55 இன்ச், 75 இன்ச் TV கதை முடிந்தது.. 130 இன்ச் Micro RGB டிவி.. HDR10+ அட்வான்ஸ்டு.. புதிய Samsung டிவி!
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் (Samsung Electronics) நிறுவனத்தின் அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே மாடலான 130 இன்ச் மைக்ரோ ஆர்ஜிபி டிவி (Samsung 130 inch Micro RGB TV) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. உலகிலேயே முதலாவது 130 இன்ச் மைக்ரோ ஆர்ஜிபி டிவி மாடலாகவும் இது இருக்கிறது. இந்த சாம்சங் 130 இன்ச் மைக்ரோ ஆர்ஜிபி டிவியின் விவரங்களை பார்க்கலாம்.
மைக்ரோ ஆர்ஜிபி டிவி மாடல்களில் 130 இன்ச் டிஸ்பிளே கொண்ட முதாவது மாடலை சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஆர்95எச் (R95H) மாடலாக அறிமுகம் செய்துள்ளது. இது மார்கெட்டுக்கு வரவில்லை, சிஇஎஸ் 2026 (CES 2026) என்னும் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப வர்த்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. ஓரிரு மாதங்களில் மார்கெட்டுக்கு கிடைக்க உள்ளது.

அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே, போல்டு டிசைன் கொண்ட மாடலாக இந்த 130 இன்ச் மைக்ரோ ஆர்ஜிபி டிவி கிடைக்க உள்ளதாக சாம்சங் நிறுவனத்தின் விஷூவல் டிஸ்ப்ளே (Visual Display) வணிக செயல் துணை தலைவர் ஹன் லீ தெரிவித்துள்ளார். முக்கிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், விலை குறித்த விவரங்களை சாம்சங் எலக்ஸ்ட்ரானிக்ஸ் உறுதி செய்யவில்லை.
சாம்சங் 130 இன்ச் மைக்ரோ ஆர்ஜிபி டிவி அம்சங்கள் (Samsung 130 inch Micro RGB TV Specifications): மைக்ரோ ஆர்ஜிபி மாடல்களிலேயே என்ஹான்ஸ் மற்றும் அப்கிரேட் செய்யப்பட்ட பீச்சர்களை இந்த சாம்சங் 130 இன்ச் மைக்ரோ ஆர்ஜிபி டிவி கொடுக்க உள்ளது. முந்தைய ஆர்ஜிபி டிவிகளில் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைத்தது. ஆனால், இதில் எச்டிஆர்10பிளஸ் அட்வான்ஸ்டு (HDR10+ ADVANCED) கிடைக்க உள்ளது.
இது அடுத்த ஜெனரேஷன் டெக்னாலஜியாகும். மேலும், ரிஃபைன் கான்ட்ராஸ்ட் (Refine Contrast), விவிட் கலர் என்ஹான்ஸ்மெண்ட், பிரைட் மற்றும் டார்க் சீன்களில் ரியாலிட்டி போகஸ் உள்ளிட்டவைக்காக பிரத்யேக மைக்ரோ ஆர்ஜிபி ஏஐ என்ஜின் ப்ரோ (Micro RGB AI Engine Pro) இந்த சாம்சங் 130 இன்ச் மைக்ரோ ஆர்ஜிபி டிவியில் வருகிறது. மைக்ரோ ஆர்ஜிபி கலர் பூஸ்டர் ப்ரோ (Micro RGB Color Booster Pro) உள்ளது.
மைக்ரோ ஆர்ஜிபி எச்டிஆர் ப்ரோ (Micro RGB HDR Pro) இருக்கிறது. 100 சதவீத டிஸ்பிளே பர்ஃபாமென்ஸ் கொடுக்க மைக்ரோ ஆர்ஜிபி பிரிசிஷியன் கலர் 100 (Micro RGB Precision Color 100) டெக்னாலஜி கிடைக்கிறது. 130 இன்ச் டிஸ்பிளே கிடைக்க உள்ளதால், கண்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க கிளார் ப்ரீ டெக்னாலஜி (Glare Free Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் எந்த லைட்டிங்கிலும் நேச்சுரல் அனுபவம் கிடைக்கும்.
டார்க் மற்றும் பிரைட்னஸ் ரூம்களுக்கு ஏற்ப கிளியர் கலர் மற்றும் கான்ட்ராஸ்ட் அவுட்புட்டை இந்த சாம்சங் 130 இன்ச் மைக்ரோ ஆர்ஜிபி டிவி கொடுக்கும். விஷன் ஏஐ காம்பானியன் (Vision AI Companion) கிடைத்துள்ளது. ஏஐ புட்பால் மோட் ப்ரோ (AI Football Mode Pro), ஏஐ சவுண்ட் கன்ட்ரோலர் ப்ரோ (AI Sound Controller Pro), லைவ் டிரான்ஸ்லேட் (Live Translate), ஜெனரேட்டிவ் வால்பேப்பர் (Generative Wallpaper) இதில் கிடைக்கின்றன.
மைக்ரோசாப்ட் கோபைலட் (Microsoft Copilot) மற்றும் பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) போன்ற ஏஐ மாடல்களும் இந்த சாம்சங் 130 இன்ச் மைக்ரோ ஆர்ஜிபி டிவியில் இன்டிகிரேஷன் செய்யப்பட்டுள்ளது. நெவாடாவின் லாஸ் வேகாஸில் நடைபெறும் சிஇஎஸ் 2026 நிகழ்வின் போது சாம்சங்கின் கண்காட்சி பகுதியில் இந்த 130 இன்ச் மைக்ரோ ஆர்ஜிபி டிவி காட்சிப்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications








