந்த சாம்சங் டைசன் டிவி இருக்கிறது.
கியூ-சிம்பொனி (Q-Symphony), அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound), பில்ட்-இன் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Built-in Voice Assistant) கொடுத்துள்ளது. ஆப்பிள் ஏர்பிளே (Apple Airplay) கிடைக்கிறது. ஒன் யுஐ டைசன் (One UI Tizen) சப்போர்ட் இந்த சாம்சங் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவிக்கு கிடைக்கிறது. 20W சவுண்ட் அவுட்புட் கிடைக்கிறது.
இதை 2 ஸ்பீக்கர்கள் வழியாக கொடுக்கிறது. வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சாம்சங் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி 2025 ஆம் ஆண்டு வெளியான மாடலாக இருக்கிறது. UA43F5550FUXXL மாடலின் கீழ் விற்பனைக்கு கிடைக்கிறது. 1 வருட வாரண்டி கொடுக்கப்பட்டு உள்ளது.
வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டிகள் மட்டுமல்லாமல், 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் ( HDMI Ports), எச்டிஎம்ஐ ஈஏஆர்சி (HDMi eARC), 1 யுஸ்பி-ஏ போர்ட் (USB-A Port) கனெக்டிவிட்டிகளையும் இந்த சாம்சங் 43 இன்ச் எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி கொடுக்கிறது. ஈதர்நெட் (Ethernet), ஆர்எப் போர்ட் (RF Port) கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications