Samsung அறிமுகம் செய்த புதிய 115 இன்ச் டிவி.. என்னென்ன அம்சங்கள்? விலையை சொன்னா நம்புவீங்களா?
சாம்சங் நிறுவனம் உலகின் முதல் 115-இன்ச் மைக்ரோ ஆர்ஜிபி டிவிையை (Samsung 115 inch Micro RGB TV 2025) அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மேம்பட்ட பல புதிய அம்சங்கள் இந்த சாம்சங் டிவியில் உள்ளது. அதுவும் மைக்ரோ-ஸ்கேல் ஆர்ஜிபி எல்இடி பேக்லைட் (RGB LED backlight) அம்சத்தை பயன்படுத்துகிறது இந்த டிவி. மேலும் இது பிரீமியம் டிஸ்பிளே உடன் இந்த டிவி வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். இப்போது இந்த டிவியின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சாம்சங் 115 இன்ச் மைக்ரோ ஆர்ஜிபி டிவி 2025 அம்சங்கள் ( Samsung 115 inch Micro RGB TV 2025 Specifications): சாம்சங் நிறுவனத்தின் புதிய 115-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode)உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அதேபோல் மைக்ரோ ஆர்ஜிபி எச்டிஆர் பிளஸ் பேனல் (Micro RGB HDR+ panel) வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட் டிவி. மேலும் ஆட்டோமேட்டிக் மேக் மோட் (Automatic Game Mode), வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable Refresh Rate), ப்ரீசின்க் பிரீமியம் ப்ரோ (FreeSync Premium Pro) போன்ற தரமான வசதிகளுடன் இந்த புதிய டிவி வெளிவந்துள்ளது.
ஆர்ஜிபி கண்ட்ரோல் மைக்ரோ ஆர்ஜிபி ஏஐ என்ஜின் (Micro RGB AI engine) ஆதரவு கொண்ட பவர்ஃபுல் சிப் இந்த டிவியில் உள்ளது. குறிப்பாக இது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு 4K AI அப்ஸ்கேலிங் ப்ரோ-ஏஐ பிராசஸர் ஆதரவும் இந்த டிவியில் உள்ளது. அதுவும் இந்த பிராசஸர் 128 யுஐ நியூரல் நெட்வொர்க்குகளுடன் மேம்படுத்தி, அதை 4K ரெசல்யூஷன்-க்கு மேம்படுத்துகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த டிவியின் மூலம் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும்.

ஆட்டோ எச்டிஆர் ரீமாஸ்டரிங் ப்ரோ (Auto HDR Remastering Pro), AI உடன் எச்டிஆர் லெவல் பிக்சர் குவாலிட்டி மேம்படுத்தும் வசதிகளும் இந்த டிவியில் உள்ளது. அதேபோல் டைஸன் ஸ்மார்ட் டிவி ஒஎஸ் (Tizen Smart TV OS)மூலம் இந்த 115 இன்ச் ஸ்மார்ட் டிவி இயங்குகிறது. மேலும் சாம்சங் நாக்ஸ் செக்யூரிட்டி (Samsung Knox Security) சப்போர்ட் கொண்டுள்ளது புதிய சாம்சங் டிவி.
சோலார் செல் ரிமோட் கண்ட்ரோல் ஆதரவுடன் 115 இன்ச் சாம்சங் மைக்ரோ ஆர்ஜிபி டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஸ்மார்ட் ஹோம் (Smart Home), ஸ்மார்ட் திங்ஸ் (SmartThings) கண்ட்ரோல் இந்த டிவியில் உள்ளது. இந்த 115 இன்ச் டிவின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

வைஃபை 5 802.11 ஏசி, புளூடூத் 5.3, எச்டிஎம்ஐ போர்ட், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த 115-இன்ச் மைக்ரோ ஆர்ஜிபி டிவியில் உள்ளது. டால்பி அட்மாஸ் (Dolby Atmos), க்யூ-சிம்பொனி (Q-Symphony) உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் கொண்ட 70W ஸ்பீக்கரகள் உடன் இந்த புதிய சாம்சங் டிவி வெளிவந்துள்ளது.
ஆனால் 115 இன்ச் சாம்சங் மைக்ரோ ஆர்ஜிபி டிவி 2025 மாடல் தற்போது கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் இந்த டிவி அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய 115-இன்ச் சாம்சங் டிவியின் விலை USD 32,325 (இந்திய மதிப்பில் ரூ.28,33,690)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








