Home
Gadgets

கிட்சனுக்கும் சேர்த்து 1 ஆர்டர்.. ரூ.15000 க்கு Samsung ஸ்மார்ட் TV.. 20W Q-சிம்பொனி சவுண்ட்.. எந்த மாடல்?

ஹாலுக்கு ஒரு ஆர்டர், பெட்ரூமுக்கு ஒரு ஆர்டர் என்று மட்டுமில்லாமல் கிட்சனுக்கும் சேர்த்து ஒரு ஆர்டர் போடும் விலையில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி (Samsung Smart TV) ஒன்று, அமேசான் மெகா சேல்-ன் (Amazon Mega Sale) கீழ், தரமான தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

எந்த மாடல்? ரூ.15,000 பட்ஜெட்டில் வாங்க கிடைப்பது, சாம்சங்கின் 32-இன்ச் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 32-inch HD Smart LED TV - UA32H4550FUXXL) மாடல் ஆகும். தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 15% தள்ளுபடியின் கீழ் ரூ.15,190 க்கு வாங்க கிடைக்கிறது.

ரூ.15000 க்கு Samsung ஸ்மார்ட் TV.. 20W Q-சிம்பொனி சவுண்ட்!

இந்த ஸ்மார்ட் டிவியின் எம்ஆர்பி விலை ரூ.17,900 ஆகும்.ஆக 15% தள்ளுபடி என்பது ரூ.2710 விலை குறைப்பை குறிக்கிறது. ஆன்லைன் தளங்களில் பிரதிபலிக்கும் ஆபர் விலை அடிக்கடி மாறும் என்பதால் (சில நேரம் அதிகரிக்கலாம் அல்லது இன்னும் கூட குறையலாம்), உங்களுக்கு எது நல்ல டீல் என்று தெரிகிறதோ அப்போதே அதை லாக் செய்து, ஆர்டர் போட்டு விடவும்.

சாம்சங்கின் 32-இன்ச் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவியின் முக்கிய அம்சங்கள்:
- எச்டி HD (1366 x 768) ரெசல்யூஷன், 50ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 32-இன்ச் எல்இடி டிஸ்பிளே
- ஹைப்பர் ரியல் பிக்சர் எஞ்சின் (Hyper Real Picture Engine)
- எச்டிஆர் (HDR) ஆதரவு
- கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Contrast Enhancer)
- மைக்ரோ டிம்மிங் ப்ரோ (Micro Dimming Pro)

- சக்திவாய்ந்த 20W சவுண்ட் அவுட்புட்
- ஆப்ஜெக்ட் ட்ராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite)
- க்யூ-சிம்பொனி (Q-Symphony)
- அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound)
- வாய்ஸ் அசிஸ்டென்ட் (Voice Assistance) கொண்ட ஸ்மார்ட் ரிமோட்
- அலெக்ஸா, கூகுள் அசிஸ்டென்ட் எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர்களுடன் செயல்படும்
- மொபைல் டூ டிவி மிர்ரரிங் (Mobile-to-TV Mirroring)
- சவுண்ட் மிர்ரரிங் (Sound Mirroring)

- வைஃபை 5, வயர்லெஸ் ஆடியோ டிவைஸ்களுக்கு ப்ளூடூத்
- செட்-டாப்-பாக்ஸ் மற்றும் உயர்தர சவுண்ட் பார்களுக்கு 2 HDMI போர்ட்கள் (HDMI eARC உட்பட)
- மீடியா மற்றும் எக்ஸ்டர்னல் டிவைஸ்களுக்கு USB-A போர்ட்
- ஸ்டேபிள் இண்டர்நெட்டிற்கு ஈதர்நெட் (LAN)
- கேபிள் அல்லது ஆண்டெனா இன்புட்டிற்கு ஆர்எப் இன்
- வாங்கிய தேதியிலிருந்து 1 வருட உற்பத்தியாளர் உத்தரவாதம் மற்றும் பேனலுக்கு (Panel) கூடுதல் 1 வருட உத்தரவாதம்; ரிமோட் கண்ட்ரோலுக்கு 12 மாத உத்தரவாதம்

43-இன்ச் மற்றும் 55-இன்ச் மாடல்கள் வேண்டுமா? அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் அமேசான் மெகா டீல் (Amazon Mega Deal) என்கிற சிறப்பு விற்பனையின் கீழ் சாம்சங் நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி (Samsung 43-inch Smart TV) ஒன்றின் மீது நேரடியாக ரூ.11,000 தள்ளுபடி கிடைக்கிறது.

எந்த மாடல்? ரூ.11,000 தள்ளுபடி உடன் வாங்க கிடைப்பது சாம்சங் 43-இன்ச் கிரிஸ்டல் 4கே விஸ்டா அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 43-inch Crystal 4K Vista Ultra HD Smart LED TV - UA43UE81AFULXL) மாடல் ஆகும்.

அசல் விலை VS ஆபர் விலை: சாம்சங் 43-இன்ச் கிரிஸ்டல் 4கே விஸ்டா அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலின் எம்ஆர்பி ரூ.39,500 ஆகும். ஆனால் அமேசான் இந்தியாவில் தற்போது இது 28% நேரடி தள்ளுபடியின் கீழ் ரூ.28,490 க்கு வாங்க கிடைக்கிறது. இது ரூ.11,000 நேரடி விலைக்குறைப்பை குறிக்கிறது.

சுவாரசியமாக இதே ஸ்மார்ட் டிவி மாடலின் 55-இன்ச் வேரியண்ட்டும் நல்ல ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. ஆக 43-இன்ச் மாடலை விட சற்றே பெரிய மாடலை வாங்க நினைப்பவர்கள் 55-இன்ச் டிவியை கருத்தில் கொள்ளலாம். இது அசல் விலையான ரூ.55,200 க்கு பதிலாக ரூ.40,990 க்கு வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung 32 inch TV With 20W Q Symphony Sound For Just Rs 15000 in Amazon Mega Sale Which Model
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X