ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. ஆஃபரில் 43 இன்ச் Samsung டிவி.. டால்பி ஆடியோ.. Tizen TV ஓஎஸ்.. எந்த மாடல்?
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் டைசன் டிவி ஓஎஸ் மாடல்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. இதில் சாம்சங் 43 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி (Samsung 43 inch Smart Tizen TV) மாடலின் விற்பனை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சாம்சங் க்நாக்ஸ் செக்யூரிட்டி, மல்டிபிள் வாய்ஸ் அசிஸ்டன்ட், ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட், கியூ-சிம்பொனி போன்ற பீச்சர்களை கொண்டுள்ளது. இந்த சாம்சங் 43 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவியின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 18 சதவீத தள்ளுபடி போக 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி 2025 எடிஷன் (Samsung 43 inch Full HD LED Smart Tizen TV 2025 Edition) மாடல் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி போக ரூ.22,490 விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,750 தள்ளுபடியானது கூடுதலாக கிடைக்கிறது.

ஆகவே, ரூ.19,740 விலைக்கு இந்த சாம்சங் 43 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி மாடலை வாங்கி கொள்ள முடியும். யுஏ43எப்5550எப்யூஎக்ஸ்எக்ஸ்எல் (UA43F5550FUXXL) மாடல் மற்றும் 2025 எடிஷனில் கீழ் கிடைக்கிறது. டைசன் டிவி ஓஎஸ் (Tizen TV OS) கொடுத்து உள்ளது. பிளாக் (Black) கலரில் கிடைக்கிறது. 1 வருட வாரண்டியை இந்த சாம்சங் 43 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவிக்கு பெற்று கொள்ளலாம்.
சாம்சங் 43 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி அம்சங்கள் (Samsung 43 inch Smart Tizen TV Specifications): 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி 2025 எடிஷன் மாடல் கொண்டுள்ளது. ஹைப்பர் ரியல் (Hyper Real) ப்ராசஸர் உள்ளது. டைசன் டிவி ஓஎஸ் கிடைப்பதால், எண்ட்லெஸ் கன்டென்ட் சப்போர்ட் கிடைக்கிறது.
ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), ஜீ5 (Zee5), ஆப்பிள் டிவி (Apple TV) மற்றும் சோனிலிவ் (Sony LIV) உள்ளிட்ட ஒட்டுமொத்த ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன. மேலும், மல்டிபிள் வாய்ஸ் அசிஸ்டன்ட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் 43 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி வாங்க கிடைக்கிறது.
அலெக்சா (Alexa) மற்றும் பிக்ஸ்பை (Bixby) வாய்ஸ் அசிஸ்டன்ட்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. டிஸ்பிளேவுக்கான பீச்சர்களை பார்க்கையில், எச்டிஆர் (HDR), ப்யூர்கலர் (PureColor) உள்ளது. ஆடியோவில் ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite) வருகிறது. கியூ-சிம்பொனி (Q-Symphony) கிடைத்துள்ளது. மேலும், அடாப்டிவ் சவுண்ட் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
50 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் புல் எச்டி (Full HD) ரெசொலூஷன் கொண்ட 43 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி 2025 எடிஷன் மாடல் கொடுக்கிறது. 20 W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்கள் கிடைத்துள்ளன. ஒன் யுஐ டைசன் கொடுக்கப்பட்டு உள்ளது.
வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. மேலும், 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), எச்டிஎம்ஐ இஏஆர்சி (HDMi eARC), 1 யுஎஸ்பி-ஏ போர்ட் (USB-A Port), 1 ஈதர்நெட் (Ethernet) போர்ட் மற்றும் 1 ஆர்எப் இன் போர்ட் (RF In Port) ஆகிய கனெக்டிவிட்டிகளையும் இந்த சாம்சங் 43 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி மாடல் கொடுத்து உள்ளது.


Click it and Unblock the Notifications








